Wednesday, November 13, 2019

APPAYYA DHEEKSHIDHAR



அப்பய்ய  தீக்ஷிதர்    J K  SIVAN 


                                                       கல்யாண  வைபோகமே. 


அப்பய்ய தீக்ஷிதர் காலத்தில் ரத்னகேட ஸ்ரீநிவாஸ   தீக்ஷிதர் என்ற  ஸ்ரீ காமாக்ஷி தேவி  தாஸர்   ஒரு   மஹாவித்வான்.  அப்போதைய  ராஜா சூரப்பநாயகன்  அரண்மனையில்  ஆஸ்தான வித்வான்.  

அவரை  வாதத்தில் ஜெயிக்க  காஞ்சிபுரத்தில்  சில  காசி நகர  வித்வான்கள் வந்தார்கள்.  நேராக  தீக்ஷிதர் வீட்டுக்கே  விடியற்காலையில் வந்தார்கள். அச்சமயம் வாசலில்  தீக்ஷிதர் மனைவி  வாசலில் கோலம் போட,  ஜலம் தெளித்துக் கொண்டிருந்தாள்.

“ரத்னகேட தீக்ஷிதர் இருக்கிறாரா?” என்று ஸமஸ்க்ரிதத்தில்  ஸ்லோகமாக கேட்கிறார்கள்.
தீக்ஷிதர் மனைவி சளைத்தவள் இல்லை.

 கோமய ஜலத்தினால் வாசல் தெளிக்க ஜலம் எடுக்கும் முறையை அனுசரித்து தாளபத்தமாய் ‘பஞ்சசாமர விருத்தம்’ என்ற விருத்தத்தில் ஜலம் தெளித்துக் கொண்டே அந்த பண்டிதர்களுக்கு சுலோகரூமாய் பதில் கூறினார்.

காசி  வித்வான்கள் அரண்டு மிரண்டு போய்விட்டார்கள்.   தீக்ஷிதரின் மனைவியே  இவ்வளவு பாண்டித்யத்துடன்  ஸாஹித்ய திறமையோடு  ஜொலிக்கிறாளே, தீக்ஷிதர்  எத்தகைய திறமையுடன் இருப்பார். அவரை  சந்தித்து போட்டி போடு அவமானப்படுவது முட்டாள்தனம்  என்று தமக்குள் பேசி  தீர்மானித்து வந்த வழியே  திரும்பிப் போய்விட்டார்கள்.

சந்திரசேகர பூபாலன்   ராஜாவான   போது  அப்பய்ய தீக்ஷிதரின் பிரபலம் அவன் காதுக்கு எட்டியது. தனது ஆஸ்தான வித்வானான ரத்னகேட ஸ்ரீனிவாச  தீக்ஷிதரிடம்  “ உங்களுக்கு  அப்பய்ய தீக்ஷிதர் பற்றி தெரியுமா,  அவர் பாண்டித்யத்தைப் பற்றீக் கேள்விப்பட்டதுண்டா? என்று கேட்டான்.

ரத்னகேடதீக்ஷிதர் திகைத்தார்.  “அரசே!  ஆஹா , நான் அப்பய்ய தீக்ஷிதரின் பால்யத்தில் அவரது அதிகூர்மையான புத்தியை அறிவேன். இப்பொழுது பதினான்கு ஆண்டுகள் ஆனதால் அவர் ஸகல வித்யைகளிலும் நிபுணராக ஆகியிருக்கலாம். சமயம் கிடைத்தால் அவருடன் வாதம் செய்யவும் ஆவலோடு  த வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்''  என  பதில் கூறினார்.

 மஹாராஜா  தீக்ஷிதரை   அப்பய்ய தீக்ஷிதரோடு  ஸாஸ்த்ர  தர்க்க வாதம் செய்ய அனுப்பினான்.  காஞ்சிபுரத்தில் நவராத்திரி வந்தது. காமகோடி ஜகன்மாதாவை சிறப்பாகப் பூஜித்தார். ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் பிரத்யக்ஷமாகி “குழந்தாய், ரத்னகேடா! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று அருளிச்செய்தாள். கண்களில் ஆனந்த பாஷ்யம் பெருக, தன்முன்னே பரமகருணையுடன் பிரத்யக்ஷமான தெய்வத்தை ரத்னகேட தீக்ஷிதர் பல முறை வணங்கினார். உள்ளம் உருக, நாத்தழதழக்க, உடல் புளகாங்கிதமாக தோத்திரங்கள் பல செய்து, “அன்னையே! அடைந்தவர்க்கு வேண்டியவற்றைக் கொடுக்கும் தெய்வமே! அப்பய்ய தீக்ஷிதர் என்றொருவர் ஸகல வித்தைகளிலும் சிறந்தவராமே,  அவரை  நான்  வாதத்தில் ஜெயிக்கவேண்டும்.  அவரை ஜெயித்தவன் என்ற கீர்த்தி எனக்கு உலகத்தில் பெறவேண்டும் தாயே.  இதற்கு நீ அருளவேண்டும் என்று  வேண்டினார் தீக்ஷிதர்.

காமாக்ஷி சிரித்தாள்.

“ரத்னகேடா! நீ போய்  அப்பய்ய தீக்ஷிதரிடம்  வாதம் புரிவது ஏற்கமுடியாதது.   உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன் அதன் படி நட. உனக்கு ஒரு பெண்  இருக்கிறாளே, அழகிய   மங்களாம்பிகை  அவளை  அந்த அப்பய்ய தீக்ஷிதர் என்ற மகானுக்கு கன்யாதானம் செய்து  கல்யாணம் பண்ணி வை.

நீ அவரை ஜெயித்தவனாகிவிடுவாய். அவர் உன் மாப்பிள்ளை. நீ அவருக்கு மாமனார்..
அவர் உன்னை வணங்குவார்.  உனக்கு திருப்தி.  அப்பய்ய  தீக்ஷிதருக்குக் குருவாகவும், மாமனாராகவும் ஆவாய். இது உனக்கு பெருமை அல்லவா?

இங்கே  இவ்விதம்  காமாட்சி அருளும் நேரத்தில் ஏகாம்பர  நாதர் சும்மா இருக்கவில்லை.  அப்பய்ய தீக்ஷிதர் கனவில் வந்தவர்  ''அப்பய்யா!    நீ   உடனே காஞ்சிபுரம் போ.  அங்கே   ஸ்ரீ காமாக்ஷீ  உபாசகர் ரத்னகேட ஸ்ரீனிவாச தீக்ஷிதர் என்பவர்உனக்கு தன்னுடைய புத்ரியை  கன்யா தானம் செயது தர வேண்டிக்கொண்டிருக்கிறார். கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமாக இரு ''


அப்பய்ய  தீக்ஷிதர் ஏகாம்பரநாதன் சொல் தட்டுவாரா?   ஏகாம்பரநாதர் சந்நிதியில்    ரத்னகேடர் தனது மகளோடு  அப்பய்ய தீக்ஷிதரை  சந்திக்கிறார்.  அவர்களை உபசரித்த  அப்பய்யர்  அவர்கள்  முன் நிற்கிறார். 

 “ஹே குழந்தாய்! மங்கள மூர்த்தியே! இன்று பொழுது விடிந்தது ஒரு பாக்யம். காமாக்ஷியின் பதியான ஏகாம்பரநாதருடைய அனுக்கிரஹத்திற்குப் பாத்திரமான உனது தர்சனம் எனக்குப் பரம சந்தோஷத்தைக் கொடுத்தது. என்னுடைய மங்கள வசனத்தை உன் செவிகளில் ஏற்றுக் கொள்வாய்.   ஒரு அற்புத ஸ்லோகம் பிறக்கிறது ரத்னகேட ஸ்ரீனிவாச தீகிஷிதரிடமிருந்து.:

வித்வன் முகாதனுபமாம் தவ கீர்த்திமாராத்
ச்ருத்வா ப்ரஸாத பரிதஸ்ஸமுபாகதோ (அ )ஸ்மி |
விக்ஞானதச்ச வயஸா தபஸா (அ )பிவ்ருத்தோஸ்மி
அவ்யாஹதோத்ததவசா: ப்ரதிதப்ரபாவ: ||

யத்ராஸ்தே சாம்பவீ வித்யா தத்யாத்தஸ்மை சிரோ (அ )ம்புபி: |
இதி ஜாநாஸி கிம் தன்மே வாணீமேகாம் ச்ருணுஸ்வயம் ||
கச்சித்விபச்சிதம்ருதாயிதமஸ்மதுக்தம்
நோல்லங்கயேத்குசலவானதுநா (அ )ஸ்மி வித்வான் |
தன்னஸ்ஸுதாம் ஜடிதி மங்கலநாயகீம் த்வம்
உத்வாஹ்ய பூரி லபஸேஸுககீர்த்திசோபாம் ||
'' அப்பய்யா!    அநேக  வித்வான்கள்  உனது கல்வி ஞானம்,   சிவ பக்தி, பாண்டித்யம் எல்லாம்  பண்டிதர்கள் எங்கும்  சொல்வது கேட்டு ரொம்ப  ஆர்வத்தோடு  உன்னைக் காண  இங்கு வந்தோம். நான் விக்ஞானத்திலும், தவத்திலும், வயஸிலும் மூத்தவன். நான் அறிந்தவை தெரிந்துகொண்டவை, புரிந்துகொண்டவை எல்லாம் உனக்கு சொல்கிறேன்.  காஞ்சிபுரத்தில்  சிவசம்பந்தமான வித்தையும்,  ஞானமும் , சிவபக்தியும்  நிரம்பி இருக்கிறது  என்கிற என் வார்த்தை அம்ருதத்திற்கு   ஈடானது.  பகவான்  அனுகிரஹத்தோடு  எனது குமாரத்தி  மங்களநாயகி என்ற அற்புதமான கன்னியாரத்தினத்தை நீ மணந்து கொண்டு மேலும் கீர்த்தியையும், ஸுகத்தையும் அடைந்து சோபையுடன் பிரகாசிக்க வேண்டுகின்றேன்” என்று ரத்னகேடர்  மேற்கண்ட ஸ்லோகத்தில் கூறுகிறார்.

ரெண்டு  சாஸ்தர  ஸமஸ்க்ரித  பாஷா 
கலா நிபுணர்கள்  ஒன்று சேர்ந்தால்  கவிதைக்கும், ஸ்லோகத்துக்கும் என்ன பஞ்சம்?  ரத்ன கேடர்  என்  பெண்ணை கன்யாதானம்  செய்து தருகிறேன்  என்று சொன்ன சுலோகத்துக்கு  பதிலாக  அப்பய்ய தீக்ஷிதர், 

 “ ஸ்ரீ  பண்டித ரத்தினமே! தாங்கள் யோஜிக்காமல் சொன்ன ஒரு சொல்லுக்காக ஒரு இரவில் காஞ்சி ஜகன்மாதாவின் திருவருளால் உலகம் பூராவும் அமாவாஸை பெளர்ணமி ஆனதை நானறிவேன். எனவே தங்களுடைய மஹிமையையும் அறிந்து, பரமேச்வரனுடைய ஆக்ஞையையும் உணர்ந்து தங்கள் புதல்வியை மணக்க சம்மதத்துடன் வந்துள்ளேன்'' என்கிற  அர்த்தம் தவனிக்க ஒரு ஸ்லோகம் உடனே சொல்கிறார். அது: 

 ஸம்பந்த: கலு ஸாதூநாமுபயோரேவ ஸம்மத: |
சந்த்ரசூடநிதேசேன ஸஜ்ஜா மே பந்துதா (அ )துநா ||
“நமது சம்பந்தமானது சந்திரசூடனான பரமேச்வரனுடைய ஆக்ஞையின் பேரில் ஏற்படுவதால் இருவருக்கும் சம்மதமே ஆகும். நான் ஸன்னத்தமாக இருக்கின்றேன். நல்லதொரு முஹூர்த்தத்தில் தங்களது புதல்வியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள்” என்று கூறினார்.

ஒரு நல்ல நாளில் , நல்ல முகூர்த்தத்தில்  ஏராளமானோர்  பங்கு கொள்ள வசதியாக ஒரு  கல்யாணமண்டபம்  தயாராகி, ஜம்மென்று  வாழை  மாவிலை தோரணங்கள் ,  புஷ்பமாலைகள்   அலங்காரத்தோடு  வேத கோஷங்கள்  மங்கள  வாத்ய சப்தங்களோடு  சர்வாபரண  பூஷிதையாக  ஸர்வ மங்கள சோபிதையோடு   மங்களநாயகியை மணவறையில்  ஸாக்ஷாத் பரமேச்வரனே  வரனாக அமைந்தபடி  அப்பய்ய தீக்ஷிதருக்கு  கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள் .   மாங்கல்ய தாரணம் முடிந்து, அக்னி ப்ரதக்ஷிணாதிகள் சப்தபதி, எல்லாம்   சாஸ்திரப்படி அழகாக நடந்தது.  நல்ல  உணவளித்து பிராமணர்களுக்கு அபரிதமான ஸ்வர்ண தக்ஷிணையும் ரெண்டு தீக்ஷிதர்களும்  தந்தார்கள்.


.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...