கருட புராணம் J K SIVAN
5. ஸ்ரீ ஹரி பரமசிவனுக்கு சொல்வது:
கருடபுராணம் விஸ்தாரமாக மந்த்ர வழிபாடுகளை விளக்குகிறது. ப்ரம்மா சரஸ்வதி, லட்சுமி, வழிபாடுகளைத் தொடர்ந்து விஷ்ணு வை எப்படி மந்த்ரோச்சாடனம் செய்வது என்று சொல்லும்போது விஷ்ணு பஞ்ஜர மந்திரம் சொல்லப்படுகிறது.:
ஸ்ரீ ஹரி, சிவபெருமானிடம் விஷ்ணுவை ஸ்தோத்ரிக்கும் பஞ்ஜர மந்திரம் பற்றி சொல்கிறார்:''பஞ்ஜர மந்திரம் அதி விசேஷமானது. கோவிந்தா உனக்கு நமஸ்காரம். உனது சுதர்சன சக்கரத்தால் என்னை காப்பாற்று.மேற்கிலிருந்து எந்த தீங்கும் என்னை அணுகாதிருக்கட்டும். மகாவிஷ்ணுவே, உன்னை சரணடைந்தேன். உன்னுடைய கதாயுதம் கௌமோதகியை எடுத்துக் கொண்டு தெற்கிலிருந்து எந்த தீங்கும் என்னை அணுகாமல் காப்பாய். புருஷோத்தமா, உன்னுடைய சுனந்தா எனும் ஹலாயுதம் (கலப்பை) என்னை கிழக்கிலிருந்து வரும் எந்த ஆபத்தையும் விலக்கட்டும் . மகாவிஷ்ணுவே, தாமரைக்கண்ணா, உன்னுடைய ஆயுதங்கள் என்னை வடக்கிலிருந்து தீமை எதுவும் வராமல் காக்கட்டும். உன்னுடைய வீர வாள் நந்தகம் , உன்னை சரணடைந்த என்னை காப்பாற்றட்டும். உன்னுடைய சங்காயுதம் பாஞ்சஜன்யம், உன் தாமரை தண்டு, அனுபோதம் என்னை தென்கிழக்கில்
பாதுகாக்கட்டும். சூர்ய, சந்திரர்கள், சந்திரமசு எனும் வாள் என்னை எதுவும் தென்மேற்கில் இருந்து எந்த ஆபத்தும் நெருங்காமல் பார்த்துக் கொள்ளட்டும். நரசிம்மா, வடமேற்கிலிருந்து என்னை எது காப்பாற்றப்போகிறது தெரியுமா, உனது கழுத்தை அலங்கரிக்கும் வைஜயந்தி மாலையும், மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸமும் தான். ஹயக்ரீவா உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.
ஜனார்தனா, மேலே ஆகாயத்தில் இருந்து எந்த தீங்கும் நெருங்காமல், விநதையின் மகன் கருடன் மேல் ஆரோஹணித்து கவனித்துக் கொள். விசாலாக்ஷன் மேல் அமரும் பரந்தாமா, என்னை கீழே பாதாளத்திலிருந்து எந்த தீமையும் நெருங்காமல் அருள் செய்வாய். தெய்வமே, உனது கரத்தில், கை விரல்களில் கொண்டுள்ள வகுபஞ்ஜரம் என்னை கட்டி காக்கட்டும்.
இப்படி விஷ்ணு பஞ்சர ஸ்தோத்ரம் செல்கிறது. இது ஹரியால் சிவனுக்கு சொல்லப்பட்டு அவரால் காத்யாயனிக்கு உரைக்கப்பட்டது. இந்த மந்திர சக்தியால் அவள் மகிஷாசுரனை கொல்கிறாள் . இந்த மந்திரத்தை பக்தியோடு சொல்பவனுக்கு சத்ருக்களால், enemies , எந்த தீங்கும் வராது.
பரமேஸ்வரா இப்போது நான் யோகத்தினால் விளையும் நன்மைகள் பற்றி சொல்கிறேன்
யோகிகள் ஹரியை உபாசித்து த்யானிப்
பதால் தான் பலன் கிடைக்கும் என்கிறார்கள். ஏனென்றால், விஷ்ணு, தேவாதிதேவன், பாபங்களை அகற்றுபவர் முடிவில்லாதவர், உருவமற்றவர், அவரே வாசுதேவன், அவரே ப்ரம்மா, மகேஸ்வரன். பல ரூபங்களில் தன்னை காண்பித்துக் கொள்பவர். உடல்களில் காணப்பட்டாலும் ஜனனம் மரணம் இல்லாதவர். காண்பவர், காண்பவை, கேட்பவர்,கேட்பவை, முகர்பவர், முகர்பவை. ஐம்புலன்களில் கட்டுப்படாதவர் , அப்பாற்பட்டவர், சிருஷ்டி கர்த்தா. மனதில் உறைபவர், எதிலும் பற்றில்லாத சாக்ஷியானவர், , சர்வ வியாபி, உயிருள்ள ஜீவன்களின் புத்தி, மனமானவர். உயிர் சக்தியானவர். இதை தெரிந்துகொண்டு ஸ்ரீ ஹரியை வணங்குபவர்கள் மோக்ஷம் அடைகிறார்கள்.
''ஜனார்தனா, எனக்கு எந்த பரமாத்மாவை ஸ்தோத்தரித்தால் சம்சார சாகரத்தை கடக்க இயலும் என்பதை விவரிக்கவேண்டும் '' என்று ' ருத்ரன் கேட்கிறார்.......
No comments:
Post a Comment