லோக ரக்ஷகா , சத் சிதானந்தமே, பரமாத்மா, கோவிந்தா, பீமா நதிக்கரையில் உறையும் பாண்டுரங்கா, புண்டலீகனுக்கு வாக்களித்து, இடுப்பில் கைவைத்த வாறு பக்தர்களுக்கு அருள்புரிய காத்திருப்பவனே, யாதவ குலதிலகா , கொடிய பாதகர்களுக்கும் அருளும் காருண்ய மூர்த்தியே, கஜேந்திரனை காத்து மோக்ஷமளித்தவனே, முதலை உன்னை நினைக்கவில்லை என்றாலும் அதற்கு உன் சக்ராயுதம் அல்லவோ மோக்ஷம் அளித்தது.
ஆம். கஜேந்திரன் மோக்ஷம் அடைய செல்லும்போது முதலை சிரித்தது
''முதலையே , நீ எதற்காக சிரிக்கிறாய்? என்ன வேடிக்கை இங்கே நடக்கிறது? என்றார் நாராயணன்.
''வேடிக்கையை நானே சொல்லவேண்டுமா. கேள் சொல்கிறேன். நீ பரந்தாமன் பக்தர்களை காப்பவன் என்று புகழ்ந்தாலும் உன்னை எல்லோரும் பாபிகளையும் ரக்ஷிப்பவர் என்று சொல்கிறார்களே. அந்த பேர் உனக்கு தகுமா என்று யோசித்தேன். சிரிப்பு வந்தது''
நாராயணன் புரிந்து கொண்டார். ''ஓஹோ கஜேந்திரனுக்கு மட்டும் மோக்ஷம் கிடைக்கிறது. விண்ணுலகிற்கு ஒளி மிகுந்த தேரில் செல்கிறானே என்று பார்க்கிறாயா? உனக்கும் அதில் இடம் உண்டு என்பதை நீ அறியவில்லை'' என்று சொல்லிவிட்டு அந்த தேரில் முதலைக்கும் மோக்ஷம் செல்ல இடமளித்தார் நாராயணன். பக்தர்கள் பக்தி இல்லாதவர்கள் எவருக்குமே மோக்ஷம் தருபவன் நாராயணன்.
என் கிருஷ்ணா, ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலும் கூட உன் பெருமையை சொல்லி மாளாது. ஒன்று நிச்சயம். விண்ணுலக இந்திராதி தேவர்களுக்கு கூட பூமியில் மானிடனாக அவதரித்து, நீ ராமனாக, கிருஷ்ணனாக, உன் பக்தர்களுக்கு அருள் புரிந்த தேனை விட இனிய அனுபவம் கிடைக்கவில்லை. இனி வாய்ப்பும் இல்லை.
நீ தாயைவிட அன்பில் உயர்ந்தவன். இடுப்பில் அமர்த்தி, மேலே சந்திரனைக் காட்டி தாய் உணவு ஊட்டுவதை விட அதி நேசமாக பக்தர்களுக்கு உதவுபவன். பக்த விஜயத்தில் அப்பப்பா, உன் பக்தர்களுக்கு நீ செய்த சேவையின் இனிமை யார் அறிவார்?
உன் பக்தர்களுக்கு மித மிஞ்சிய அம்ருதத்தை ஊட்டுபவன். அந்த எச்சில் ஏதாவது இருந்தால் அதை அளித்தால் என் ஜென்மம் சாபல்யம் அடையும்.
இதெல்லாம் சொல்பவர் மஹிபதி என்ற மராத்தி கிருஷ்ண பக்தர். பக்த விஜயம் எழுதியவர். 200 வருஷங்களுக்கு முந்தியவர். அவரது பக்த விஜயத்தில் இருந்து தான் ''தெவிட்டாத விட்டலா''என்று தமிழில் 100 பாண்டுரங்கன், விட்டலன் கதைகள், மற்றும் ஆங்கிலத்தில் ''VITOBA THE NECTAR '' என்று ஆங்கிலத்தில் 100 விடோபா கதைகளும் எழுதினேன் உங்களுக்கு இப் புத்தகங்கள் வேண்டுவோர் என்னை அணுகலாம். 9840279080 WHATSAPP
கலியுகத்திலும் சிறந்த கிருஷ்ண பக்தர்கள் விஸ்வாசிகள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். உன் பக்தர்கள் எங்கெங்கோ என்னென்ன பெயரிலோ, வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள்.
ஒரு முறை உத்தவர், அக்ரூரர், வால்மீகி, துருவன், பிரஹலாதன், சுகர் ஆகிய மஹரிஷிகள் மஹான்கள், கிருஷ்ணனை தரிசித்து வணங்கினார்கள்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணன் வால்மீகியை பார்த்து ''இந்த கலியுகத்தில் நீ மனிதனாக அவதரித்து விஷ்ணு நாம மஹிமையை பரப்பி பாபங்கள் குறைய மக்கள் பக்தியோடு வாழ வழி வகுக்க வேண்டும். ராமாயணம் என்று நீ இயற்றி என்னை பாடி என் துஷ்ட சம்ஹார, சிஷ்ட பரிபாலன சேவையை எடுத்து சொல். பக்தியை எங்கும் பரப்பு.'' என்றதும் வால்மீகிக்கு பரமானந்தம். தன்னை பகவான் கிருஷ்ணன் தேர்ந்தெடுத்திருக்கிறாரே! .
பாரதத்தின் வட பகுதி ஹஸ்தினாபுரம் என்கிற ஊரில் (சென்னையில் பல்லாவரத்துக்கு அருகே அல்ல ) ஒரு கனோஜ் பிராமணன் வீட்டில் ரிஷி வால்மீகி பிறந்தார். ஆத்மாராம் என்று பெயர் கொண்ட பிராமணர் அந்த வீட்டின் தலைவர். நியம நிஷ்டைகளோடு ஆச்சார ஸ்ரேஷ்டன். அக்பர் காலத்தில் இது நடந்தது. ஹிந்து சனாதன தர்மம் முகலாய ஆட்சியில் துன்பத்தை அனுபவித்த நேரம். அக்பரின் அரசவையில் ஆத்மாராமுக்கு உத்யோகம். வேலையில் கெட்டிக்காரராக விளங்கி அக்பரின் நன் மதிப்பை பெற்றார்.
ஆத்மா ராம் வீட்டில் தான் அந்த குழந்தை பிறந்தது , குழந்தைக்கு துளசி தாஸ் என்று ஆத்மா ராம் பெயர் வைத்தார். வளர்ந்து உபநயனமும் நடந்தது. வேதம் எல்லாம் கற்றார். பதினாறு வயதில் அவர் பெற்றோர்கள் தேவி மம்தா என்ற ஒரு அழகான பெண்ணை கல்யாணம் செய்து வைத்தார்கள்.
துளசி தாசர் ஒரு நிமிஷம் கூட அந்த அழகிய பெண்ணை விட்டு அகலவில்லை. அவள் மீது அத்தனை மோகம்.
அக்பர் ஒருநாள் என்னோடு வா என்று துளசி தாஸை எங்கோ ஒரு ஊருக்கு கூடவே கூட்டிக்கொண்டு போனார்
அப்போது துளசி தாஸ் வீட்டில் ஒரு சம்பவம் நடந்தது....
No comments:
Post a Comment