Wednesday, November 6, 2019

THIRUKKOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்  J K  SIVAN 


                                              4.  தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

ஸ்ரீ ராமாநுஜரின் கேள்விக்கு பதிலாக   தான்  எதற்காக  புண்ய க்ஷேத்ரமான  திருக்கோளூரில் வாழ தகுதியற்றவள்  என்பதற்கு சான்றாக  தான் இப்படியெல்லாம் செய்யவில்லையே என்று அந்த ஊர் பெண் ஒருத்தி,  கூறும் நான்காவது உதாரணம்:

சீதை மனது வைத்திருந்தால்  ஒரு சிறு  துரும்பாலேயே  பத்து தலை ராவணனை நொடியில் கொன்றிருக்க முடியும். சர்வ சக்தி வாய்ந்தவள் மஹாலக்ஷ்மி அவதாரமான  சீதை.  இருந்தும்  தனது கணவனின் அவதார காரியத்தில் தான்  குறுக்கீடாக கூடாது என்று அமைதி காத்தவள் .

பதினான்கு ஆண்டுகள் வன வாச கஷ்டங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்ட  ஜனக மகாராஜாவின் புத்ரி.   ஹனுமானின் வாலில் ராவணனின் வீரர்கள்  தீ வைத்தபோது அது ஹனுமனை சுடாமல் தடுத்த சீதைக்கு லங்கையையே தனது கற்புத்தீயால் அழித்த எவ்வளவு நேரமாகும்?  அவளது ராமபக்தி ஒன்றே போதுமே  ராவணனை சாம்பலாக்குவதற்கு.
ராவணனுக்கு  அறிவுரை வழங்கி ராமனை சரணடைய சொன்னாள் . அவன் கேட்கவில்லை. தனது அழிவை தேடிக்கொண்டான்.

செல்வத்திற்கே அதிபதியான  மஹாலக்ஷ்மி அவளிடம் போய்  முட்டாள் ராவணன் தனது செல்வத்தை பற்றி பேட்ரிக் கொண்டான். குபேரனுக்கு இணையான தனது செல்வத்தை பட்டியலிடுகிறான்.  அப்படியாவது தனது செல்வச் செருக்கை  காட்டி அவளை அடைய  உத்தேசம். அவனையும் அவன் செல்வத்தையும் ஒரு தூசியாக மதித்த சீதை  வனவாச தனிமை கஷ்டங்களை மேற்கொண்டு ராமத்யானத்தில் இருந்தவள். ராவணனுக்கு அவளிடம் படு தோல்வி. செற்றேனோ என்றால் கொன்றேனோ என்று பொருள்.  ராவணனை கொல்வதை  ராமனுக்கு  விட்டு விட்டு, அவன்  அகந்தையை கொன்றவள்  சீதை.  

 திருக்கோளூர் அம்மாள், "என்னால்  சீதையைப் போல் அனைத்தையும்  ஆண்டவன்  பொறுப்பில் விட்டு விட்டு, அவனையே ஒவ்வொரு கணமும்  த்யானம் செயது கொண்டு வாழமுடியுமா?, பாபி நான் எவ்வாறு திருக்கோளூரில் வாஷிங் அருகதை உள்ளவள்? என்று பதில் சொல்கிறாள் . எப்படி அவள் சிந்தனை?  கடகடவென்று இதுபோல் இன்னும் 77 பேரை உதாரணம் காட்டப்போகிறாளே!

    

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...