Saturday, November 9, 2019

VISHNU SAHASRANAMAM

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்   J K  SIVAN 


                                                                  
       ஆயிர  நாமன்   (45  முதல்  60  நாமங்கள் வரை)


விஷ்ணுவைப் போலவே  அவரது  நாமங்களை  சுவையானவை  நன்மை பயக்க கூடியவை.  எளிதில் புரியக்கூடியவை.

'6. . அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு: |
      விஸ்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ: ||

 46 அப்ரமேயா:   ஈடிணையற்றவன். அளவற்றவன், அளக்க முடியாதவன், நமது அறிவுக்கு எட்டாதவன்,

47 ஹ்ரிஷிகேசன்:  புலன்களை ஆள்பவன்.தேவாதி தேவன்
48.பத்மநாபன்: அழகிய பொன்னிற  உந்தியை உடையவன். உதரன்

49.அமர பிரபு: நிரந்தரமான சாஸ்வதர். விஸ்வ ரக்ஷகர்.   தேவாதி தேவன்

50.விஸ்வகர்மா: பிரபஞ்ச காரணர்.  அகில லோக ஸ்ரிஷ்டிகர்த்தா.

51.மனு: ஆதிகாரணன்.  வேத சாஸ்த்ர மந்த்ரங்கள் உருவாக்கியவர். வேத மந்த்ர காரணர்
52. த்வஷ்டா: . எப்படி எண்ணற்ற அலைகள் சமுத்ரமோ, அப்படி சகல ஜீவராசிகளும் விஷ்ணு அம்சம். சதானந்தன். ப்ரத்யக்ஷமானதை பார்க்கிறோம். சூக்ஷ்மமானதை அனுமானிக்கிறோம். சிலவற்றை விவரித்தால்  புரிந்து கொள்கிறோம். விஷ்ணு விவரிக்கமுடியாவர். தானே அனுபவித்து அறிந்து கொள்ள முடிபவர்.

53. ஸ்தவிஷ்டா : பிரபஞ்ச ரூபன். விராட் ஸ்வரூபி. உருவங்களை சங்கல்பித்துக் கொள்பவர்.
54. ஸ்தவிரோத்ருவ : புராதன, அசைவற்ற ஸாஸ்வதன்
7. 'அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தந: 
   |ப்ரபூதஸ் த்ரிககுப்தாம  பவித்ரம் மங்களம் பரம் ||
55. அக்ராஹ்ய:  ஐம்புலன்களால் எளிதில் கிரஹிக்கமுடியாத வஸ்துவானவன் விஷ்ணு.  சத்யன். புலன்கள் அறிய முடியாதவன். மனதில் எண்ணமானவன். சித்தத்தில் குடிகொண்டவன்

56. ஸாஸ்வதா : நிரந்தரன். அழிவற்றவன். மாற்றமில்லாதவன். என்றும் நிலையானவன். வார்த்தைகளால் விவரிக்க முடியாதவன். நிரந்தரமானவன்.
57. கிருஷ்ணன்:  இருட்டில் எப்படி உருவம் காண முடியாதோ  ,அதுபோல் ஆழம் காணமுடியாத, அப்பழுக்கில்லாத உண்மை யின் உருவை ''இருட்டு, கருப்பு '' என்ற அர்த்தம் த்வனிக்கும்  '' கிருஷ்ணன்'' என்ற பெயர் கொண்டவன் விஷ்ணு. க்ரிஷ் என்றால் சதா ,  ''ண'' என்றால் ஆனந்தத்தை குறிக்கும்

சதானந்தன் எப்போதும் ஆனந்த மயமானவன். கரு நீலன் என்றும் அர்த்தம்.  கிருஷ்ணன் என்றால் ''ஆகர்ஷிப்பவன்'' என்றும் பொருள் உண்டு. காந்தம் மாதிரி அவன். கவர்பவன்.

 58. லோஹிதாக்ஷ:  அவன் செங்கண்மால். சிவந்த கண் கோபத்தை குறிக்கும். அதர்மத்தை, அக்கிரமத்தை கொடுமையை அழிக்க கோபம் கொண்டவன்.

 59. ப்ரதர்தனன் :''தர்தனன்'' என்றால் சம்ஹரிப்பவன். ''ப்ர'' சேரும்போது ''அடியோடு,  நிர்மூலமாக''  ராக்ஷஸர்
    களை,கொடியவர்களை வதம் செய்பவன் என்று ஆகும். பிரளயத்தில் ருத்ரன்.

60. ப்ரபூதாஸ் :  முழுமையானவன்.  நினைத்த உருவில் தோன்றுபவன்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...