நான் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் நிறுவனத்துக்கு ரொம்ப கடன் பட்டிருக்கிறேன். எவ்வளவு அருமையான நண்பர்களை எனக்கு கொடுத்திருக்
கிறது. உலகமுழுதும் எவ்வளவோ பேரை நான் தெரிந்து கொண்டிருப் பேனா, சிலரை நேரில் நங்கநல்லூரில் சந்தித்திருப்பேனா, நண்பர்கள் அத்தனைபேரின் அன்பைப் பெற்றி ருப்பேனா? கிருஷ்ணன் சாமர்த்தியக் காரன்.
இன்று நமது சத் சங்கத்தில் ரெண்டு விஷயம் பேசுவோம்.
1. குழந்தைகளுக்கு பொய் பேச சொல்லித்தரவோ, அவர்கள் பொய் பேசினால் ஆதரிப்பதோ வேண்டாம். விளையாட்டுக்கும் அது வேண்டாம். அதே போல் பயம் துளியும் குழந்தைகளுக்கு இருக்க கூடாது. தைரியமாக இருக்க பழக்கவேண்டும். தப்பு செய்தால் ஆம் நான் தப்பு செய்துவிட்டேன். அது எனது தவறு தான் என்று ஒப்புக்கொள்வதில் தான் பெருமை. இதை நிறைய பல புத்தகங்களில் சிலர் பேச்சுக்களில் கேட்கிறோம். ஒரு காது வழியாக நுழைந்து மறு காது வழியாக வெளியே அதே நிமிஷம் போய்விடுகிறது. ஏனென்றால் நாம் பலபேர் இன்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பொய் பேசுகிறோம். குழந்தைகளுக்கு எப்படி நம்மால் இதை செய்யாதே என்று சொல்ல முடியும்? நாமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவோம். அவர்களையும் மாற்றுவோம்.
2. வீட்டில் சுற்றி மண் கொஞ்சம் இருந்தால் சிறு சிறு செடிகளை வளர்ப்போம். மிளகாய், வெற்றிலை, கொத்தமல்லி, கீரைகள், வெண்டை கத்திரி புடலை பாகற்காய், பூச்செடிகள், எல்லாம் சுலபமாக டப்பாவில் கூட வளரும். மொட்டை மாடி காம்பௌண்ட் சுவர் தோட்டம் பல பேர் வீட்டில் உண்டு. தினமும் அவற்றை காலையில் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி சொல்ல முடியாது. அவற்றிற்கு தினமும் தண்ணீர் விடவேண்டும். குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வரும். அவர்களை விட்டே தண்ணீர் விட வைக்கவேண்டும்.
பிற உயிர்களிடம் அன்பு மலர இது அடிப்படை பயிற்சி.
மற்றவை நாளைக்கு ஜே கே சிவன்
No comments:
Post a Comment