ஹயக்ரீவர், ஹயவதனர் என்ற இரு பெயர்களும் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஒரு அவதாரத்தை குறிக்கும் பெயர்கள். ஹய என்றால் குதிரை, வதனம் என்றால் முகம், க்ரீவ என்றால் கழுத்து. ஆகவே குதிரை முகம், குதிரைத்தலை ( HAYASIRSA , ஹய சிரசு )கழுத்து வரை உள்ள பெருமாள் நரசிங்கம் போல பத்து அவதாரங்களில் ஒன்ராக இல்லாவிட்டாலும் எல்லோருக்கும் தெரிந்தது. கல்விக்கு அதிபதி. குழந்தைகள் படித்து நல்ல மார்க் வாங்க பேனா பென்சில், நோட்டுகள், எடுத்துச் செல்லும் இடம் நங்கநல்லூரில் லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம், செட்டி புண்யத்தில், வண்டலூர் அருகே இருக்கும் ஹயக்ரீவர் ஆலயம், கடலூர் அருகே உள்ள திருவஹீந்திரபுரத்தில் (இப்போது திருவந்திபுரம்) உள்ள ஹயக்ரீவர் ஆலயம் ஆகிய இடங்களுக்கு என்பதும் தெரியும் அல்லவா.
திருவந்திபுரத்தில் இருப்பவர் லட்சுமி சமேத யோக ஹயக்ரீவர். இதே உருவத்தில் தான் மைசூரில் பரகால மடத்தில் அருள் பாலிக்கிறார்.
Na HayagrivAth Param Asthi MangaLam
Na HayagrivAth Param Asthi Paavanam
Na HayagrivAth Param Asthi Dhaivatham
Na Hayagrivam Pranipathya Seedhathi!
ஹயக்ரீவரை விட பெரிய புனிதம் இல்லை. நமது காலம் காலமாக சேர்ந்த பாபங்களை அழிக்க ஸ்ரீ ஹயக்ரீவரை விட உயர்ந்த ஸ்ரேஷ்டமான சக்தி இல்லை. ஹயக்ரீவர் முதன்மையானவர். ஹயக்ரீவர் திருவடிகளை சரணடைந்தவன் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைகிறான்.
வெள்ளை ஆடை உடுத்து, வெள்ளை கமலத்தில் வீற்றிருப்பவர். சரஸ்வதி எனும் கல்விக்கடவுளும் வெள்ளைத்தாமரை பூவிலிருப்பவள், அல்லவா. ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பானது ஹயக்ரீவர் வழிபாடு. ஸ்ரீ வைஷ்ணவர்கள் வைகானச உபாசனையில் ஹயக்ரீவருக்கு முக்கிய ஸ்தானம் உண்டு. மத்வர்களுக்கும் ஹயக்ரீவர் முக்கியமான தெய்வம்.
பாஞ்சராத்ர ஆகமத்தில் எல்லோரும் அறிந்த ஒரு ஸ்லோகம், ஹயக்ரீவ ஸ்தோத்ரமாக, ஸ்ரீ வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்டது இது:
ज्ञानानन्दमयं देवं निर्मलस्फटिकाकृतिं आधारं सर्वविद्यानां हयग्रीवं उपास्महे
jñānānandamayaṃ devaṃ nirmalasphaṭikākṛtiṃ ādhāraṃ sarvavidyānāṃ hayagrīvaṃ upāsmahe
நான்கு ஹஸ்தங்கள். பளிங்குமாதிரி நிறம், அழகு, புத்திகூர்மை, வாக் தேவர். என்மீது கருணை கொண்டு இந்த இதயத்தில் வாசம் கொண்டு நாக்கு அருளட்டும் என்று
ஹயக்ரீவர் மரீசி சமேதர் என்று வணங்கப்படுபவர். மரீசி உதயமாகும் சூரிய தேவி. வெள்ளை அஸ்வமாக சூரியனை தினமும் வேகமாக இழுத்துச் செல்பவர் ஹயக்ரீவர் என்று சொல்வதுண்டு. அதிக சக்தி உண்டு என்பதால் வேலைக்காரர்களும் ஹார்ஸ் பவர் (HORSE POWER ) என்று சக்தியை கணக்கிட்டார்கள்.ஹயக்ரீவர் தேரை ஆயிரம் அதிவேக குதிரைகள் இழுத்துச் செல்லுமாம்.
ஹயக்ரீவர் வேதத்தின் உரு, உடல் எல்லா தெய்வங்களின் மொத்தம்.நடு பாகம் சிவன். ஹ்ருதயம் ப்ரம்மா பூமி தான் நெற்றி. கங்கை சரஸ்வதி ரெண்டு புருவங்கள். சந்தியாதேவதை நாசி துவாரம். பித்ரு தேவதைகள் பற்கள். உதடுகள் கோலோகம், ப்ரம்ம லோகம். சூர்யனின் காலராத்ரி கழுத்து. கதிர்கள் பிடரி. சூர்ய சந்திரர்கள் கண்கள். வசுக்கள் சாத்யா க்கள் கால்கள். நாக்கு அக்னி. வாக்கு சத்யம். வருணனும் மருத்துக்களும் கால் முட்டிகள். இந்த சக்தி போதாதா அசுரர்களை அழிக்க?
அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர். வலது கரம் அபயஹஸ்தம். அதில் அக்ஷமாலா. வ்யாக்யா முத்திரை. இடதுகரத்தில் புஸ்தகம்.
திருவந்திபுரத்தில் இருப்பவர் லட்சுமி சமேத யோக ஹயக்ரீவர். இதே உருவத்தில் தான் மைசூரில் பரகால மடத்தில் அருள் பாலிக்கிறார்.
மது கைடப ராக்ஷஸர்கள் ப்ரம்மாவிடமிருந்து நான்கு வேதங்களை கவர்ந்து ரஸாதலத்தில் ஒளித்து வைத்தபோது ஸ்ரீ மஹா விஷ்ணு ஹயக்ரீவராக வேகமாக அங்கே சென்று அந்த ரெண்டு ராக்ஷஸர்களை கொன்று, அவர்கள் உடல் 12 துண்டுகளாகிறது. ரெண்டு தலை, ரெண்டு ஜோடி சதுர்புஜங்கள், நான்கு கால்கள் என்று . ஹயக்ரீவர் அவதாரத்தை தொடர்ந்து தான் மஹாவிஷ்ணு மத்ஸ்யாவதாரமாக தோன்றி வேதங்களை மீட்கிறார்.
ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் ஆலயத்தில் ஹயக்ரீவர் உண்டு. கல்விகற்கும் மாணவ மாணவியர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
Na HayagrivAth Param Asthi MangaLam
Na HayagrivAth Param Asthi Paavanam
Na HayagrivAth Param Asthi Dhaivatham
Na Hayagrivam Pranipathya Seedhathi!
ஹயக்ரீவரை விட பெரிய புனிதம் இல்லை. நமது காலம் காலமாக சேர்ந்த பாபங்களை அழிக்க ஸ்ரீ ஹயக்ரீவரை விட உயர்ந்த ஸ்ரேஷ்டமான சக்தி இல்லை. ஹயக்ரீவர் முதன்மையானவர். ஹயக்ரீவர் திருவடிகளை சரணடைந்தவன் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைகிறான்.
பாகவதத்தில், அக்ரூரர் யமுனையில் ஸ்னானம் செய்யும் முன் பிரார்த்திக்கும்போது ஹயக்ரீவர் தரிசனம் பெற்றார் என்று வருகிறது.
ஐநூறு வருஷங்களுக்கு முன் ஒரு தைவஞ குல பிராமணர் விக்னேஸ்வரர் விக்ரஹம் செய்தார். அது ஹயக்ரீவர் உருவமாக முடிந்தது. இது ஸார்வபௌம வாதிராஜ குரு சுவாமி கனவில் தோன்றி. அவர் அந்த பிராமணரை தேடி நடக்கிறார். அந்த விகிரஹத்தை அந்த ப்ராமணரிடமிருந்து பெற்று, ஸ்ரீ சோடே ஸ்ரீ வாதிராஜ தீர்த்த குரு சுவாமி மடத்தில் ஸ்தாபிக்கப்பட்டு தைவஞ குல பிராமணர்களின் வழிபாட்டில் இன்றும் இருக்கிறதாம். இன்னொரு விசேஷ செயதி. குதிரை ஆகாரமான கொள்ளும் ஒரு நைவேத்தியம்.
No comments:
Post a Comment