விஷ்ணு ஸஹஸ்ரநாமம் J K SIVAN
ஆயிர நாமன் - (61 - 75)
இது வரை மஹா விஷ்ணுவின் 60 நாமங்களை தெரிந்துகொண்ட நாம் எத்தனைபேர் இதை மனப்பாடம் செய்கிறோம்.
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லாவிட்டால் சாதம் கிடையாது என்று அம்மாக்கள் அந்தக் காலத்தில் ஸ்ட்ரிக்ட் ஆக இருந்தார்கள்.
அம்மா சமைத்துக்கொண்டே, அப்பா தலைப்பாகை கட்டிக்கொண்டோ, டிபன் பாக்ஸ் பை , எடுத்துக்கொண்டு சூளைமேட்டிலிருந்து நுங்கம்பாக்கத் துக்கு நடந்து போகும்போதோ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லி கொண்டிருப் பதை நான் பார்த்திருக்கிறேன்.
இன்று இன்னும் 15 நாமங்கள்.
61.த்ரிக குப் தாமன்: சர்வ சக்திமான். தர்மத்தின் ஆதாரமானவன்.
முக்குணங்களின் உருவம்.
62.பவித்ரம்: பரிசுத்த இதயன்.
63.மங்களம் பரம்: மங்கள ஸ்வரூபன்.
8.'ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி : |ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: ||
64.ஈசான : பஞ்ச பூதங்களை அடக்கி ஆள்பவன்.பரம ஈஸ்வரன்.
65.பிராணத :சகல ஜீவனுக்கும் ப்ராணனானவன்.
66. பிராண: பிராணனை அவன் அளிப்பதால்அனைத்தும் பிராணிகள். அவனே ஜீவ சக்தி .
67.ஜ்யேஷ்டா: அவனே மூத்தவன்.முதல்வன். உலகவாழ் ஜீவன்களின் தலைவன்.
68. ஸ்ஷ்ரேஷ்டா: புனிதமானவன். மிக உயர்ந்தவன்.
69.பிரஜாபதி: பிரபஞ்சத்தில் உருவானஅனைத்திலும் உள்நின்று அருள்பவன்.
70. ஹிரண்யகர்பன்: பூமியே கர்ப்பத்தில்உருவானவன்.
71.பூகர்பன்: மஹாலக்ஷ்மி மணாளன்.
72. மாதவன். மது கைடபர்களைவதம் செய்தவன்.
73.மதுஸூதனன்:பிரபஞ்ச காரணனாக இருக்கும்போது அதை தடைசெய்த மதுகைடபர்க ள் எனும் அரக்கர்களை சம்ஹாரம் செய்தவர். இவ்விடத்தில் பூர்வஜென்ம கர்ம வினைகள். வாசனைகள் தான் அரக்கர்கள்.
9. ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |அநுத்தமோதுராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவாந்||
74.ஈஸ்வரோ: சர்வ வியாபி விஷ்ணு, . பிரபஞ்சத்தைகட்டுப்பாட்டில் கொண்டவர். சர்வ சக்தி ஸ்வரூபம்
75.விக்ரமீ : தைர்யவான்
No comments:
Post a Comment