Sunday, November 3, 2019

AAYIRAM NAMAN


ஐந்தாம் வேதம் J K SIVAN விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

ஆயிரம் நாம த்யானம். ‘’விஸ்வம் என்று சொல்லும்போது அது, இங்கே மனம் வாக்கு காயம் புத்தி ஆகியவற்றின் உணர்வுகளின் சேர்க்கையை விஸ்வம் (அகிலம்) என குறிப்பிடுகிறது. இவற்றை தன்னடக்கத்தில் வைத்து ஆளுபவன் விஸ்வரூபன். ‘’ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தே ஸஹஸ்ரநாம ஜபே விநியோக: | ‘
’மஹாவிஷ்ணுவை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை ஆயிர நாம ஜபம் ஆரம்பிப்போம். ‘ த்யாநம் ‘’க்ஷீரோதந்வத் ப்ரதேஸே ஸுசிமணி விலஸத் ஸைகதே மௌக் திகாநாம் மாலா க்லுப்தா ஸநஸ்த: ஸ்படிகமணி நிபைர் மௌக்திகைர் மண்டிதாங்க: | ஸுப்ரை ரப்ரை ரதப்ரை ருபரி விரசிதைர் முக்த பீயூஷ வர்ஷை: ஆநந்தீ ந: புநீயா தரிநளிந கதா ஸங்கபாணிர் முகுந்த: || ‘’சுதர்சன சக்ரம்,கதாயுதம், சங்கம், தாமரை இவற்றை எல்லாம் ஏந்திய முகுந்தன் பாற்கடலில், முத்து நவமணிகள் கோர்த்த ஆசனத்தில் அமர்ந்துள்ளான் . நவரத்தின மணிகளின் பிரகாசத்தில் பாற்கடலின் மணல் பரப்பு ஜொலிக்கிறது. அவன் அணிந்துள்ள ஸ்படிக மணிகள் பளீரென்று ஒளியை ஊடுருவி காட்டுகிறது. மேலே வெண்ணிற மேகங்கள் சூழ்ந்து அம்ருதத்தை பொழிய பரமாத்மன் பரமானந்த மையமாக வீற்றிருக்கிறான்.’’ எவ்வளவு அற்புதமாக துவங்குகிறது த்யானம் பார்த்தீர்களா!
‘’பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியத ஸுரநிலஸ் சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே கர்ணாவாஸா: ஸிரோ த்யௌர் முகமபி தஹநோ யஸ்ய வாஸ்தேய மப்தி: | அந்தஸ்தம் யஸ்ய விஸ்வம் ஸுர நர கககோ போகி கந்தர்வ தைத்யை: சித்ரம் ரம் ரம்யதேதம் த்ரிபுவந வபுஷம் விஷ்ணுமீஸம் நமாமி || ‘’விஷ்ணு மூவுலகும் உடலானவன். பூமியே பாதம். ஆகாசம் அவன் வயிறு, நாபி. .வாயு அவனது மூச்சுக் காற்றாகிறது. சூரிய சந்திரர்கள் அவனது கண்கள். எண்டிசையும் அவனது செவிகள். விண்ணுலகே அவனது சிரம். அக்னியே அவன் முகம். சமுத்திரங்கள் யாவும் அவன் அடி வயிறு நாபி. அவனில் அடக்கமானவை எவை தெரியுமா? இந்த பிரபஞ்சம்,எண்ணற்ற உபதெய்வங்கள், கந்தர்வர்கள், தேவர்கள், அரக்கர்கள், ஜீவராசிகள், நடப்பன,ஊர்வன, பறப்பன இவை எல்லாமே தத்தம் செயல்களை புரிந்து கொண்டிருக்கின்றன. ‘’ஓம் நமோ பகவதே வாஸுதேவாயா’’ ‘’பகவானே, வாசுதேவா, உன்னை நமஸ்கரிக்கிறேன். ‘’ஸாந்தாகாரம் புஜக ஸயநம் பத்மநாபம் ஸுரேஸம் விஸ்வாதாரம் ககநஸத்ருஸம் மேகவர்ணம் ஸுபாங்கம் | லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகிஹ்ருத்யாந கம்யம் வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைக நாதம் || ‘’ஜகன்னாதா, சாந்தம் குடிகொண்டவனே, ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டவனே, நாபியில் தாமரை உருவானவனே, தேவாதி தேவனே, பிரபஞ்ச ரக்ஷகனே, ஆகாசம் போல் எங்கும் வியாபித்தவனே, மேக வர்ணனே, சௌந்தர்ய ரூபனே, ஸ்ரீயப்பதே, கமல லோசனா, யோகிகள் வணங்கும் தெய்வமே, சம்சார பயத்தை நீக்குபவனே , உன்னை போற்றி வணங்குகிறோம்.’’ ‘’மேகஸ்யாமம் பீத கௌஸேய வாஸம் ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம் | புண்யோபேதம் புண்டரீ காயதாக்ஷம் விஷ்ணும் வந்தே ஸர்வ லோகைக நாதம் || ‘’மூவுலகுக்கும் நாயகனே, நீல மேக வண்ணா, மஞ்சள் பீதாம்பர தாரி, மார்பில் ஸ்ரீவத்சம் எனும் அழகிய மச்சம் உள்ளவனே, கௌஸ்துப மணிமாலைகள் ஒளிரும் மார்பனே, ரிஷிகள், முனிகள், யோகிகள் புடை சூழ்ந்து வணங்குபவன், உன்னை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்.’’ ‘’நமஸ் ஸமஸ்த பூதாநாம் ஆதி தேவாய பூப்ருதே | அநேக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே || ஸஸங்க சக்ரம் ஸகிரீட குண்டலம் ஸபீத வஸ்த்ரம் ஸரஸீ ருஹேக்ஷணம் | ஸஹார வக்ஷஸ் ஸ்தல ஸோபி கௌஸ்துபம் நமாமி விஷ்ணும் ஸிரஸா சதுர்புஜம் || சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேம ஸிம்ஹாஸ நோபரி ஆஸீநம் அம்புதஸ்யாமம் ஆயதாக்ஷம் அலங்ருதம் | சந்த்ராநநம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கித வக்ஷஸம் ருக்மிணி ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ஸ்ரீ க்ருஷ்ணமாஸ்ரயே || ‘’சங்கு சக்ரங்களை, வாள் தாமரை, கதாயுதம் ஆகியவற்றை நாற்கரங்களிலேந்தி, மணி மகுடம் சூடி, செவிகளில் குண்டலங்கள் ஆட, கண்ணைப் பறிக்கும் பீதாம்பரம் இடையில் அணிந்து , அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற நேத்ரங்களோடு, மார்பில் மணி ஹாரங்கள் புரள, ,கௌஸ்துபம் தரித்த மகா விஷ்ணு ப்ரபோ, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.’’ ‘’ஓம் விஸ்வஸ்வை நம:’’ அகில புவனமானவனே உன்னை வணங்குகிறேன். இவ்வாறு விஷ்ணுவை மனதார நேரில் கிருஷ்ணனாக கண்டு, போற்றி, பீஷ்மர் விஷ்ணுவின் ஆயிர நாமங்களை இனி சொல்லப் போகிறார். கை கட்டி சிரத்தையாக, மனம் ஒன்றி விஷ்ணுவின் ஈடற்ற மஹாத்மியத்தில் தன்னை இழந்து உபதேசம் பெறுகிறான். நாமும் மனதை ஒடுக்கி முழு சிந்தையும் இதில் உறையுமாறு யுதிஷ்டிரனோடு சேர்ந்து கைகூப்பி நின்று கேட்போம்... இந்த மாதிரி ஒரு வாய்ப்பு விஷ்ணுவை கிருஷ்ணனாக அவர் எதிரே நிற்கும்போது போற்றப்பட, பணிய யாருக்கு கிடைக்கும்.? நாம் பூர்வ ஜென்ம பாக்கியசாலிகள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...