என் இனிய வசுதைவ குடும்பத்தினரே,
இந்த பகுதியில் நாம் மனம் விட்டு பேசும் சத் சங்க விஷயம் தான் அதிகம். மற்றவை கொஞ்சம் கொஞ்சம்.
இன்று என் மனதில் ரெண்டு எண்ணங்களை சொல்கிறேன்.
1. வாய்க்கு ருசியாக வேண்டியதை வீட்டிலேயே பண்ணி சாப்பிட முயற்சி செய்யுங்கள். அப்படித்தான் நாம் வளர்ந்தோம். இப்போது வசதிகள் பெருகிவிட்டதால் எதுவும் காசை விட்டெறிந்தால் வீடேறி வந்து விடுகிறது. காய்கறி நறுக்கவேண்டாம் , பழம் தோல் சீவ வேண்டாம். சமைக்கவே வேண்டாம். போன் பண்ணினால் ஒரு ஆள் தோசை வடை முதல் எல்லாவற்றையும் வீட்டு டேபிளில் கொண்டு வைப்பான். கொஞ்சநாள் போனால் ஊட்டிவிடுவான். குழந்தைகள் அம்மா அப்பா சமைத்து சாப்பிடுவதை இனி பார்க்க போவதில்லை.
இது ஆபத்தானது. வீட்டில் சமைத்து உப்பு கூடவோ, புளி கம்மியா, காரம் இல்லையோ அதிகமோ, அதை குளித்து விட்டு செய்து, மனதார தெய்வத்துக்கு அர்ப்பணித்துவிட்டு, துளி காக்கைக்கு போட்டுவிட்டு, எல்லோரும் வீட்டில் பேசிக்கொண்டே சாப்பிடும் வழக்கம் காணாமல் போகவேண்டாம். பரம்பரைக்கு செய்யும் துரோகம் இது.
2. வீட்டில் குழந்தைகளோடு தமிழ்காரர்கள் தமிழிலேயே பேசலாம். பாட்டுகள் பாடி பழக்கலாம். எல்லோரும் நன்றாக பாட முடியாது. சங்கீதமும் எல்லோரும் கற்றுக் கொள்ள இயலாது. ஆனால் குரல்வளை, எல்லோருக்கும் இறைவன் தந்தது. அதன் மூலம் எப்படி பாட முடிகிறதோ அப்படி இறைவனை நினைத்து அப்பாபோது பாடுங்கள். குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வரட்டும். காதில் எதையோ மாட்டிக்கொண்டு ஏதேதோ சப்தத்தை கேட்டுக்கொண்டே தெருவில் போகிறார்கள். நாம் நமது அருமைகளை மறந்து மேலைநாட்டுக்காரர்களாக கனவு காணும் நேரத்தில் மேலை நாட்டுக்கார்கள் நமது நாட்டுக்கு ஓடிவந்து இங்கு இருக்கும் அற்புத விஷயங்களை கற்றுக்கொண்டு போகிறார்கள்.....! நாம் நாமாகவே இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதை செய்வோமே.
நண்பன் ஜே கே சிவன்
No comments:
Post a Comment