Monday, November 18, 2019

THIRUK KOLOOR



திருக்கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம்   J K  SIVAN 
                                                 
             11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே  


ஸ்ரீ ராமானுஜர்  கேட்டது ஒரே ஒரு சின்ன கேள்வி..... அதன் பயன் நமக்கு அற்புதமான ஒரு காவியமே கிடைத்திருக்கிறது.  ராமானுஜர் கேட்டது ஒரு  படிக்காத   தயிர் மோர் விற்கும் கிராமப்பெண்ணை.. அவர் திருக்கோளூர் முதல் முதலாக வருகிறார். அது மதுரகவி ஆழ்வார் ஜன்மஸ்தலம் .  அநேக ஆழ்வார்கள் தரிசித்த வைத்த மாநிதி பெருமாள் க்ஷேத்ரம். அதை ஒரு முறை அடைந்து பெருமாள் தரிசனத்தை  பெற வேண்டும் என்ற ஆவலில் எதிர்ப்பட்ட  அந்த பெண்மணியிடம்  பேசுகிறார்.
''அம்மா, திருக்கோளூர்'' இது தானே. 
''ஆமாம் ஐயா,''
''ஆஹா  எவ்வளவு சிரேஷ்ட மான ஸ்தலம்.  நீ இங்கிருப்பவளா?''
''ஐயா  நான்  இங்கிருந்தவள் தான்  இதைவிட்டு போய்கொண்டிருக்கிறேன்''
''எங்கெங்கோ உள்ளவர்கள்  க்ஷேத்ரத்திற்கு வர மாட்டோமா, சிறிது காலமாக தங்கமாட்டோமா என்று ஏங்கும்போது நீ ஏனம்மா இந்த புண்ய க்ஷேத்ரத்தை விட்டு செல்கிறேன் என்கிறாய்?""  
அவ்வளவு தான். ஒரு பிடி பிடித்து விட்டாள்  அந்த பெண்.
''தான் இந்த ஊரில் இருக்க எந்த விதத்தில் தகுதி உள்ளவள், என்று 81 பேர் சரித்ரம் சொல்லி  அவர்கள் போல் ஏதோ  ஒரு விதத்தில் அவர்களை போல் நான் பெருமாளை நினைத்தவளா, சேவை புரிந்தவளா? எப்படி நான் தகுதியானவள்  இங்கே வசிக்க  என்று கடகடவென்று சொல்லி ராமானுஜரை  திகைக்கவைத்த்து விட்டாள்  இதுவரை அவள் சொன்ன 10 பேர் சரித்திரம் சுருக்கமாக சொல்லிவிட்டேன். இன்று 11 வது உதாரணம்: 

வில்லிபுத்தூர் என்ற ஒரு ஊரில் ஒரு  வைஷ்ணவ துறவி வாசித்தார்.  அவர் பெயர் விஷ்ணுசித்தர். பிற்காலத்தில்  பெரியாழ்வார். அவரது ஆஸ்ரமம் பெரியது. நிறைய செடி கொடி மலர்கள் நிறைந்த நந்தவனம் . ஒருநாள் அந்த நந்தவனத்தில்  துளசி மாடத்தின் கீழ் அவரால் கண்டெடுக்கப்பட்டு  வளர்ந்தவள் ஸ்ரீ ஆண்டாள் எனும் கோதை. பூமாதேவியின் அம்சம் .    பெரியாழ்வாரின் உபதேசங்களால்  நாராயண கிருஷ்ண பக்தியும், கிருஷ்ண லீலைகளும்  ஆண்டாள் மனதில்  ''கண்ணனே என் கணவன்'' எனும் தீவிர காதலை மூட்டியது.    தன்னையே  அவனுக்கு அர்ப்பணித்த  ஆண்டாள் தன் காதலில் உறுதியாய் நின்று, அவரையே  அடைகிறாள். ஆண்டாள் திருப்பாவை இயற்றிய போது,  அந்த சிறுமிக்கு ஐந்து வயது என்று எங்கோ படித்தேன்.    நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்கள் பாசுரங்கள் பெரிது  என்றாலும் ஆண்டாளின் 30 திருப்பாவை பாசுரங்கள்   அதில்  சிறந்தது. உலகப் பிரசித்தி பெற்றவை மார்கழி எங்கும் ஒலிப்பது. அதில் கோதை நாச்சியார் தன்னை ஆண்டாள் எனும் கோகுலத்தில் வாழும் கோபியரில் ஒருத்தியாக காட்டி, அவள் தனது நண்பிகளோடு சேர்ந்து தினமும் யமுனையில் நீராடி கண்ணனை வேண்டி  விரதம் நோன்பு  நோற்பது வருகிறது.   அவள் 
 143  (ஒன்னு  நாலு  மூன்று ... கிருஷ்ணா,  I  LOVE  YOU என்ற  எழுத்துக்களின் சாராம்சம்.) பாசுரங்களில் நாச்சியார் திருமொழி அற்புதமாக எழுதி தனது மனத்தில் மணம் செயது கொண்ட  பாசுரங்கள்.     கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை" என்று நிரூபித்து ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதனோடு இணைந்து மறைந்தவள். 
என்னுடைய  ''பாவையும் பரமனும்''   வெகு நல்ல வரவேற்பை பெற்றது.  ரெண்டு முறை பதிப்பு வெளியிட்டேன்.  உலகளவில் பல அன்பர்களால் விரும்பி ஏற்கப்பட்டது.  இன்னும் சில பிரதிகள் மட்டுமே எண்ணிடம் உள்ளது. 

                திருக்கோளூர் பெண் பிள்ளை,   மேலே சொன்ன விவரங்கள் சொல்லி, ''ஸ்ரீ ராமானுஜரே  நான் என்ன  ஆண்டாள் போல்  குழந்தை பிராயத்திலேயே  விஷ்ணு பக்தையா, ஞானியா, கிருஷ்ணன் ரங்கன் அடிமையா, அவன் காதலை பரிசாக பெற்றவளா? எந்தவிதத்தில் நான் தகுதியானவள்  இந்த புண்ய க்ஷேத்ரத்தில் வசிக்க, நீங்களே சொல்லுங்கள் என்கிறாள்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...