"அம்பது ரூபாய் தரியா?" J K SIVAN
ஆதிசேஷையா வழக்கம்போலவே அன்றும் அவன் முதலாளியால் ஆபிசில் சக்கையாய் பிழியப்பட்டு வீடு திரும்பினான்.
வீடு குடும்பம் எதுவுமே அவனுக்கு ரெண்டாம் பக்ஷம் தான் . ஆபிஸ் .. ஆபிஸ்.. ஆபிஸ். இதனால் அவன் ஒரு இயந்திரமாக மாறி விட்டான். எப்போதும் எல்லோரிடமும் கடு கடு வென்று இருக்கும் ஸ்வபாவம். எல்லோரையும் விரட்டிக்கொண்டே இருப்பான் ஆபிசுக்கு கிளம்பும்போது சீக்கிரமாகவே போய் விடுவான் இரவு லேட்டாக திரும்புவான். "கடு கடு, சிடு சிடு..
அவன் பிள்ளை 10 வயது மதுவுக்கு மறுநாள் பிறந்த தினம். இரவு அப்பாவின் வருகைக்காக காத்திருந்தான் மது.
வாசலில் அப்பாவுக்கு காத்திருந்த பிள்ளையுடன் சம்பாஷணை
''ஏண்டா மது, மணி ராத்திரி ஒன்பது ஆகிறது. இன்னும் நீ தூங்கலியா?''
"அப்பா உன்னை ஒன்று கேட்கலாமா? "
"ஒ தாராளமா !"
"உனக்கு ஆஃபீஸ்லே எவ்வளவு சம்பளம்?
ஆதிசேஷையா சீறினான். அவன் ஒரு ஆபீசர்.
"என்னடா கெட்ட பழக்கம் இது? எதுக்கு கேக்கறே இதெல்லாம்?"
"சும்மாதான் அப்பா. சொல்லேன். ''
"என்னை என்ன நினைச்சிண்டிருக்கே ? ஒரு பெரிய ஆபீசர். மாசம் சுளையா லக்ஷ ரூபா சம்பாதிக்கிறவன்..''

"ஓ அவ்வளவா?''
மது அதிர்ந்து போனான். சற்று நேரம் மௌனம்...
''அப்பா இவ்வளவு சிம்பிளா இருக்காரேன்னு யோசிக்கிறியா?'
"அப்பா.. அப்பிடின்னா உனக்கு ஒரு மணி நேரத்துக்கு கிட்டத்தட்ட 150 ரூபாயா.உனக்கு சம்பளம்.....
''என்னடா கணக்கு இது. ஆமான்னு வச்சுக்கோ ''
''ஓஹோ அப்படின்னா எனக்கு நீ ஒரு அம்பது ரூபா குடுப்பியா?
என்ன ஆச்சு உனக்கு என்னடா கேள்வி இதெல்லாம்''.
''இல்லேப்பா ஒரு கணக்கு போடறேன்..
ஆதிசேஷையா உண்மையில் ஆதிசேஷனாக விஷம் கக்கினான்.
"ஓஹோ அப்பன் கை நிறைய சம்பாதிக்கிறான். நாம்ப தாம் தூம் னு செலவு பண்ணலாம்னு கனவு காண்றியா. அதான் நடக்காது எங்கிட்ட' ' மகனை அடிக்க கையை ஓங்கினான் ஆதிசேஷன்.
'அப்படி ல்லாம் இல்லேப்பா''
''பின்னே நீ எதுக்கு பணம் கேக்கறே ? காரணம் தெரியாம கொடுக்க மாட்டேன். எதையாவது குப்பையும் கூளமுமாக வாங்கி தின்னவா? எவனோடையாவது சேர்ந்து சினிமா ஹோட்டல் போகவா? ராஸ்கல் முதுகு தோலை உரிச்சுடுவேன்''
'' பேசாமல் உள்ளே போய் படு.. நாளெல்லாம்உழைத்து ஓடாய் சம்பாதிக்கும் பணம் இதற்கெல்லாம் விரயம் பண்ண அல்ல.'
கண்களில் ஜலத்தோடு தலை குனிந்து மது உள்ளே சென்றான்.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தவுடன் ஆதிசேஷையா கூல் ஆனான்.
"பாவம் சிறு பையனை ஏன் கோபித்தேன் ? எதற்காக அவன் காசு கேட்டான்? இது வரை பணம் கேட்டதில்லையே. கொடுக்காவிட்டால் திருட்டு பழக்கம் வந்துவிடுமோ?'' எதற்கு காசு கேட்டான் என்று கண்டுபிடிக்கிறேன்''

அவனை அறியாமல் ஆதிசேஷன் கால் மது படுத்துக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தது.
கட்டிலில் சுருண்டு விம்மிக்கொண்டே படுத்துக் கொண்டிருந்தான் மது
"மது குட்டி, தூங்கறியாடா??"
"இல்லைப்பா. முழிசிண்டுதான் இருக்கேன்'' தயங்கி தயங்கி பதில் சொன்னான் குழந்தை.
" ஆபீஸ்லே ரொம்ப வேலையா. அதாலே சிடு சிடுன்னு உன்கிட்டேயம் விழுந்தேன்.

அது சரி நீ எதற்காக 50 ரூபா பணம்கேட்டே என்று கூட தெரிஞ்சிக்காம உன்னை விரட்டினேன். இந்தா நீ கேட்ட அம்பது ரூபாய். இது எதுக்குன்னு சொல்லு ?"
"நீ நல்ல அப்பா". என்று பணத்தை வாங்கிக் கொண்டான் மது. அப்பாவின் கழுத்தை கட்டிகொண்டான். பிறகு தலையணை அடியில் இருந்து சில ரூபாய்களை எடுத்துஎண்ணினான்.
பையன் கையில் ரூபாய்களை பார்த்ததும் ஆதிசேஷையா மீண்டும் ஆக்ரோஷம் ஆனான்.
"உனக்கு ஏது இவ்வளவு ரூபாய், இது இருந்தும் ஏன் மேற்கொண்டு என்னை பணம் கேட்டாய்?உண்மையை சொல்லறியா இல்லையா?"
மது முணுமுணுத்தான்.
"இதெல்லாம் எனக்கு அப்பப்போ ஸ்கூல் போகும்போது அம்மா கொடுத்தது. பஸ் லே போகாம நடந்து சேத்து வச்சது. என் கிட்ட தேவையான பணம் இல்லை அதனாலே தான் கேட்டேன். நீ கொடுத்தப்புறம் தான் இருக்கு"

''எதுக்குடா உனக்கு இவ்வளவு பணம் ?''
"அப்பா இதோ மொத்தம் என்கிட்டே நூறு ரூபாய் இருக்கு. இப்போ நீ கொடுத்த அம்பதும் சேர்த்தா உன்னுடைய ஒருமணி நேர சம்பளம்.

அப்பா அப்பா.....அழுது கொண்டே மது பேச்சு வராமல் விம்மினான்...
என்னடா சொல்லு ராஜா ''
''அப்பா உனக்கு தான் இப்போதோ ஒரு மணி நேரம் சம்பளம் கிடைச்சுட்டுதே. நாளைக்கு என் பர்த்டே என்னோட ஒருமணி நேரம் இருக்கியா....?
நீதி: சம்பாதிப்பது ஒன்று தான் பெற்றோரின் கடமை அல்ல. நம்மை ஒரு பொருட்டாய் கருதும் நமக்காக ஏங்கும், தமது இதயத்தில் நம்மை தாங்கும் சுற்றத்துடனும் நம் நேரம் செலவாக வேண்டும். நமக்கு உடல் சரியில்லாத, உள்ளம் நொந்த சமயத்தில் ஆபீஸ் கூட வராது. மானேஜர் வர மாட்டான். அரைமனசோடு கோபித்துக் கொண்டே லீவ் மட்டும் தான் கொடுப்பான்.

No comments:
Post a Comment