இது என் போல் வயதான சகோதர சகோதரிகளுக்கு.......
சாப்பிடுவது என்பது உடலையும் மனதையும் திருப்தி படுத்துகிற ஒரு விஷயம். எலியைப் போல் சாப்பிடு என்பார்கள். எலி நினைத்து நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் பழக்கம் உடையது. வயதானால் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. இடைவெளியை கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
உடலுக்கு சக்தி வேண்டும். உள்ளத்துக்கு மகிழ்ச்சி வேண்டும். தனக்கு பிடித்த நல்ல பிடித்த உணவு ப்பண்டத்தை ரசித்து உண்பவன் நன்றாக செயல்படுகிறான். வியாதி அவனை நெருங்காது. இன்னொரு முக்கியமான விஷயம். இன்னும் வேண்டும் என்று மனதில் தோணும்போது தட்டைத் தூக்கிக்கொண்டு கை கழுவ சென்று விட வேண்டும். இது தான் ''மீதூண் விரும்பேல்''
எதை சாப்பிட்டாலும் வியாதியை நினைத்துக் கொண்டு சாப்பிடக்கூடாது.
" வயதாகிவிட்டால் எலும்பு சக்தி, கால்ஷியம் தேவை. பால் சம்பந்தப்பட்ட பண்டங்களில் கால்ஷியம் ஜாஸ்தி. நார் சக்தி உணவுகளில் வைட்டமின் B உண்டு. அதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கீரை வகைகள் உள்ளே போகவேண்டும். நிறைய நீர் சேர்த்து மோர் குடிக்கலாம்.
எதை சாப்பிட்டாலும் சரி, சாப்பிடும் முன்பு அதை உனது இஷ்ட தெய்வத்தை நினைத்து ''இந்தா இது உனக்கு முதலில் '' என்று மனதார உள்ளே சொல்லிக்கொண்டு சாப்பிடு. ''சிவார்ப்பணம், க்ரிஷ்ணார்ப்பணம்'' வார்த்தைகள் இதற்கு பெரிதும் உதவும். சாதம் அப்போது ப்ரசாதமாகி விடுகிறது. காக்கைக்கு கொஞ்சம் போட்டுவிட்டு சாப்பிடும் பழக்கம் இன்னும் நிறைய வீடுகளில் சாகவில்லை.
No comments:
Post a Comment