Saturday, November 9, 2019

JEYADEVAR ASHTAPATHI




                                  ஜெயதேவரும் கொஞ்சம் நானும்
                                                                J K  SIVAN 

ஜெயதேவர் அஷ்டபதியை யார் யாரோ  எந்தெந்த கல்பனா ஸ்வரத்தோடு ரசித்து சுகமாக  பாடுகிறார்கள். கேட்கவே திவ்யமாக இருக்கிறது. இருந்தபோதிலும் என் காதுகளுக்கு ஏனோ  ஸ்ரீ பால முரளி கிருஷ்ணா  ரசித்து பாடிய  விதம் ரொம்ப பிடித்தது.  அவர் பாடிய  ஒரு  ஜெயதேவர் அஷ்டபதி ராக மாலிகையில் அமைத்து  பாடியதில்லை மோஹனம், சரஸ்வதி, ரீதி கௌளை ,  பாகேஸ்வரி  மற்றும் பெஹாக்  அற்புதமாக இருந்து அதை கேட்டு  கூடவே பாடும் இன்பம் பெற்றேன்.

sancharadadhara - mOhana 


sancharadadhara sudhAmadhura dhvani mukharita mOhana vamSam
chalita druganchala chanchala mouLi kapOla vilOla vatamsam

rAsE harimiha vihita vilAsam
smarati manO mama kruta parihAsam ||

மோஹனம் அருமையான கவர்ச்சி ராகம். சந்தேகமே இல்லை. அதுவும்   ப்ருந்தாவ  னத்தில் அதை புல்லாங்குழலில், இழைத்து,  தேன்  இசையை குழைத்து,  மாலை வேளை,   சோலை நடுவே,  யமுனை நதி சலசலவென்று அருகே  தம்புரா ஸ்ருதியாக ஓட , ஆநிரைகள்  கோபியர்கள் புடை சூழ, அற்புதமாக  ஒரு மரக்கிளையில்  உட்கார்ந்தவாறு  கிருஷ்ணன் இசைக்கும்போது  எவ்வளவு ருசியாக இருக்கும் என்று சற்று கண்ணை மூடி ரசிப்போம்.  புல்லாங்குழலிலிருந்து வருவது  நாத ஒலி சப்தமா,  அம்ருதமா?.

புல்லாங்குழலை வாசித்துக்கொண்டு  அவன் அங்குமிங்கும் தலையை அசைக்கும்போது அவன் சிரத்தில் செருகி இருக்கும்  மயிற்பீலியும், காதில் குண்டலங்களும்  தாளம் தப்பாத நாட்டியமாக அல்லவோ கண்ணைப் பறிக்கிறது.  எவ்வளவு சந்தோஷமாக இந்த  ராஸலீலையை அவன் அனுபவிக்கிறான்!.  எனக்கு அவன் மற்ற கோபிகளோடு  சேர்ந்து  சந்தோஷமாக பாடுவது  மனதுக்கு இன்பம் தரவில்லை. என்னை பரிகாசம் செய்வது போல், இகழ்வது போல்  இருக்கிறது.  அவன் என்னோடு தான்....அவனை என் மனம் எப்போதும் நாடுகிறதே.''  என்கிறாள் ராதை  தோழியிடம்.
.
அடுத்தது  சரஸ்வதி ராகத்தில் 
 chandraka chAru mayoora SikhanDaka manDala valayita kESam
prachura purandara dhanu ranuranjita mEdura mudira suvESam ||rAsE |

கிருஷ்ணனின் கேசம் கருப்பாக இருந்தாலும்  மயில் பீலி, சிறகுகள் வண்ணத்தை வீசுவதால்,    மழைக்கால கரு மேகத்தின் இடையே  வானவில் சுற்றி வளைத்து இருப்பது போல் காண்கிறதே.  என்ன அழகு !  என்னை அவன் உதாசீனப்படுத்திவிட்டு  மற்றவர்களோடு  சிரித்து விளையாடுகிறான்.... ஆனாலும் என் மனம் அவனையே  நாடுகிறதே.

பாகேஸ்வரி ராகத்தில்.

vipula pulaka bhuja pallava valayita vallava yuvatee sahasram
kara charaNOrasi maNigaNa bhushaNa kiraNa vibhinnata miSram||rAsE|

கிருஷ்ணனை  வாரி அணத்து  தழுவி மகிழ்கிறார்கள் எல்லோரும்.  எல்லோரும்  மிதமிஞ்சிய அம்ருத பானம்  பருகிய போதையில் உள்ளது போல் அல்லவா காண்கிறார்கள்.  அவனது  கழுத்தின்  ஹாரத்தில் உள்ள  ஒளிவீசும்  நவரத்ன கற்கள், இருளை பிளந்து ஒளி வீசுகிறது. 

கடைசியாக  பெஹாக் ராகத்தில் 

Sri jayadEva bhaNita mati sundara mOhana madhuripu roopam haricharaNa smaraNam prati samprati puNyavatA manuroopam||rAsE||

ஜெயதேவர் பிருந்தாவன நந்தகுமாரனின் காந்தமென  கவரும்  அழகை அவன் அன்பை வர்ணிக்கிறார். இந்த  பக்தி ரஸ பாடல்  பாடி போற்றுவோரை கிருஷ்ணனின் தாமரைத் திருவடிகளில் கொண்டு சேர்க்கும்.  நான்  எப்போதும் அவனது ராச க்ரீடை விளையாட்டுகளை தியானித்து பாடுபவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...