Thursday, January 31, 2013

பையனின்கேள்வி?




குட்டி கதை               பையனின் கேள்வி?
எக்க சக்கமாக கும்பல் உள்ளேயும் வெளியுமாக போய்கொண்டிருக்கும் ஒரு பெரிய  ஷாப்பிங் சென்டர் அது. அதன் வாசலில் ஒரு கண்ணாடி ஷோ ரூமில்  நிறைய புது புது  மாடல்களில் காலணிகள் வைக்கப்பட்டிருந்தது.
அந்த  கட்டிடத்தின் வாசலில்  ஷோ ரூம் கண்ணாடி அறையின்  வழியா  உள்ளே இருக்கும் ஷூவெல்லாம்  பார்த்துக்கொண்டே  தெருவில்  
ஒரு  10 வயசு பையன்  கன்னத்தில் கை வைத்துகொண்டு உட்கார்ந்திருந்தான். மார்கழி ளிரில்  அவன்  நடுங்கிக் கொண்டு  இருந்தான். மேலே  போர்வை இல்லை. காலில் செருப்புகூட இல்லஅவன்  இருந்த இடத்துக்கு அருகே ஒரு பெரிய  கார் வந்து
 அழகாக நின்றது. அதன் உள்ளேயிருந்து  ஒரு  பணக்கார  பெண்மணி இறங்கினாள்.  அவள்  பார்வை  இந்த பையன் மேல் பட்டது.
"டே  பையா, இந்த  குளிரில்  இங்கே  என்னடா பண்றே,  என்ன  பார்க்கறே?" அவன் அவளை  ஒரு முறை பார்த்துவிட்டு  மீண்டும்  கண்ணாடி வழியாக உள்ளே பார்வையிட்டான். அப்படி  என்ன  உள்ளே இருக்கு  
பார்க்க  என்ற  ஒரு ஆவல்   மேலிட கண்ணாடி வழியாக பார்த்தாள். உள்ளே  நிறைய  வித விதமான  காலணிகள்.  
"இதையே உற்று பார்க்க என்ன இருக்கு? அதுக்கு எதற்காக வாயில் ஏதோ  முணுமுணுக்கறே? 
"கொஞ்சம் நேரம் முன்னாடி இங்கே  ஒருத்தர் ஒரு விஷயம்  சொல்லிண்டு போனார். அது பிரகாரம் பண்ணிண்டு  இருக்கேன்."
"என்னடா  சொல்றே?,   யார்  என்ன  சொன்னார்?" 
" ஒரு தாத்தா பக்கத்திலே இருந்த மாமா கிட்ட "நீ  கவலையே படாதே. உன்னுடைய குறையை அந்த கிருஷ்ணன் கிட்ட சொல்லிடு. அவன் பாத்துப்பான். உன் தேவையெல்லாம் பூர்த்தியாயிடும். இது  என்னுடைய அனுபவம்"  என்று  சொல்லிக்கொண்டே போனார். அதனாலே நான் ரொம்ப நேரமா இந்த கிருஷ்ணன் என்கிறவர் கிட்ட எனக்கு ஒரு ஷூ வேணும்னு வேண்டிண்டு இருக்கேன்.."
"அப்படியா. சரி. என்னோட கொஞ்சம் வரியா "
உள்ளே அவனை அழைத்துக் கொண்டு சென்று அரை  டஜன் சாக்ஸ் வாங்கினாள். 
"சார் ஒரு டவல் தரிங்களா?" என்று கடைக்காரிடம் கேட்டு பணத்தை  நீட்ட  அது கிடைத்தவுடன் டாய்லெட் ரூம் சென்று அவனை  நிற்கவைத்து  குனிந்து அவன்  முழங்கால் வரை அலம்பி, அழுக்கு, மண் எல்லாம்  நீக்கி  டவலால்  துடைத்து  சாக்ஸ் மாட்டினாள். அவன்  கால் அளவுக்கு  நல்ல  புது  விலையுயர்ந்த புது மாடல்  ஷூவும் காலில் இணைந்தது. மீதி  5 ஜோடி சாக்ஸ் பொட்டலம்  கட்டி  பையில் போட்டு  அவனிடம் நீட்டி முதுகில்  தட்டி  "இப்போ சந்தோஷமாடா?" கேட்டுவிட்டு நடந்தாள் அந்த பெண்மணி. 
போகின்றவள் கையை  பிடித்து இழுத்து அவளை உற்று பார்த்த  பையன் கண்களில் பிரவாஹம். அவன்  வாயிலிருந்து ஒரு சந்தேக கேள்வி எழுந்தது  "  நீ  தான் கிருஷ்ணனோட  அம்மாவா?"

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...