Monday, September 25, 2017

சூர் ஸாகரம் -




சூர் ஸாகரம் - J.K. SIVAN

சூர் தாஸ் கண்ணற்றவர். அவர் கிருஷ்ணனை வெளியே பார்க்கவில்லை, மனதிலே ஒவ்வொரு கணமும் அவன் அழகைத்துய்த்துக் கொண்டிருந்தவர். அவனது ஒவ்வொரு அங்க அசைவும் அவருக்கு தெரியும். பார்வையின் ஆயிர அர்த்தங்கள் புரியும். அவன் நடை லக்ஷம் கதை சொல்லும். அவன் மனமும் அவர் மனமும் ஒன்று தான்.

சூர்தாஸ் மனதில் ஒரு கேள்வி திடீர் என்று எழும்பியது. விடுவாரா கிருஷ்ணனை? கேட்கிறார்.

''கிருஷ்ணா, துன்பமும் துயரமும் கொண்டவர்கள் துக்கத்தை சோகத்தை வலியை யார் துடைப்பது? சாதுக்கள், துறவிகளின் நலனுக்கு பாடுபடுபவர் யார்? ஆஹா எனக்கே புரிந்துவிட்டது. கேள்வியிலேயே பதில் இருப்பதை கவனிக்கவில்லை நான். ''யார் தீன ரக்ஷகனோ, அவனே சாதுக்களின் நலன் பேணுபவன். அஜாமிளனுக்கும், ஜடாயுவுக்கும், ஜரா எனும் வேடனுக்கும் யார் மோக்ஷம் அளித்தானோ அவனே. அஜாமிளன் ஒரு கீழ்த்தர வாழ்வு வாழ்ந்தவன் என்றாலும் ஒரு முறையேனும் நாராயணனை நினைத்து அழைத்தாலும் போதுமே என்பதற்கு எடுத்துக்காட்டு.

சிறுவன் துருவனுக்கு காட்சி கொடுத்து அவனை உயர்த்தியவன் யாரோ அவன் தான் பிரஹலாதன் உயிரைப் பலமுறை காப்பாற்றி அவனை மோக்ஷம் அடையச் செய்தவன். இந்த ரெண்டு சிறுவர்கள் பிரஹலாதன், துருவன் என்றும் நினைக்கப்படுகிறார்களே.

லங்காபுரிக்கு சமுத்திரத்தில் பாலம் காட்டும் வானரர்களுக்கு உதவியவன் யாரோ அவனே கஜேந்திரனை முதலையிடம் இருந்து உயிரைக் காப்பாற்றியவன்.

துச்சாதனன் திரௌபதியை மான பங்கப்படுத்த முயற்சித்தபோது அவனை மயங்கி விழச் செய்யும் அளவுக்கு அவள் மானம் காத்து உடை அளித்தவன். அவள் என்ன தவம் செய்தாள்?

'' ஹரே கிருஷ்ணா'' ஆபத் பாந்தவா'' என்ற ஒரே குரல் கொடுத்தாலே போதுமே. இதை எல்லாம் நினைத்து பார்க்கும் சூர்தாசுக்கு கண் தெரியாவிட்டால் என்ன? இதோ உன் வாசலில் நிற்கிறானே கண்ணா. அவன் மீதும் கருணை கொண்டு மேலே சொன்ன அத்தனை பேர் போல அவனையும் காத்து ரக்ஷிக்க மாட்டாயா என்ன?

எப்படி சூர்தாஸ் கவிதை நயம்? என்ன சரணாகதி! என்ன எளிமை, தன்னையே பக்தியில் அர்ப்பணிக்கும் பரிசுத்தம்.

இதோ இந்த கவிதையில் தான் மேலே சொன்ன சாராம்சங்கள் பாடலாக இருக்கிறது.

''deenan dukh haran dev santan hitkari
ajamil geedh byadh inme kah kaun saadh
panchhi ko pad padhaat ganika si taari
deenan dukh haran dev ...
dhruva ke sar chhatra det
prahalad ko ubari det
bhakta hetu bandhyo setu
lankpuri jaayi
deenan dukh haran dev .....
gaj ko jab grah grasyo
duhshashan cheer khasyo
sabha beech krishna krishna draupati pukari
deenan dukh haran dev .....
itne hari aaye gaye
basnan aaroorh bhaye
surdas dware khado aanadhro bhikhari
deenan dukh haran dev santan hitkari


deenan dukh haran dev ....''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...