Friday, September 1, 2017

அந்த ரகசியத்தை சொல்



சூர் சாகரம் 9   j.k. sivan 
             அந்த ரகசியத்தை சொல் 

கண்ணில்லாத சூர் தாஸ், கிருஷ்ணனின் வேணுகானத்தை எண்ணிப் பார்க்கிறார்.  காதில் இன்பத்தேனாக வந்து பாய்கிறது.  ஓஹோ  ஏதோ  ஒரு குயில் தான் பாடுகிறதோ? இல்லை போல் இருக்கிறதே.  குயிலுக்கு இந்த ரசனை கிடையாதே. அதற்கு  குரல் ஒன்று தான் இனிமையாக இருக்கும்.  மனதை பிழியும் இந்த ரசானுபவம், சகல உயிர்களையும் கட்டிப்போடும் மாய சக்தி கிருஷ்ணன் வாயிலிருந்து ஊதும் புல்லாங்குழலிலிருந்து அன்றோ வருகிறது.  கொஞ்சம் கவனிக்கிறார். மேலே மேலே அவரை இன்ப சாகரத்தில் குழலிசை ஆழ்த்துகிறது.   கண்ணன் வெளிப்படுத்துவது காற்று ஒன்று தான். அதை வாங்கி இனிமையாக வெளியே சஞ்சரிக்க செய்வது அவனது குழல். சாதாரண மூங்கில் குழல். உலகிலேயே எளிமையான ஒரு சங்கீத கருவி.

சூர் தாஸின் கவனம் இப்போது க்ரிஷ்ணனிடமிருந்து அவனது புல்லாங்குழல் மேல் படிந்தது.  ஆச்சார்யத்தோடு அதை கேட்கிறார் :

''ஹே எளிய மூங்கில் புல்லாங்குழலே,  எனக்கு உன் ரகசியத்தை சொல்கிறாயா?  நீ  என்ன தவம் செய்தாய், என்ன விரதம் இருந்தாய்? எப்படி உனக்கு  இந்த கிருஷ்ணன் வாயோடு தொடர்பு கொள்ள முடிந்தது. எப்படி கிரிதாரியின் அதரங்களில் தங்கி அவனை முத்தமிட்டுக்கொண்டே இருக்க முடிந்தது? எப்படி அந்த சியாமள வண்ணனின்,   தாமரைக்கண்ணனின் பூரண அன்பும் ஆதரவும் உனக்கு கிடைத்தது?  அவன் உடலிலும் நீ,  அவன் உள்ளத்திலும் நீ,  அவன் அதரத்திலும் நீ.  அவனை நீ இன்றி  யோசித்து பார்க்கக்கூட முடியாதே.   பிரிக்க முடியாத இந்த தொடர்பு பெற என்ன தவம் செய்தனை சொல்?  ஜகத் காரணனை, ஜகத் ரக்ஷகனை நீ எப்படி உன் வசப்படுத்தினாய்? நீ இல்லையேல் அவன் இல்லை எனும் அளவுக்கு எப்படி காலத்தால் அழியாத புகழ் பெற்றாய்?சீக்கிரம் அதை சொல்.

சூர் தாஸின் அந்த பாடல் இது: 

Ri bansi kaun tap tein kiyo
Rahat giridhar mukh hi lagi 
Adharan ko ras piyo 
Shyam sundar kamal lochan 
Tohi tan man diyo
Sur shri gopal bas bhayen
Jagat mein yash liyo

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...