Saturday, September 23, 2017

ராதே ​ உனக்கு கோபம் ஆகாதடி


​                                          ​
ராதே ​ உனக்கு கோபம் ஆகாதடி   - j.k. sivan 

​மேலே சொன்னது  கண்ணன் ராதைக்கு சொல்வது போல் SG  கிட்டப்பா அற்புதமாக ஒரு காலத்தில் பாடியது இன்னும் காதில் ஒலிக்கிறது.  பாட்டு மட்டும் ஒலித்தால் போதாது. அதன் அர்த்தமும் மனதில் தைக்க வேண்டும். அதற்கு தான் இந்த கட்டுரை.




சற்று நேரத்துக்கு முன்பு  திரு. மாதையன் பாண்டியன் என்ற நண்பர்  கோபத்தை பற்றி ஆங்கிலத்தில் எழுதினீர்கள் அதை தமிழிலும் எழுதினால் தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு பயன் படாதா? என்று கேட்டபோது கட்டாயம் இதை உடனே செய்யவேண்டும் என்று தோன்றியது. ​


ஏதோ ஒரு கட்டுரையில்  ''கவலையும் கோபமும் கொண்ட நேரத்தில் எழுதவோ பேசவோ வேண்டாம். விளைவு எதிர்மறையாகி  இடம் என்று எழுதினேன். ஐயா உங்களுக்கு கூட கவலையா கோபமா?  என்று ஒருவர் என்னை திருப்பிக் கேட்டிருந்தார்'' எனக்கு கவலையும் கோபமும் எப்போதாவது தலை காட்டத்தான் செய்யும். அதை விலக்கும் உத்தியும் தெரியும்.

கோபம் தாபம் சண்டாளம் என்பார்கள். நமக்கு பிடிக்காத, நமக்கு விரும்பியது கிடைக்காத, நம்மை ஒருவர் காயப்படுத்தும், மதிக்காத  சமயம் கோபம் தலை எடுக்கும். அந்த நேரம் நாம் வெடிக்கிறோம். பிறகு வருந்துகிறோம். சே இப்படி சொல்லிவிட்டேனே, செய்துவிட்டேனே ''

நாம் துர்வாசர்களாக மாறாமல் இருக்க சில உத்திகள்.

1. உன் செயல்களில் பேச்சில்  ரொம்ப கவனமாக இரு. திவ்ய நாமங்கள் சொல். உன் எண்ணங்களை கண்காணி. மறப்போம் மன்னிப்போம் என்பது பழக்கத்தில் வரட்டும்.  போற்றினாலும் தூற்றினாலும் சமமாக எடுத்துக் கொள்.

2. நாம் சந்திக்கும் எல்லா ஜீவன்களும், ஜீவன்களிலும் கண்ணன் இருக்கிறான். எது நடந்ததோ அது நல்லதற்கே என்று எடுத்துக்கொள்வோம். அதன் பின் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது என்று அறிவோம். கோபம் வராது.

3. இயற்கையை ரசிக்க கற்றுக்கொள். திறந்தவெளியில் நடமாடு. அதுவும் காலையும் மாலையும்.அமைதி உன்னைத் தேடி வரும். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாடு. நீ முன்னிலும்  இப்போது மாறிவருவதை உணர்வாய்.

4.மனம் திறந்து பேசு. உண்மையாக இரு. நேர்மையும் சத்தியமும் உன் பேச்சில் இருக்கட்டும். உன் செயலில் வெளிப்படுத்தும். கொஞ்சமாக பேசு. அதுவே பெரிய வரப்பிரசாதம்.

5.நல்லவர்களோடு பழகு. அவர்கள் நட்பு உனக்கு யானை பலம். அது உனக்கு ஒரு சத்சங்கம். சமரசம் சன்மார்க்கத்தில் கொண்டு சேர்க்கும். மனதிற்கு அமைதி தரும் புத்தகங்களை படி, பேச்சுகளை உபன்யாசங்களை கேள்.

6.நான் நிறைய மகான்களை பற்றி அடிக்கடி எழுத காரணமே நான் அவர்களை பற்றி நினைக்கவேண்டும் என்பதற்காக. உங்களையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறேன் அவ்வளளவுதான். அவர்கள் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல பாடம். வழிகாட்டி.


7.கண்ணனின் கீதை, திருக்குறள் மிக அற்புதமான நூல்கள். படிக்க படிக்க தெளிவு நம்மில் புகும்.

8.நண்பர்களை நேசி. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. எவரிடமும் குறை காணவேண்டாம். அன்பும் நேசமும் பிணைக்கட்டும். சந்தோஷம் நம்மை விட்டு பிரியாது.

9.சாப்பாடு தான் கூடவே இருந்து கெடுப்பவன். ஜாக்கிரதை. சாத்வீக உணவு சால சிறந்தது. மனதை கட்டுப்படுத்த அவசியம். உடம்புக்கும் நல்லது.  நிறைய  பால், கீரை வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள்,மோர் சேர்த்துக்கொள்.

10.குறைந்தது ஒன்றிரண்டு மணி நேரமாவது மௌனம் பழகிக் கொள். நீ மாறிவிடுவாய்.

11.மூச்சை நன்றாக நிதானமாக  உள்ளிழுத்து, அதேபோல் நிதானமாக வெளியேற்று. இது தான் பிராணாயாமம். நிறமிர்ந் நில், உட்கார்.

12. பிறர் பேசும்போது கவனமாக கேள். குறுக்கே பேசாதே.

13. வாதம் விவாதம் வேண்டாம்.  அதற்கென்றே கருப்பு கோட்டு  இருக்கிறதே.யாரையும் தூக்கி எறிந்து  பேசாதே. உன் ஆத்மா தான் எதிராளியிலும் இருக்கிறான். மெதுவாக நிதானமாக பேசு.


​14 இந்த ஒன்பது வாசல் ஆலயத்திற்குள் ஆண்டவன் குடியிருக்கிறான். அதை சுத்தமாக அவனுக்கேற்றவாறு தெம்போடு வைத்துக்கொள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...