உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா சொல் கண்ணா? போகணும் என்று தோன்றினால் கூட எங்கே போவது? யாரை நாடுவது? எந்த வீட்டு வாசல் எனக்காக கோலம்போட்டு வரவேற்கப்போகிறது? என்னை யார் வரவேற்பார்கள்? நான் தான் அங்கே மனமொப்பி சந்தோஷமாக இருக்க முடியுமா?
உன்னைப்போல எல்லோரும் இருப்பார்களா கிருஷ்ணா, என்னை போஷித்து சந்தோஷமாக ஏற்று பாதுகாக்க? இருந்தால் யாராவது ஒருவர் பெயர் சொல்லி விரலை மடக்கு? இதை சொல்லும்போது என் மனதில் என்ன நினைவு திரை இடுகிறது தெரியுமா? குசேலன்! சுதாமா, உன் நண்பன், பரம தரித்ரன். அவன் கேட்காமலேயே நீ அவனுக்கு தேவையானவற்றை வாரி வழங்கினாய். என்னையும் உன் நண்பனாக எடுத்துக் கொள்ளேன்.
உன் அருள் இருக்கும்போது எனக்கு எதற்கு காமதேனு, கல்பதரு எல்லாம். அதெல்லாம் நீ தான் எனக்கு.என் மனதில் இரு, என்னை வாழ்த்து. அது ஒன்றே போதும் கண்ணா.
நான் மேலே சொன்னது சூர்தாஸ் அருமையாக பாடிய ஒரு கவிதையின் விளக்கம். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் என்று கொள்ள வேண்டாம். கருத்து புரிந்தால் போதுமே.
Tum taji aur kaun pe jaaun
kaake dware jai sar naaun par hath kahan bikaaun
aiso ko data hai samarathkiske diye aghaaun
rank ayaachi kiyo sudama diye abhaya pada thaau
kamdhenu chintamani dini kalpvriksha taru chhau
bhava samudra ati dekhi bhayanak man mein adhik deraaun
kijiye kripa sumiri apno pan surdas bali jaoon
No comments:
Post a Comment