Saturday, September 23, 2017

ஆஞ்சநேயன் மேல் சின்னதாக ஐந்து ஸ்லோகங்கள்




ஆஞ்சநேயன் மேல் சின்னதாக ஐந்து ஸ்லோகங்கள் ​ - J.K. SIVAN

இன்று​ காலை நங்கநல்லூர் 32 அடி உயர ஆஞ்சநேயனைச்சென்று வணங்க தோன்றியது. அவன் முன் நின்றபோது ஆஜானுபாகுவாக அந்த மஹா வீர, நவ வியாகரண பண்டிதன், என் மனதில் குடிகொண்டான். மனது மகிழ்ந்தது. இதயம் இனித்தது . திரும்பி வீட்டுக்கு ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த போது ஒரு தெரு முனையில் யாரோ ஒருவர் மற்றொருவனை ''சங்கரா'' என்று உரக்க கூப்பிட்டுக்கொண்டிருந்தபோது என்காதில் விழுந்த அந்த சொல் ஆதி சங்கரரை நினைவூட்டி அவரது ஹனுமத் பஞ்சரத்ன ஸ்லோகங்கள் எழுத தோன்றியது. ​ரெண்டு ரெண்டு வரிகள். அதீத பக்தி சாரம்.

ஹனுமா, அஞ்சனா புத்ரா, வாயு குமாரா, நினைத்தாலே இனிக்கும் நித்ய பரிபூர்ண தெய்வமே, புலன்களை கட்டுப்படுத்திய விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட திட வ்ரத ராம பக்தா, ​''ராம'' சப்தம் காதில் எங்காவது விழுந்தாலே, கண்களில் ஆனந்த பாஷ்பம் (கடைவிழி நீர் பக்தியால்) பிரவாகமாக கொட்டும் பரிசுத்த ராம தூதா, உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

वीताखिल-विषयेच्छं जातानन्दाश्र पुलकमत्यच्छम् ।
सीतापति दूताद्यं वातात्मजमद्य भावये हृद्यम् ॥ १॥

vītākhila-viṣayecchaṃ jātānandāśra pulakamatyaccham ।
sītāpati dūtādyaṃ vātātmajamadya bhāvaye hṛdyam ॥ 1॥

1.விதாகில விஷயேச்சம் ஜாதானந்தாச்ரு புலகமத்யச்சம்
ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
​​
तरुणारुण मुख-कमलं करुणा-रसपूर-पूरितापाङ्गम् ।
सञ्जीवनमाशासे मञ्जुल-महिमानमञ्जना-भाग्यम् ॥ २॥

taruṇāruṇa mukha-kamalaṃ karuṇā-rasapūra-pūritāpāṅgam ।
sañjīvanamāśāse mañjula-mahimānamañjanā-bhāgyam ॥ 2॥

​2.தருணாருண முககமலம் கருணாரசபூர பூரிதாபாங்கம்
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம்​

​ஹனுமான் யார்? வாயு. பிராணவாயு? உயிரை தக்கவைக்கும் ஆக்சிஜன். ​அவனை சிலிண்டரில் பிடித்து குழாய் வழியாக மூக்கில் ஏற்றவேண்டாம் . பக்தியோடு நினைத்தாலே நெஞ்சிலே நிறைபவன். சிவந்த தாமரை விழிகளின் கடை ஓரத்தில் கருணை நிறைந்தவன். அவன் மஹிமை சொல்லி மாளாதே . அஞ்சனா தேவி, நீ என்ன தவம் செய்தனை??!! பாக்கியசாலி தாயே.
​​
शम्बरवैरि-शरातिगमम्बुजदल-विपुल-लोचनोदारम् ।
कम्बुगलमनिलदिष्टम् बिम्ब-ज्वलितोष्ठमेकमवलम्बे ॥ ३॥

śambaravairi-śarātigamambujadala-vipula-locanodāram ।
kambugalamaniladiṣṭam bimba-jvalitoṣṭhamekamavalambe ॥ 3॥
3.சம்பரவைரிசராதிக மம்புஜதலவிபுலலோசனோதாரம்
கம்புகல மனிலதிஷ்டம் பிம்பஜ்வாலிதோஷ்டமேக மவலம்பே​

​ஆஞ்சநேயனின் வேகம் மனோவேகத்தை விட துரிதமானது. காமன் விடும் கணைகளை விட வேகமாக இலக்கை நோக்கி சென்றடைவது. வீர புருஷா உன் அழகிய சங்கு போன்ற கழுத்து என்னமாக ஜொலிக்கிறது. முத்துக்களோ உன் கண்கள். ஹனுமா, உன் பாதார விந்தங்களில் பணிகிறேன். ​வாயு தேவனுக்கு ''என்நோற்றான் இவன் ஹனுமனை மகனாக பெற'' என்று எல்லோரும் புகழ பெருமை அளித்தவனே.அழகிய செம்பவள, சிவந்த இதழ்களை கொண்ட மஹா வீரா! உன்னை நமஸ்கரிக்கிறேன்.

दूरीकृत-सीतार्तिः प्रकटीकृत-रामवैभव-स्फूर्तिः ।
दारित-दशमुख-कीर्तिः पुरतो मम भातु हनुमतो मूर्तिः ॥ ४॥

dūrīkṛta-sītārtiḥ prakaṭīkṛta-rāmavaibhava-sphūrtiḥ ।
dārita-daśamukha-kīrtiḥ purato mama bhātu hanumato mūrtiḥ ॥ 4॥

​4.தூரிக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருத ராமவைபவஸ்பூர்தி:
தாரித தசமுக கீர்தி:புரதோ மம பாது ஹனுமதோ மூர்தி :
​ஆஞ்சநேயா, ​ உன் திவ்ய சுந்தர ரூபம் காண ஆனந்தம் பரமானந்தம். உனக்கு சுந்தரன் என்று பெயராச்சே. உன் அழகு காண தெவிட்டுமா? உலகமாதா சீதாவின் துயர் தீர்த்தவனே, எங்கள் துயர் தீர்ப்பது உனக்கு கஷ்டமா? ராமனின் பராக்ரமம் வெளிப்பட காரண பூதா. மூவுலகும் அஞ்சும் மஹா பலசாலி ராவணனையே கலங்க வைத்தவனே . ஆஞ்சனேயா உன்னை வணங்குகிறேன்.

वानर-निकराध्यक्षं दानवकुल-कुमुद-रविकर-सदृशम् ।
दीन-जनावन-दीक्षं पवन तपः पाकपुञ्जमद्राक्षम् ॥ ५॥

vānara-nikarādhyakṣaṃ dānavakula-kumuda-ravikara-sadṛśam ।
dīna-janāvana-dīkṣaṃ pavana tapaḥ pākapuñjamadrākṣam ॥ 5॥

5.வானர நிகராத்யக்ஷம் தானவகுல குமுத ரவிகரஸத்சத்ருக்ஷம்
தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜ மத்ராக்ஷம்

​வானர யூதர்களின் முதன்மையானவனே. ​பனியை சுட்டெரிக்கும் சூரியன் போல் ராக்ஷஸர்களை அஞ்சும்படி செய்து வதைத்தவனே, வாயுதேவன் செய்த தவத்தின் பயனே, தீனர்களின் துன்பம் துயர் தீர்ப்பவனே உன்னை வணங்குகிறேன்.

एतत्-पवन-सुतस्य स्तोत्रं यः पठति पञ्चरत्नाख्यम् ।​​
चिरमिह-निखिलान् भोगान् भुङ्क्त्वा श्रीराम-भक्ति-भाग्-भवति ॥ ६॥

etat-pavana-sutasya stotraṃ yaḥ paṭhati pañcaratnākhyam ।
ciramiha-nikhilān bhogān bhuṅktvā śrīrāma-bhakti-bhāg-bhavati ॥ 6॥

​ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

​நண்பர்களே, சகோதர சகோதரியாரே, ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத் பாதர் அருளிய இந்த ஹனுமத் பஞ்ச ரத்னம் ​எனும் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்​ என்று இந்த ஐந்து ஸ்லோகங்கள்.


SEE THE BABY HANUMAN PICTURE ATTACHED ​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...