சூர் சாகரம்: ஜே.கே. சிவன்
நாம் ஆச்சர்யம் மேலிட்டு சந்தோஷமாக இருப்பதை ''மூக்கின் மேல் விரலை வைத்து'' என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்னை ஆட்கொண்ட மிகப் பெரிய ஆச்சர்யம் ஒரு ஓவியனின் கற்பனா சக்தி . கண் பார்வை அற்ற சூர்தாஸ் மூச்சுக்கு முன்னூறு அல்ல மூவாயிரம் கிருஷ்ண நாம ஜபம் செய்பவர். அதை அழகிய கவிகளால் வெளிப்படுத்துபவர். அதை கேட்கும்போது நம்மை எங்கோ தேவ லோகத்தில் கொண்டு செல்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குட்டியாக கிருஷ்ணனே நேரில் வந்து அவர் எதிரில் வந்து சப்பளாங்கால் கட்டிக்கொண்டு பதவிசாக அமர்ந்துகொண்டு இடது கன்னத்தில் கை வைத்து குனிந்து அவர் கவி பாடுவதை ரசித்துக்கொண்டிருக்கிற மாதிரி எப்படி அந்த ஓவியனுக்கு வரையத்தோ ன்றியது. கிருஷ்ணன் கண்களில் ஆச்சர்யம், புன்முறுவல். ''ஹே சூர்தாஸ் தாத்தா, நான் செய்தது பெரிதல்ல, நீ அதை ராகமாக செவியினிக்க பாடி நேரில் நடந்ததைப் பார்த்தாற்போல் பாடுவது தான் அபூர்வம்'' என கிருஷ்ணன் சொல்வதைப் போல் ஓவியம் தீட்டிய நீ யார் அப்பா? ஆனால் நீ மிக உயர்ந்த கிருஷ்ண கடாக்ஷம் பெற்றவன் என்று மட்டும் நிச்சயமாக சொல்வேன்''
++
வழக்கமாக அந்த யானை ஆற்றில் இறங்கி குளித்து விட்டு தாமரை மலரைப் பறித்து விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்யும். எனவே அன்றும் வழக்கம் போல் நீரில் இறங்கியபோது தானா ஒரு பெரிய பசித்த முதலை அதன் ஒரு காலை பிடித்துக்கொண்டு நீரில் ஆழத்துக்கு இழுக்கவேண்டும்? யானை எவ்வளவோ முயன்றும் தப்ப முடியவில்லை. முயற்சி சகதி ரெண்டுமே இழந்து அந்த கஜேந்திரன் ஆதிமூலமே என்று கதறுகிறான். ஆதிமூலம் காதில் விழுந்தால் சும்மாவா இருப்பான்? கருடாரூடனாக வந்த விஷ்ணு, ''நீ போய் உன் வேலையைச் செய்'' என்று சுதர்சன சக்ரத்தை வீச, அது முதலையை மோக்ஷத்துக்கு அனுப்பி கஜேந்தரனின் காலுக்கு வந்த ஆபத்தை முதலையின் தலையோடு போக செய்கிறது. இது தான் கஜேந்திர மோக்ஷ கதை.
++
''ஓ கோவிந்தா, ஹே கோபாலா, இதோ நான் ஒவ்வொரு நொடியும் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறேன். உன் திருவடி நிழலைத்தா. நீரில் இறங்கினேன் வழக்கம் போல்.ஆனால் வழக்கம் இல்லாமல் ஒரு முதலையிடம் சிக்கிக் கொண்டேன். என் காலை க் கவ்விய அந்த முதலை என்னை ஆழத்துக்கு இழுக்கிறது. தரையில் அதை எப்போதோ கொன்றிருப்பேன். நீரில் அதன் சக்தி அதிகம். என் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டிருக்கிறதே. முயன்ற வரை என் சக்தி விரயமானது தான் மிச்சம். இதோ என் வாய் கண் காது மூக்கு எல்லாமே நீரில் மூழ்க போகிறதே. அவ்வளவு தான் என் வாழ்க்கை. இதோ கடைசியாக முடிந்தபோதே ''கிருஷ்ணா என்று சொல்லிவிடுகிறேன். நந்த குமரா, நந்தப்ரியா, என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று '' என்று அந்த கஜேந்திரன் சொல்வது போல் ஒரு அருமையான பாடலை சூர் தாஸ் பாடியிருக்கிறார். அது இது தான்:
Hey govind hey gopal
rakho sharan ab to jeevan haaren
neer piyan hetu gaya sindhu ke kinaare
sindhu beech basat grah paav dhari pachhade
charon pahar yuddh bhayo le gayo majhdhaare
naak kaan duban laage krishna ko pukaaren
sur kahe shyam suno sharan hain tumhaare
abki baar paar karo nand ke dulaare
No comments:
Post a Comment