Thursday, September 7, 2017

ஜெயதேவரின் கீத கோவிந்தம்





ஜெயதேவரின் கீத கோவிந்தம் - J..K. SIVAN

''வேத வியாஸா , கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம், நாம ஸ்மரணை ஒன்றே பக்திமார்கம். எனவே நீ பூமியில் அவதரித்து மற்றவர்க்கு வழிகாட்ட நான் சங்கல்பிக்கிறேன்.

வியாசர் ஒரிசாவில் துந்துபில்வா எனும் கிராமத்தில் ஒரு ப்ராமண குடும்பத்தில் ஜெயதேவராக அவதரிக்கிறார். அவர் இயற்றிய வேதங்கள், சாஸ்திரங்கள் புராணங்கள், இதிகாசம் எல்லாம் கற்பது அவருக்கே கஷ்டமா. எனவே ஜெயதேவர் அவர் தோன்றிய 12ம் நூற்றாண்டில் ஏற்கனவே கிருஷ்ண நாம ஜபம் பிரசித்தியாக இருந்தபோதிலும், இவர் கிருஷ்ண லீலைகளை பாடலாககீதகோவிந்தம் என்ற பெயரில் எழுதினர். இவை பத்மபுராணத்தை அடியொற்றியது.

முழுக்க முழுக்க கீத கோவிந்தத்தில் ராதா-மாதவ பிரேமையையும், கோகுலத்தில் கிருஷ்ணனின் லீலைகளைப் பற்றி அம்ருதமாக பாடியிருக்கிறார். பிரபலமாக இன்றுவரை எல்லோரும் அவற்றை பாடி மகிழ்விக்கிறார்கள்.

ஜெயதேவர்பூ வாழ்ந்த காலத்தில் பூரியை ஆண்ட ராஜாவும் கூட ஸ்ரீகிருஷ்ணனை பற்றிய பாடல்களை புத்தகமாக எழுதி, அதையே மக்கள் ஏற்க வேண்டும் என கட்டாய படுத்தி மக்கள் அதை விரும்பாததால் ஜெயதேவர் ராஜா ஆகிய இருவரின் புத்தகங்களையும் ஸ்ரீ ஜகன்னாதர் ஆலயத்தில்வைத்து பூட்டி சிறந்ததை ஸ்ரீ கிருஷ்ணரே தீர்ப்பு செய்யட்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு அன்று இரவு அவ்வாறே செய்தனர்.

மறுநாள் காலை சந்நிதானம் திறந்து பார்க்கையில் ஸ்ரீ ஜெயதேவரின் பாடல்கள் மட்டுமே அங்கு இருந்தது. அரசரின் புத்தகம் வெளியே கிடந்தது இதனால் தலைகுனிவு கொண்ட அரசன் ஸ்ரீ ஜகன்னதரிடம் பலவிதத்திலும் மன்னிப்பு கேட்டு, தன்னை ஏற்குமாறு வேண்டினார்.

வியாசரின் அவதாரமான ஜெயதேவரின் கீத கோவிந்தம் 24 கானங்களான ராச லீலைகள். கீத கோவிந்தந்தை பாடுவோரின் எல்லாவிதமான இன்னல்களும் ஸ்ரீஹரியின் அருளால் சூரியனைக்கண்ட பனிபோல் விலகி ஹரிபக்தர் ஆவர்கள் என்பது நிதர்சனம்.


मेघैर्मेदुरमम्बरम् वनभुवः श्यामास्तमालद्रुमैः
नक्तम् भीरुरयम् त्वमेव तदिमम् राधे गृहम् प्रापय।
इत्थम् नन्दनिदेशितश्चलितयोः प्रत्यध्वकुञ्जद्रुमम्
राधामाधवयोर्जयन्ति यमुनाकूले रहःकेलयः॥ १-१

ஜெயதேவர் கண்ணை மூடி வனத்தில் தனிமையில் ஒரு மரத்தடியில் கையில் ஓலைச்சுவடியை தயாராக வைத்துக்கொண்டு யோசிக்கிறார். அட அவர் எப்போது உடனே, எப்படி, பிருந்தாவனம் சென்றடைந்தார். தூர ராதை நிற்கிறாள், சிறுவன் கண்ணன் தாமல மரத்தடியில் விளையாடுகிறான்.

அப்பா நந்தகோபன் மேலே பார்க்கிறார், கரியவானம், கண்ணன் பயல் போலவே இருண்டு கவிந்து நிற்கிறது. பெரிய மழை எந்த கணமும் பொழியப்போகிறது. இருட்டு எங்கும் சூழ்ந்து விட்டது. காற்று பலமாக வீசுகிறது.

''ஹே ராதா, மேலே பார்த்தாயா, மேக கூட்டத்தை வானத்தில், கருமையான தாமலா மரங்கள் காடுகளில் இருள் சூழ்ந்து விட்டது. இரவு வேகமாக நெருங்கி விட்டது. போ சீக்கிரம் இந்த பயலை வீட்டுக்கு அழைத்துப் போ'' என்கிறார் நந்தகோபன்.

''சரி மாமா'' ராதா மாதவனை கையை பிடித்து அணைத்து வீட்டுக்கு அழைத்து போவதுபோல் நடக்கிறாள். மரங்கள் இடையே நகர்ந்து நந்தகோபன் கண்ணிலிருந்து மறைகிறாள். வீட்டுக்கா போவார்கள் அவர்கள்?. அதற்கா அங்கே வந்திருக்கிறார்கள்? மழை வந்தாலே கொண்டாட்டம் தானே. அது தான் இன்னும் வரவே இல்லையே. ஓட்டம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். ஒவ்வொரு மரமாக சுற்றி அமர்ந்து ஏறி யமுனைக்கரையில் சோலையில், கொடிகள் மலர்கள் இடையே இரு மலர்களாக விளையாடுகிறார்கள் கண்ணனும் ராதையும். பூலோகம் வைகுந்தமாகிறது.

ஜெயதேவரின் தாய் மாமன் கண்டிப்பானவர். இந்தப் பயல் வேலை வெட்டி எதுவும் செய்யாமல் மோட்டுவளையை பார்த்துக்கொண்டு கற்பனையில் ஈடுபடுகிறான் என்று கோபிப்பார். உன்னோடொத்த பையன்கள் எங்காவது ஏதாவது ஒரு வேலைக்கு செல்கிறார்கள் நீ சும்மா காலத்தை வெட்டியாக கழிக்கிறாயே என்பார்.

''மாமா, நான் சும்மா இல்லை. ஒரு பெரிய கவிஞனாக வருவேன். என்னால் அந்த கடவுளை கண்ணுக்கு நேரே தோன்றும்படியாக எழுத்தில் கொண்டுவர முடியும்'' என்கிறார் ஜெயதேவர்.

''யார் டா அந்த கடவுள், எப்படி அவரை கவிதையில் கொண்டுவந்து காட்டுவாய் பார்க்கிறேன்'' என்கிறார் மாமா.

அப்போது எழுதிய பாடல் இது.

वाक् देवता चरित चित्रित चित्त सद्मा पद्मावती चरण – चारण
चक्रवर्ती श्री वासुदेव रति केलि कथा समेतम् एतम् करोति जयदेव कविः प्रबन्धम्

இந்த ஜெயதேவன் சாமான்யன் அல்லன் . அவன் ஒரு கவிச் சக்கரவர்த்தி. சரஸ்வதி அவன் நாவில் ஆத்மாவில் குடிகொண்டு சகல வல்லமையும் நிரப்பியிருப்பதால் அவனால் சொலலலங்கார மாளிகை கட்ட முடியும். அவன் எழுதுகிறான் இந்த அற்புத ராதா கிருஷ்ணன் ப்ரேமையை ராஸலீலையை கீத கோவிந்தத்தை நேரில் கொண்டு வந்து தத்ரூபமாக காட்டியவாறு ... [1-2]

ஜெயதேவர் பாடல்கள் இயற்றியவாறு ஆடுவார். அவர் மனைவி பத்மாவதி ஒரு நாட்டிய சாஸ்திரம் அறிந்த பெண்மணி. எனவே அவளும் அபிநயிப்பாள். இங்கேயே அந்த ஸ்லோகத்தில் காணும் ராதா கிருஷ்ணா காட்சி ரிஹெர்சல் தொடங்கிவிடும்.

यदि हरि स्मरणे सरसम् मनः यदि विलास कलासु
कुतूहलम् मधुर कोमल कांत पद आवलीम् शृणु तदा जयदेव सरस्वतीम्

ஓ என்னருமை மக்களே, கிருஷ்ணனை மனதில் இருத்தி அந்த பக்தி கர்ணாம்ருதத்தில் மனம் பெருத்து திளைக்கவேண்டுமா. கிருஷ்ணனுடன் விளையாடும் கோபியர் ஆசா பாசங்களை பொய்க்கோபங்களை அறியவேண்டுமா? எங்கும் தேட வேண்டாம். இதோ இங்கே ஜெயதேவரிடம் வாருங்கள். இந்த கானாம்ருத இனிய நேராக ஓடும் நதி போன்ற ஸ்லோகங்களில் அதை பெறுவீர்கள்''. என்ன தைர்யம் தன்னம்பிக்கை ஜெயதேவருக்கு. ஆமாம் அவரால் பீற்றிக்கொள்ள முடியும். கொண்டை இருப்பவள் முடிந்து கொள்கிறாள்.



கீத கோவிந்தம் தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...