''காலையில் வந்தேன் ஏதோ பூஜை பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு தோணியது. போய்ட்டேன்.''
''இன்னிக்கு
யஞஉபவீத
உபாகர்மம்- இது ஒரு அற்புதமான சடங்கு. எப்படி சார்?
சத்குரு சேஷாத்திரி ஸ்வாமிகள் மிகவும் உயர்வாக போற்றியது காமோகர்ஷீத் ஜபம். இன்று யஜுர்வேதம் சார்ந்தவர்கள் ஆவணி அவிட்டம் (ஷ்ரவண பூர்ணிமா) கொண்டாடினோம். ரிக் வித சாமவேத சார்பினர் வேறொரு தினத்தில் உபாகர்மம் கொண்டாடுவார்கள்.
இதை புரிந்து கொண்டு உபாகர்மம் செய்தவர்கள் எத்தனை பேர். இன்று ஒருநாளாவது 1008 முறை காமோகார்ஷீத் மன்யூர் அகார்ஷீத் ஜபம் செயகிறோம். அதன் அற்புத அர்த்தம் என்ன தெரியுமா?
வருஷத்துக்கு ஒரு நாள் பிராயச்சித்தம் தேடுவது. வேதத்தை அதற்குண்டான காலத்தில் அறிந்து கொள்ளாததற்கும், அந்த வருஷம் பூரா செய்த பாபங்களிலிருந்து விடுபட வேண்டுகோள் மன்னிப்பு கேட்பது தான் இந்த உபாகர்மம்.
இந்த உலக வாழ்வில் தெரிந்தோ தெரியமாலோ எண்ணற்ற பாபங்களை புரிகிறோம். எந்த செயலுக்கும் எதிர்மறையான விளைவு உண்டு. எல்லாம் கர்ம பலன். காமோகார்ஷீத் என்பது செய்த எல்லா பாவங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம். காமம் என்பது ஆசை, மன்யு என்பது கோபம். இந்த ரெண்டாலும் விளைவது எல்லா தகாத செயல்களும் பாபங்களும். இந்த வருஷம் பூரா நான் இந்த ரெண்டாலும் சேர்த்துக்கொண்டு செய்த பாபங்களை மன்னித்து விடு என்று வேண்டுவது தான் காமோகார்ஷித் ஜபம். இந்த ஜபம் மகா நாராயண உபநிஷதத்தில் இருக்கிறது.
ஆவணி அவிட்ட உபாகர்மா செய்யும்போது இன்று குறைந்தது 1008 முறையாவது ''காமோகர்ஷீத் மன்யுரகார்ஷீத் நமோ நம:'' என்று ஜெபிக்கிறோம். ஆசை கோபத்தால் நான் செய்த பாபங்கள் விலகட்டும் என்று வேண்டுவது.
காஞ்சிபுரத்தில் இளம் வயதில் சேஷாத்திரி ஸ்வாமிகள் எண்ணற்ற ஜெபங்களில் பிரார்த்தனையில் ஈடுபடுவார். அவரைப் பார்த்த பெரிய பண்டிதர்கள் வித்தகர்கள் ''அட இந்த சின்னப்பயல் ஒரு மூலையில் கோவிலில் அமர்ந்து ஏதோ உச்சரிக்கிறானே'' என்று வியந்தவர்கள் அவரை அணுகி
"
ஏ பயலே, என்ன பண்றே ஏதாவது மந்திரம் ஜெபிக்கிறியோ ?
"
ஆமாம், கர்மா தொலையவேண்டாமா. அதனாலே ஜபம் பண்றேன்'' -- சேஷாத்திரி ஸ்வாமிகள் சிறிய பையனாக.
"
அட. பலே பையா. சரி அதுக்கு என்ன மந்திரம் ஜெபிக்கிறே?''
''வேறென்ன மந்திரம் இதுக்கு. காமோகர்ஷீத் நமோநம: காமோகர்ஷீத் காம கரோதி நாஹம் கரோமி. காமா கர்த்தா நாஹம் கர்த்தா; காமா காரயிதா நாஹம் காரயித: யேஷா தே காம காமாய ஸ்வாஹா:''
"Kamokarsheet namo namah: Kamokarsheet
kamah karoti naaham karomi
kamah karta naham karta
kamah kaarayitaa naham kaarayita;
Esha the kaama kaamaaya swaha:
மன்யுர கார்ஷீத் நமோ நம: மன்யு அகார்ஷீத் மன்யு காரோட்டி நாஹம் கரோமி, மன்யு கர்த்தா நாஹம் கர்த்தா; மன்யு காரையித நாஹம் காரயித : ஏஷா தே மன்யோ மன்யவே ஸ்வாஹா: ''
Manyurakaarsheet namo namah: Manyuh akaarsheet
manyuh karoti naham karomi
manyuh karta naham karta
manyuh kaarayita naham kaarayita;
Esha the manyo manyave swaha:"
நான் இதெல்லாம் ஜபிக்க வேண்டியதில் பாதி தான் முடிச்சிருக்கேன். இன்னும் மீதி இருக்கே கர்மம் தொலைய'' என்றான் சிறுவன் சேஷாத்திரி.
''ஆசை செயல் புரியவைத்தது. ஆசை தான் செயலை செய்தது. எனவே என் செயலுக்கு காரணம் ஆசை. நான் இல்லை. ஏ ஆசையே உன் சக்தியே சக்தி உனக்கு என் ஜபம் பதில் சொல்லட்டும் ''
அதேபோல் கோபம் தான் செயலுக்கு காரணமாக செய்வித்து. கோபம் விளைவித்த என் செயலுக்கு அது தான் பொறுப்பே தவிர நான் பொறுப்பல்ல. செயலின் வேலையாள் கோபம். அந்த கோபம் தான் செய்பவனை ஆட்டிப் படைக்கிறது. ஏ கோபமே, என் ஜபம் உன் செயலை எதிர் கொள்ளட்டும்.''
ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார் சேஷாத்திரி ஸ்வாமிகள் அப்போது அந்த சின்ன வயதிலும்.
''பண்டிதர்களே, நீங்களும் இப்போவே இந்த ஜெபங்களை சொல்லுங்கோ. அது தான் உங்கள் கர்மாவை கொல்லும் . கர்மாவை தொலைக்காம நீங்க எப்படி மோக்ஷம் அடைய முடியும்?'' என்றான். கோவில் தூண் மட்டும் கல் அல்ல. அத்தனை பண்டிதர்களும் அப்போது அந்த காஞ்சிபுர கோவிலின் கூடுதல் தூணாக நின்றார்கள்.
No comments:
Post a Comment