Thursday, September 21, 2017

ஒரு சிந்தனைக் கீற்று ​




ஒரு சிந்தனைக் கீற்று ​-  J.K. SIVAN 
என்ன தான் சிறப்பாக எழுதினாலும், முகத்தில் தோன்றும் ஒவ்வொரு கண உணர்ச்சியையும், ​உணர்ச்சியால் தழுதழுக்கும் குரலையும் உடலில் ஏற்படும் உணர்வுகளையும் இப்படித்தான் என்று எழுதவே முடியாது. அது ஒவ்வொருவரும் தனித்தனியே அனுபவிக்க வேண்டிய ஒரு அற்புதம்.
வாழ்த்துக்கள் அனுப்பும்போது நாம் ஏதோ கடையில் கிடைத்த அட்டையை விலை பேசி வாங்கி ஒருவருக்கு அனுப்பும் வழக்கம் இன்னும் இருக்கிறது. நிறைய பேர் இப்போது என்னென்னவோ பொம்மைகள் போட்டு வாழ்த்து செய்திகளை வாட்சாப் FB ஈமெயில், மெஸ்சேஞ்சுர் என்று இதில் எதிலோ நிறைய அனுப்புகிறார்கள். சில பொம்மைகள் ஆடுகிறது, அசைகிறது ஏதோ பேசுகிறது கண் சிமிட்டுகிறது. கையால் ஒரு கடிதம் எழுதி அனுப்பினால் அதற்கு தனி அந்தஸ்து. டைப் அடித்து அனுப்புவதும் இதில் சேர்ந்தது தான். கம்பியூட்டரில் இப்போது இதற்கெல்லாம் வசதி இருக்கிறது.

போனில் கூப்பிட்டு என்னப்பா சௌக்கியமா என்று சொல்லும்போதும் அதை கேட்கும்போ தும் இருக்கும் சந்தோஷம் மேலே சொன்னதெல்லாம் தராது.
அதைவிட ஆனந்த அனுபவம் நேரிலே ஒருவரை சந்திப்பது. உணர்வுகள் சொல்லாமலே வெளிப்படும். அதை உள் வாங்கி அனுபவிப்பது அதைவிட சுகம். வார்த்தைகளை விட உணர்வுகள் அதிகமாக பேசும்.
​FB ​ ​சொல்கிறது எனக்கு 21 நாளில் இந்த மாதம் 150க்கு மேல் நண்பர்களாம்! ​ எத்தனை பேர் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள்? எனக்கு 500O​க்கு மேல் முக நூல் நண்பர்கள் ​என்பது எனக்கு அதிக பொறுப்பை தருகிறது. எல்லோரும் என் இடுகைகளால் இணைந்தவர்கள். எனவே அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விஷயங்களை மென்மேலும் இன்னும் நிறைய தர நான் உழைக்க முயல்வேன். நேரமும் வயதின் கோளாறும் ஒத்துழைக்க கிருஷ்ணன் உதவட்டும். என்னுடைய குரூப் நண்பர்கள் முடிந்தபோது சந்திப்போம்.
12.11.17 அன்று ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய உத்தேசம். அதுபற்றிய அறிவிப்பு சீக்கிரமே இந்த குரூப் செய்தியாக வரும்
​​​ஒரு விஷயம். ஏதாவது கவலையாக இருக்கும்போதோ, கோபமாக இருக்கும்போதோ கடிதம் , கட்டுரை எழுதக்கூடாது. விளைவு எதிர்பார்த்தது போல் இருக்காது!!​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...