Friday, September 8, 2017

குருக்ஷேத்திர நீதி.



குருக்ஷேத்திர நீதி.........J.K. SIVAN

ஓ இது தான் மயான அமைதியோ? ஒரே நிசப்தமான அசையாத பிணக்குவியல்கள். அத்தனை பிணங்களும் என்னவாக பேசியவை. எவ்வளவு வீரமான சொற்கள். படைகள், பலசாலிகள். இதோ காக்கை நாரி கழுகு ஓநாய் தான் அவற்றை சுற்றி. மற்ற உறவினர்கள் வீராதி வீர பணியாட்கள், நாடு நகரம், யானை குதிரை எங்கே அவை எல்லாம்?

சஞ்சயன் சுற்றிலும் பார்த்தான். 18 நாள் யுத்தம் முடிந்த இடம் எல்லா உயிர்களையும் குடித்து விட்டு மிஞ்சிய ரத்தத்தை வெளியே ஆறாக ஓடிஏ விட்டிருந்தது.
அன்றைய அவனுக்கு தெரிந்த உலகத்தில் முழுதுமே காணாமல் போன குருக்ஷேத்ரம். இங்கே தான் கிருஷ்ணனும் அர்ஜுனனும் தோட்டத்தில் மாங்காய் பறிப்பது போல் உயிர்களை சூறையாடினார்களோ. எறும்பு புற்றின் மேல் நடந்து நசுக்கிய யானையாக பீமன் கௌரவ சேனையை அழித்தானோ.

''உனக்கு அதெல்லாம் புரியாதடா'' என்றது ஒரு குரல்.

யார் அது என்று திரும்பிப்பார்க்க சஞ்சயன் முன் ஒரு காவி உடை கிழவன்

''உண்மையிலேயே யுத்தம் என்றால் என்ன என்று புரிந்தால் தான் குருக்ஷேத்திர யுத்தம் அர்த்தம் புரியும் ''

'' சுவாமி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றான் சஞ்சயன். ஓஹோ இவர் யாரோ ஒரு மஹான். அனைத்தும் அறிந்தவர் என்று தோன்றுகிறதே. இந்த யுத்தத்தை முழுதும் உணர்ந்தவர் போல் இருக்கிறதே. மஹாபாரதம் ஒரு கதையல்ல, ஒரு தத்துவம் என்று உணர்த்துகிறாரோ?''
“ஆமாம் தத்துவம் தான் சொல்கிறேன் கேள் என்று அவன் மனதை அறிந்தவர் போல் பேசினார் அந்த கிழவர்.

“எல்லாம் உனக்குள்ளே நடப்பது தான் பெரிதாக இங்கே குருக்ஷேத்திர வெள்ளித்திரையில் படமாக ஓடியது.... பாண்டவர் யார்? உன்னுள்ளே இருக்கும் ஐந்து புலன்கள் . கௌரவர்கள் யார் தெரியுமா?

தெரியவில்லையே சுவாமி, சொல்லுங்கள்.

“உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் நூறு தப்பிதங்கள். ஒவ்வொருநாளும் உன்னுடைய ஐந்து புலன்கள்அவற்றோடு போராடுகிறதே. எப்படி என்று தெரியுமோ?''

''நான் என்னத்தை கண்டேன் சுவாமி, சொல்லுங்கள் ''

“ உன் மனோ ரதத்தில் கிருஷ்ணன் குதிரைகளை ஓட்டும்போது. கிருஷ்ணன் தான் உன் அந்தர்யாமி ஆத்மன். உள்ளிருந்து குரல் கொடுப்பவன். வழி காட்டி. அவன் உன்னை செலுத்தும்போது உன் வாழ்க்கை குதிரை ஜோராக ஓடும். துளி கூட கவலையே வேண்டாம்.''

ஒரு சந்தேகம்?கெட்டவர்கள் என்று தெரிந்தும் ஏன் பீஷ்மாச்சார்யார், த்ரோணர்கள் கௌரவர்களுக்கு உதவி யுத்தம் புரிந்தார்கள்?''

'வயது மட்டும் ஒருவனை பெரியவனாக்கிவிடாது. தவறு செய்வது எல்லோர்க்கும் உண்டானது தான். தெரிந்து செய்வது தான் குற்றம். அதற்கு யாராயிருந்தாலும் தண்டனை பெற்று தான் ஆகவேண்டும். பெற்றார்கள். பாண்டவர்கள் அவர்களையும் போரிட்டு அழிக்கத்தான் வேண்டியிருந்தது. அதை புரிந்து கொள்ளத்தான் கிருஷ்ணன் கீதை உபதேசித்தான்.”

சஞ்சயன் தலையில் கை வைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தான். கிழவரின் வார்த்தைகள் நச்சென்று உரைத்தது அவனுக்கு.

அப்படி என்றால் கர்ணன் என்பது...."

''ஆஹா. கர்ணன் என்பது உனது புலன்களோடு ஒட்டிய உறவு. சகோதரன் மாதிரி. அதன் பெயர் ஆசை. ஆசையால் தான் எல்லா துன்பங்களும் விளையும். திருமூலர் சொன்னது நினைவிருக்கிறதா. ஆசை பாடப்பட ஆகி வரும் துன்பங்கள். ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்...தவறுகளை செய்ய தூண்டிவிடுவது தான் ஆசை. கௌரவர்களுக்கு கர்ணன் போல...''

சஞ்சயன் யோசித்தான். எண்ணற்ற சிந்தனைகள் மனதில் ஓடின. குருக்ஷேத்திர பூமியை மீண்டும் சுற்றி முற்றிலும் பார்த்தான். ஓ ஆசையினால், பேராசையால் விளைந்த பெரு நஷ்டம்.. முகம் வியர்த்தது. மனம் பட பட வென்று அடித்து கொண்டது. உண்மை புலப்பட்டது. அந்த கிழவரை நோக்கி பேச திரும்பினான்.

எங்கே கிழவர்? அங்கே வாழ்க்கை தத்துவம் அன்றோ உருவமின்றி புலப்பட்டது........

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...