நங்கநல்லூர் கிளையின் திருக்கோவில் வழிபாட்டு குழு செய்தி - J.K. SIVAN
வள்ளுவப்பாக்கம் ஸ்ரீ மனோன்மணி சமேத
தான்தோன்றிஸ்வரர் ஆலயம்
எங்கள் நங்கநல்லூர் கிளை திருக்கோயில் ஆலய வழிபாட்டு குழு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிறு அன்று பகல் 1 மணிக்கு எங்கள் வீட்டுத்தெரு கன்னிகா காலனி 2ம் தெருவில் உள்ள திருமால் மருகன் ஆலயம் அருகே இருந்து சங்கரா கண் மருத்துவ மனை பஸ்ஸில் புறப்படும். முடிந்தவர்கள் கட்டாயம் வந்து சேர்ந்து கொள்ளலாம். காஞ்சி மட அனுகிரஹத்தில் அவர்களால் அறிவிக்கப்ப
டும்.
பழைய ஆலயங்களை அடைந்து அங்கே அர்ச்சனை, அபிஷேகம், வஸ்திரம் அணிவித்து சிவன் கோவில்களை பராமரிக்க உள்ளூர் மக்களுக்கு வழிகாட்டி உள்ளூர் மக்களுக்கு பிரசாதம் அளித்து விட்டு திரும்புவோம். அதே ஆலயத்துக்கு ரெண்டாவது முறையாக அடுத்து வரும் மாதத்தில் மூன்றாவது ஞாயிறன்று மேற்சொன்னவாறே சென்றடைந்து அப்போது உள்ளூர் பெண்களுக்கு திரு விளக்கு பூஜை, 5 ஜோடி முதிய தம்பதிகளுக்கு அவர்கள் சுற்றம் சூழலோடு தம்பதி பூஜை செய்வித்து, வழக்கம்போல் சிவபிரானுக்கு அர்ச்சனை, அபிஷேகம், ருத்ரம் சமகம் மந்திரம் சமர்ப்பித்து திரும்புவோம்.
நேற்று நாங்கள் சென்ற இடம் வாலாஜாபாத் வழியாக அய்யம்பேட்டை கிராமம் அருகே உள்ள வள்ளுவ பாக்கம் பழைய சிவன் கோவில். தான்தோன்றீஸ்வரர் (ஸ்வயம்பு) அம்பாள் மனோன்மணி. சிதிலமாக இருந்த இந்த ஆலயம் உள்ளூர் பெருமக்கள் ஒத்துழைப்பில் மீண்டும் உருவாகி வருகிறது. குறைந்தது ஆயிரம்/ஐந்நூறு வருஷ கோவில். வாலாஜாபாத்திலிருந்து 3 கி.மீ. முத்தியால்பேட்டை தாலுகாவை சேர்ந்தது. காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ. சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 70 கி.மீ.
அய்யம்பேட்டையில் வசிக்கும் ஸ்ரீதர் என்கிற அர்ச்சகர் மூன்று தலைமுறைகளாக இந்த ஆலயத்துக்கு சேவை செய்வதாக கூறினார். அருகிலே மன்னாரிஸ்வரர் பச்சையம்மன் ஆலயம் சிறப்பாக உள்ளது. அண்டை அசல் கிராமத்து ஜனங்களில் 800 குடும்பங்கள் இந்த ஆலயத்தை வழிபடுகிறார்கள். பராமரிக்கி றார்கள் எங்கு அறிந்து மகிழ்ந்தேன்.
தான்தோன்ரீஸ்வரர் ஆலயம் அருகே பழைய குளம் ஒன்று சீர் குலைந்து காண்கிறது. உள்ளூர் மக்களும் மற்றவர்களும் இதை தூர் வாரி புனருத்தாரணம் செய்யவேண்டும். மஹா பெரியவா இந்த ஆலயத்திற்கு வந்து தங்கி பூஜை செய்து இருப்பதாக சொன்னார்கள்.
ஆலய வழிபாட்டில் கலந்துகொள்ள: 9884014569/9444078365
No comments:
Post a Comment