|| श्री कनकधारास्तोत्रम् ॥
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் 6 J.K. SIVAN
सरसिजनिलये सरोजहस्ते
धवलतमांशुकगन्धमाल्यशोभे ।
भगवति हरिवल्लभे मनोज्ञे
त्रिभुवनभूतिकरि प्रसीद मह्यम् ॥ १८॥
धवलतमांशुकगन्धमाल्यशोभे ।
भगवति हरिवल्लभे मनोज्ञे
त्रिभुवनभूतिकरि प्रसीद मह्यम् ॥ १८॥
Sarasija nilaye saroja hasthe,
Dhavalathamamsuka gandha maya shobhe,
Bhagavathi hari vallabhe manogne,
Tribhuvana bhoothikari praseeda mahye
Dhavalathamamsuka gandha maya shobhe,
Bhagavathi hari vallabhe manogne,
Tribhuvana bhoothikari praseeda mahye
ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்
இதோ பாருங்கள் மகா லட்சுமி நம் எதிரே தோன்றுகிறாள். அவள் எவ்வளவு லாகவமாக மென்மையான அந்த செந்தாமரை மீதமர்ந்து, ஒரு அழகிய தாமரையை கையிலும் ஏந்தியவாறு, சிவப்பு தாமரைக்கு எடுப்பாக வெள்ளை வெளேரென கண்ணை பறிக்கும் ஒளி கொண்ட ஆடை உடுத்தி, அழகிய வண்ண மலர் மாலைகள் அவளை அலங்கரிக்க, சந்தனம் பூசியவாறு, இனித்த முகத்தோடு ஹரி வல்லபி, நமது மனம் நிறைந்து காணப்படுகிறாள். மூவுலகும் செழிப்பில் வளத்தில் திளைக்க அருளும் செல்வியே மஹாலக்ஷ்மி தாயே, என் மீதும் சற்றே இரக்கம் காட்டி அருள பிரார்திக்கிறேன்'' என்கிறார் சங்கரர்
दिग् हस्तिभिः कनककुंभमुखावसृष्ट-
स्वर्वाहिनीविमलचारुजलप्लुताङ् गीम् ।
प्रातर्नमामि जगतां जननीमशेष-
लोकाधिनाथगृहिणीममृताब्धिपुत्री म् ॥ १९॥
स्वर्वाहिनीविमलचारुजलप्लुताङ्
प्रातर्नमामि जगतां जननीमशेष-
लोकाधिनाथगृहिणीममृताब्धिपुत्री
Dhiggasthibhi kanaka kumbha mukha vasrushta,
Sarvahini vimala charu jalaapluthangim,
Prathar namami jagathaam janani masesha,
Lokadhinatha grahini mamrithabhi puthreem.
Sarvahini vimala charu jalaapluthangim,
Prathar namami jagathaam janani masesha,
Lokadhinatha grahini mamrithabhi puthreem.
திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்
என்ன ஒரு அற்புதம் நடக்கிறது இங்கே பார்த்தீர்களா? எல்லா திக்குகளிலிருந்தும் அஷ்ட திசைகளிலிருந்தும் அஷ்ட திக் கஜங்கள் எனும் பெரும் யானைகள் கங்கை போன்ற புண்ய நதி தீர்த்தங்களை தங்க குடங்களில் சுமந்து உனக்கு அபிஷேகம் செய்ய வந்துவிட்டனவே. அம்மா என்னால் இயன்றது உன்னை போற்றி வணங்குவது மட்டுமே. லோக நாயகி, பிரபஞ்ச மாதா, சர்வ லோக நாயகனின் தேவி, அம்ருதத்தை ஈந்த சமுத்திர ராஜனின் தனயே , உன்னை வணங்குகிறேன்.
कमले कमलाक्षवल्लभे त्वं
करुणापूरतरङ्गितैरपाङ्गैः ।
अवलोकय मामकिञ्चनानां
प्रथमं पात्रमकृत्रिमं दयायाः ॥ २०॥
करुणापूरतरङ्गितैरपाङ्गैः ।
अवलोकय मामकिञ्चनानां
प्रथमं पात्रमकृत्रिमं दयायाः ॥ २०॥
Kamale Kamalaksha vallabhe twam,
Karuna poora tharingithaira pangai,
Avalokaya mamakinchananam,
Prathamam pathamakrithrimam dhyaya
Karuna poora tharingithaira pangai,
Avalokaya mamakinchananam,
Prathamam pathamakrithrimam dhyaya
கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:
மகா லட்சுமிக்கும் செந்தாமரைக்கும் அவ்வளவு அன்யோன்யம். ஒருவேளை அந்த மாதவனின் நயனங்கள் தாமரை இதழ்களை நினைவு படுத்துகிறதோ அவளுக்கு? அவள் பார்வையின் கண் வீச்சில் கடல் மடை திறந்தாற்போல் கருணை வெள்ளம் பாய்கிறதே, உலகமே அதில் திளைக்கிறதே, அதில் கொஞ்சம் என்மேல் இன்னும் படும் பாக்யம் எனக்கு கிடைக்கட்டும் தாயே. என்னிடம் உன்னை வணங்கும் நெஞ்சம் நீ குடியிருக்கும் ஹ்ரிதயம் தவிர ஒன்றுமில்லையே. நானோர் சந்நியாசி, ஏழையிலும் ஏழை. உன் கருணையை, இரக்கத்தை கொஞ்சம் ஏந்தும் ஒரு பாத்திரமாக என்னை ஆக்கிவிடு தாயே. உன்னையே சரணடைந்தேன் அம்மா.
स्तुवन्ति ये स्तुतिभिरमीभिरन्वहं
त्रयीमयीं त्रिभुवनमातरं रमाम् ।
गुणाधिका गुरुतरभाग्यभागिनो
भवन्ति ते भुवि बुधभाविताशयाः ॥ २२॥
Sthuvanthi ye sthuthibhirameeranwaham,
Thrayeemayim thribhuvanamatharam ramam,
Gunadhika guruthara bhagya bhagina,
Bhavanthi the bhuvi budha bhavithasaya .
ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:
இது ஏதோ கொஞ்சநேரம் பாடி மகிழற சினிமாப்பாட்டு இல்லை. ரொம்ப சக்திவாய்ந்த ஸ்லோகம். மஹாலட்சுமி காதிலே போய் விழற வாக்கியங்கள். இதை யாரெல்லாம் தினமும் பக்தியோடு சொல்கிறார்களோ அவர்கள் அந்த வேதங்களே உருவான, இந்த மூன்று உலகத்துக்குமே தாயான, ரம்யமான ரமாதேவியின் , மஹா லட்சுமி தேவியின் கடாக்ஷம் பெறுவார்கள். எள்ளளவும் இதில் சந்தேகம் இல்லை. சற்குணம், சகல சம்பத், தீர்காயுசு, எல்லோராலும் மதிக்கப்படும், போற்றப்படும் தகுதி எல்லாமே தானே வந்து சேரும் என்று உத்தரவாதம் கொடுக்கிறார் ஆதி சங்கர பகவத் பாதர். இதற்கு மேல் என்ன சொல்ல. சங்கரருக்கு இதை சொன்னதும் நடந்ததை சொன்னா அதுவே உங்களுக்கு ஒரு காரண்டீயாக இருக்கும் இல்லையா. சொல்றேன்.
கனக தாரா ஸ்தோத்ரம் சொல்லி முடிச்சவுடன், மஹாலக்ஷ்மி நேராக சங்கரர் முன் தோன்றுகிறாள்.
''எதுக்கு சங்கரா, என்னை ஸ்தோத்ரம் பண்ணினே ?''
''அம்மா, உன்னை விட்டா வேறே யார் கிட்டே நான் கேட்பேன்.சொல்லு. இதோ இந்த பரம ஏழை பிராமண ஸ்த்ரீ வீட்டிலே ஒரு மணி அரிசி கூட இல்லே. மனது ரொம்ப விசாலமாக இருக்கு எல்லோருக்கும் தான தர்மம் பண்ண வேண்டும் என்று. வசதியோ வழியோ இல்லை. அவள் மேல் கருணை வைக்கவேண்டும் தாயே. அவள் குடும்ப தாரித்ரியத்திலிருந்து விடுபட நீ அருள் பண்ணவேண்டும் அம்மா!
''சங்கரா, உனக்கு தெரியாததா. அவரவர் பண்ணிய கர்ம பலனுக்கேற்ப தான் வாழ்க்கை அமைகிறது. பிற உயிர்களுக்கு தான தர்ம உதவி செய்தவர்கள் அல்லவோ அடுத்த பிறவிகளில் அதன் பலனை சுபிக்ஷமாக அனுபவிக்க முடியும்? எதற்கு பரிந்து பேசுகிறாய்?
''ஆம் அம்மா. அறிவேன். என்றாலும் எனக்கு என்ன தோன்றிற்று என்றால், இந்த நிலையில், இந்த வாழ்க்கையில் பரம தரித்திரம் பிடுங்கி தின்னும் நிலையிலும் தனக்கென இருந்த ஒரே பழைய காய்ந்த நெல்லிக்கனியை எனக்கு பிக்ஷையாக மனமுவந்து அளிக்க எண்ணிய அவள் எண்ணத்திற்காக ஏதேனும் கைமேல் பலனாக தாங்கள் அருளவேண்டும் என்று தான் வேண்டினேன் தாயே. க்ஷமிக்கவேண்டும்'' என்று மன்றாடினார் சங்கரர்.
மனமகிழ்ந்த மஹாலக்ஷ்மி அடுத்த கணமே தங்க நெல்லிக்கனிகள் அந்த கிழவியின் வீட்டில் தங்க மழையாக பொழிந்தது.
அதுவே கனக தாரை. அதற்கு காரணமாயிருந்த சங்கரரின் ஸ்லோகங்கள் கனக தாரா ஸ்லோகங்கள். நண்பர்களே ஒன்று நினைவில் கொள்ளுங்கள், சங்கரர் வெறும் தன லட்சுமியாக மஹாலக்ஷ்மியை வேண்டவில்லை இந்த ஸ்லோகங்களில். அஷ்ட லட்சுமியாக அல்லவோ துதிக்கிறார். பலன் எப்படி இருக்கும் என்று கற்பனை குதிரையை தட்டி விடுங்கள்.
No comments:
Post a Comment