Wednesday, September 13, 2017

எடை போடவேண்டாம்





எடை போடவேண்டாம் - j.k. sivan

​ஆசாமிகளை எடை போடுவது என்று ஒரு வழக்கம் நமக்கு உண்டு. அவன் பேச்சு, நடை உடை பாவனையை ​வைத்து அவன் குணத்தை கணிப்பது தான் எடை போடுவது. காந்தியை வெள்ளைக்காரன்அவர் உடையை ''எடை'' போட்டு பாதி வெற்றுடம்பு பக்கிரி என்றான். உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாட்டின் தந்தை, ஒரு யுக புருஷர் என்று போற்றப்படுபவர் அவர்!
​மிகப்பெரிய மஹான்கள் பிச்சைக்காரர்களை விட கேவலமாக தோற்றம் அளிப்பார்கள். சதகுரு சேஷாத்திரி ஸ்வாமிகளை அரைப்பைத்தியம் என்றார்கள்.​
​ஒரு சின்ன கதை சொல்கிறேன்.

​ஒரு பெரிய தொழில் துறை விஞ்ஞானி காரில் போனான். வழியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் கார் புஸ் என்று உட்கார்ந்து விட்டது. டயர் பங்ச்சர். வேறு வழியின்றி தானே சக்கரத்தை கழற்றி ஸ்டெப்னி டயரை மாற்றினார். அப்போது தானா அவர் கீழே விழவேண்டும். கழட்டிய சக்கரத்தின் போல்ட்கள் அருகிலே இருந்த சாக்கடை குட்டையில் விழுந்து விட்டன. அடடா எங்கே போவது போல்ட்டுக்கு? எப்படி ஒரு சக்கரத்தை போல்ட் இல்லாமல் பொருத்துவது?. 2 கிமி தூரம் போனால் ஒரு சின்ன கிராமத்தில் கடை இருப்பதாக அறிந்தார். எப்படி போவது?
​அப்போது தான் ஒரு பிச்சைக்காரன் போல் ஒருவன் எதிரே வந்தான்.
''தம்பி எனக்கு உதவுகிறாயா?''
''சொல்லுங்க என்ன செய்யணும்?''
''இதோ பார் இந்த சக்கரத்தின் 3 போல்ட்டுகள் இந்த குட்டையில் விழுந்துவிட்டன. கொஞ்சம் எடுத்து கொடுக்கிறாயா?
''எதற்காக அந்த குப்பை போல்ட்? அது இல்லாமலே சமாளிச்சு அடுத்த ஊர்லே போய் போல்ட் வாங்கிக்கொள்ளுங்களேன்?
''எப்படிப்பா சமாளிப்பது? மூணு போல்ட் விழுந்துட்டுதே? நீ குட்டையிலிருந்து தேடி எடுத்துக் கொடுப்பா நிறைய பணம் தருகிறேன்?
''பணம் செலவே பண்ணவேண்டாம் நீங்க. மத்த மூணு சக்கரத்திலிருந்து ஒவ்வொரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தில் டைட் பண்ணுங்கோ. அடுத்த ஊர் வரை சௌகரியமாக போகலாமே?"
​பெரிய தொழில் விஞ்ஞானி எனக்கு தோன்றாதது எப்படி இந்த கிராமவாசிக்கு தோன்றியது? அவனை மூளை இல்லாத முட்டாள், என்று எப்படி தப்பு கணக்கு போட்டேன் ?'' வியந்தார் அந்த விஞ்ஞானி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...