ஆவணி அஷ்டமி குழந்தை
ஆவணி மாசம் அஷ்டமி நக்ஷத்ரம் என்றாலே கண்ணன் ஞாபகம் தானே வரும். கோகுலத்தில் அஷ்டமியில் பிறந்தவன் என்று கோகுலாஷ்டமி கொண்டாடுகிறோம். இன்று ஆவணி அஷ்டமி.
கிருஷ்ணன் யார், எதற்கு, எங்கு பிறந்தான் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். சத்யம் தர்மம் நேர்மை ஞாயம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி பாப கார்யங்கள் மேலெழுந்து அநீதி அக்கிரமம் தலை விரித்தா டும் போது பூமா தேவி அந்த துன்பம் தாங்காது துடித்தாள். பிரம்ம தேவன் படைக்கும் கடவுள், இதனை கண்டு பூமியில் தேவையற்ற இந்த பாரத்தை குறைக்க வழி தேடி, விஷ்ணுவிடம் முறையிட்டார். விஷ்ணு தானே பூமியில் அவதரித்து இவற்றுக்கு முடிவு கட்டுவதாக சங்கல்பித்து மானுடனாக வசுதேவன் தேவகி மகனாக அவதரித்தார். தேவகி கம்சன் என்கிற கொடுங்கோலனுடைய சகோதரி.
அவளை வசுதேவருக்கு மணம் செய்து கொடுத்தான் கம்சன். அன்று அவனுக்கு அசரீரி மூலம் ஒரு செய்தி வந்தது.
தேவகியின் குழந்தையால் தான் கம்சன் அழிவு என்று அதால் அறிந்து கொண்ட கம்சன் கோபமுற்று தேவகியை கொல்ல முற்பட்டபோது வசுதேவர் “”வேண்டாம், அவளை கொல்லாதே. உனக்கு அவள் மூலம் பிறக்கும் குழந்தை தானே யமன். அந்த குழந்தையை உன்னிடமே கொடுத்து விடுகிறோம்"
என்று வாக்களித்து அவள் உயிரை காப்பாற்றினார். கம்சன் விடவில்லை. அவர்கள் இருவரையுமே சிறையில் அடைத்தான்.
காலம் சென்றது. சிறை வாழ்க்கையிலேயே அவர்களுக்கு 7 குழந்தை பிறந்தது. கொஞ்சமும் இரக்கமின்றி அந்த 7 குழந்தைகளையும்
பிறந்தவுடனேயே வந்து கம்சன் கொன்று தீர்த்தான். வேலை முடியவில்லை அவனுக்கு! எட்டாவதாக ஒருநாள் அஷ்டமியன்று நள்ளிரவில் கிருஷ்ணன் பிறந்தான். அவன் பிறக்குமுன்
வசுதேவருக்கு விஷ்ணுவின் கட்டளை என்னவென்றால் "குழந்தை பிறந்தவுடன் அதை எடுத்துகொண்டு உன் நண்பன் நந்த
கோபன் ஊரான கோகுலத்துக்கு செல். அங்கு நந்தகோபன் பெற்ற குழந்தை தயாராக இருக்கும் அதை எடுத்துகொண்டு சிறைக்கு செல்" கிருஷ்ணன் பிறந்தவுடன் தூக்கிக்கொண்டு வசுதேவர் புறப்பட்டார். அவர் கை கால்களில் இருந்த சங்கிலி தானே கழன்று விழுந்தது. சிறை பூட்டு தானாகவே திறந்து கதவு வழிவிட்டது. காவலாளிகள் தடை செய்யாது நல்ல தூக்கத்தில் ஆழ்ந்தனர். கொட்டும் மழையில் ஒரு கூடையில் குழந்தையை தலையில் தூக்கிக்கொண்டு நந்தகோபன் ஊருக்கு செல்லும் வழி பூரா கூடையை ஆதிசேஷன் குடையாக காத்தது. யமுனை பிரவாகமாக ஓடியவள் ஒரு நேர்பாதையாக வழிவிட்டாள். நந்தகோபன் வீடு கதவு தானாகவே திறந்தது. யசோதை நந்தகோபனுக்கு அன்று பிறந்த பெண் குழந்தை மாற்றப்பட்டது. யாருக்குமே
எதுவுமே தெரியாமல் அத்தனையும் விசித்ரமாகவே நடந்தது
தெரியவில்லை. கிருஷ்ணன் என்று பெயரிட்டு நந்தகோபன் யசோதை தங்களுக்கு பிறந்த குழந்தையென அவனை வளர்த்தனர். சிறைக்கு பெண் குழந்தையுடன் மீண்ட வசுதேவர் கால் கை தானாகவே சங்கிலியால் பிணைக்க பட்டது. கதவு சாற்றிக்கொண்டு பூட்டு அதில் தானாகவே ஏறிக்கொண்டு காவலாளிகள்
தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு குழந்தை அழும் சத்தம் கேட்டு கம்சனிடம் ஓடி சென்று சேதி சொல்ல அவன் வழக்கம் போல வாளை உருவிக்கொண்டு அந்த எட்டாவது குழந்தையை கொல்ல வந்தான். கொல்லு முன் யோகமாயாவான
அந்த பெண் குழந்தை வானில் பறந்து அவனை நோக்கி சிரித்து
க்கொண்டே சொல்லிற்று "கம்சா, உன்னுடைய யமன் பிறந்தாயிற்று. நாளை எண்ணிக்கொள்" - சொல்லிவிட்டு அந்த பெண் குழந்தையாக வந்த யோக மாயா மறைந்தாள். கம்சனுக்கு தூக்கம் போயிற்று. யார் அந்த குழந்தை? எங்கே உள்ளது? என்று அந்த கணம் முதல் ஆளனுப்பி பிறந்த சிறு குழந்தைகளை எல்லாம் கொல்ல ஏற்பாடு செய்தான் கம்சன்.
உலகத்தில் கிருஷ்ணனை எப்போதும் நினைத்தவன் கம்சன் என்பதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? ஆனால் தன்னை காப்பாற்ற அவன் வேண்டவில்லை.
அப்படியிருந்தால் பக்தி ஆகிவிடுமே!! கிருஷ்ணனை கொல்லவே அவனை சதா காலமும் நினைத்து தேடினான். கோகுலத்தில் கிருஷ்ணன் நாளொரு அதிசயமும் பொழுதொரு விஷமமுமாக வளர்ந்தான்.
No comments:
Post a Comment