Monday, September 4, 2017

ஆத்மா பற்றி ஐந்து ஸ்லோகம்



ஆத்மா பற்றி ஐந்து ஸ்லோகம்.
ATHMA PANCHAKAM - J.K. SIVAN

சங்கரர் புரிகிறாரா? இந்த கேள்வியை ஐந்து வருஷங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் சத்தியமாக இல்லை. மணி சங்கரய்யர் தான் புரிகிறார் என்றிருப்பேன். நான் இப்போது சுனாமியாக மாறிவிட்டேன். ஆன்மிகம் என்னை ஆட்கொண்டுவிட்டது. அதில் திளைக்கிறேன்.

எனக்கு பேனாவில், பால் பாய்ன்ட் பேனாவில் எழுதும் பழக்கம் போயே போய் விட்டது.

என்று இந்த கம்ப்யூட்டரில் இங்க்ளிஷில் எழுதி அது தமிழாக வருகிறதை என் மகன் சொல்லிக் கொடுத்தானோ, அன்று எனக்கு மறுபிறவி. அது முதல் நான் வேறு உலகில் சஞ்சரிக்கிறேன். சுகானுபவம், சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு இங்க்ளிஷில் டைப் அடிக்க நன்றாக தெரியும். அதனால் என் மன அலைகளை, அசைவுகளை அப்படியே அவ்வப்போது சொல்ல இது உதவுகிறது. சுலபமாகவும் இருக்கிறது. என் உலகமே இது தான். ஆங்கிலத்தில் நான் வெளிப்படுத்தும் எண்ணங்கள் எனக்கே ஆச்சர்யமளித்து தமிழாக என் கண் முன்னே தோன்றினால் பின் எப்படி இருக்கும்?

நிறைய படிக்க முடிகிறது. சிலவற்றை எடுத்துச் சொல்லவேண்டும் என்கிற ஆசையில் நான் எப்ப
டி புரிந்து கொள்கிறேனோ, அப்படியே குட்டி குட்டி வாக்யத்தில், மூலத்திலிருந்து பிறழாமல் மூளையை கசக்கி தொந்தரவு பண்ணாமல் சொல்ல முடிந்தால் அது போதுமே.

இதை சில மாதங்களுக்கு முன்பு வாசித்து எழுதி வைத்தேன். எப்போதோ அனுப்பியும் இருக்கிறேன். மறுபடியும் படிக்க வேண்டிய விஷயம் தான். சில நல்ல சமாசாரங்களை, மகா பெரியவா போன்றவை, எத்தனை தடவை, யார் யாரோ சொன்னாலும் கேட்க ருசியாகத்தான் இருக்கிறது அல்லவா. இது இன்னும் கொஞ்சம் மகா மகா பெரியவா சொன்னது. ஆதி சங்கரர் எழுதிய ஐந்து ஸ்லோகங்கள். ஆத்மா பற்றி. இதற்குப் பெயர் ''ஆத்ம பஞ்சகம்'' .
++
இன்று மாலை நேரம் கிடைத்தது. அமைதியாக ஒரு அறையில் ஆதி சங்கரரின் ஆத்ம பஞ்சகம் புத்தகமும் நானும். சந்தோஷம் என்பது நாலு பேருடன் பகிர்ந்து கொண்டால் தானே அது இன்னும் அதிகமாகும். எனவே தான் இந்த சிறு எண்ண பிரதிபலிப்பு. இந்த ஸ்லோகங்களை ஸ்ரீ பி. ஆர். ராமச்சந்தர் வெகு எளிமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதையும் கொடுத்திருக்கிறேன். தமிழ் தான் நான்.

नाहं देहो नेन्द्रियाण्यन्तरंगं
नाहंकारः प्राणवर्गो न बुद्धिः
दारापत्यक्षेत्रवित्तादिदूरः
साक्षी नित्यः प्रत्यगात्मा शिवोऽहम् ॥१॥

Naham deho, nendriya nyantharangam,
Nahamkara prana vargaa na budhi,
Darapathya kshethra vithadhi dhoora,
Sakshi nithya prathyagathma shivoham. 1
I am neither the body, nor the senses nor the mind,
Neither am I pride, soul nor intellect,
But I am Shiva, who is eternal,
Who is completely unattached.
Who is far , far and far away
From wife, son , lands and assets,
And is the witness for everything.

தேஹாத்ம புத்தி என்பார்கள். சிவா என்று கூப்பிட்டால் திரும்பி பார்க்கிறேன் இந்த உடம்பு சத்தியமாக நான் இல்லை. இந்த தேகத்தை தான் ஆத்மா என்று தப்புக் கணக்கு போடுகிறோம். தெரிந்தும் போடுகிறோம். தெரியாமலும் போடுகிறோம். பஞ்ச இந்திரியங்களும் ஆத்மா இல்லை. இன்னும் சொல்லப் போனால் நமது புத்தியும் ஆத்மா இல்லை. விடுகிறோமே மூச்சு. பிராணன். அதுவும் ஆத்மா இல்லை. குப்பு ராவ் கடைசி மூச்சை விட்டு கட்டையாகி விட்டார். கும்பல் வீட்டில் சேருகிறது. பிராணன் போய் விட்டது என்கிறோமே தவிர ஆத்மா போய் விட்டது என்றா சொல்கிறோம்?. அவர் ஒரு நல்ல ஆத்மா என்கிறோமே. ஏதோ கொஞ்சம் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் அல்லவா? அதை விஸ்தாரமாக புரிந்துகொள்ள முயலவில்லை. அஹங்காரமும் ஆத்மா இல்லை. பின் எது ஐயா ஆத்மா என்பது? எது பிள்ளை, பெண்டாட்டி, வீடு வாசல் சொத்து சுதந்திரம் எல்லாவற்றுக்கும் அப்பால் தள்ளி ஒரு சாட்சியாக தூரத்திலிருந்து சம்பந்தமில்லாமல் வேடிக்கை பார்க்கிறதோ அது தான் ஆத்மா. அடுத்த தெருவில் ஒரு பெரிய மாளிகை வீடு ஒரு செட்டியார் கட்டியிருப்பதை பார்க்கும்போது அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் இந்த உடம்பையும், மற்ற உறவையும் கிட்டே சேர்க்காமல் வைத்துக்கொள்வது. கொஞ்சம் புரிந்ததா?

रज्ज्वज्ञानाद्भाति रज्जुर्यथाहिः
स्वात्माज्ञानादात्मनो जीवभावः।
आप्तोक्त्या हि भ्रान्तिनाशे स रज्जु-
र्जीवो नाहं देशिकोक्त्या शिवोऽहम् ॥२॥

Rajjwagnanath bhathi rajjuryadhai,
Swathma jnanad athmano jeeva bhava,
Aapthokthya hi branthinase sa rajjur,
Jeevo naham desikokthya shivoham. 2

Due to ignorance I think that a rope is a snake,
For due to absence of Jnana .
I ascribe life in to lifeless thing.
And when the realized one points it out,
I wake up from this illusion,
And understand that it is a rope and not a snake.
Similarly I am not the soul but Shiva,
Which I only understand by the teaching of the great teacher.
Similarly I am not the soul but Shiva,
Which I only understand by the teaching of the great teacher.

என் வீட்டுக்கு பக்கத்தில் சுவற்றின் மேல் தெரு வழியாக அசைந்து அசைந்து ஒரு ஐந்து அடி நீளத்தில் ஒரு நாகம். ஆஹா. நெளிந்து கொண்டு இருக்கிறது என் வீட்டின் உள்ளே போக பார்க்கிறது. ஐயோ என்று கத்தி நடுங்குகிறேன். வியர்த்து, மார்பு படபடவென்று துடித்து பாதி உயிர் போய் விட்டது. யாரோ ஒரு தைரியசாலி என் குரல் கேட்டு டார்ச் எடுத்துக் கொண்டு கையில் ஒரு பெரிய மூங்கில் தடி. அருகில் தைர்யமாக சென்று பார்த்து அதை கையில் எடுத்து அது ஒரு பிளாஸ்டிக் தோரண கயிறு என்று காட்டியதும் என் உயிர் வந்தது.

பாம்பு எங்கே போய் விட்டது?. பிரதி பாசிகம் என்பது சமஸ்க்ரிதத்தில் ஒன்றை மற்றொன்றாகவே கண்டு உணர்வது. அரை இருட்டில் பளபள வென்று எவனோ கட்சி தலைவன் பிறந்தநாளுக்கு கட்டிவிட்டு போன ஒரு தோரணக் கயிறு சுவர் ஓரமாக காற்றில் ஆடி அசைந்து பாம்பாக மாறி என்னை பயமுறுத்தி, கடைசியில் அது பிளாஸ்டிக் கயிறு மட்டுமே என மிஞ்சியது. பயமும் போனது இது பாம்பு இல்லை என்ற ஞானம் வந்ததால். அது போல் உயிரற்ற உடம்பை உயிர் என்று கருதுகிறோம். மகா பெரியவா போன்ற ஒரு ஞானி, குரு, நமக்கு புரியும்படியாக ''சுவாமி உங்க உடம்பு ஆத்மா இல்லை'' என்று உணர்த்தினால் தான்பாம்பு கயிறாகும்.

இப்படி தட்டி எழுப்பின பிறகு தான் என்னுள் இருப்பது ஜீவன் அல்ல அந்த சிவனே என்று அந்த ஞானி, குரு, சொல்லிக் கொடுப்பது புரியும். அப்பறம் என்ன சதா ஆனந்தம் தான்.

आभातीदं विश्वमात्मन्यसत्यं
सत्यज्ञानानन्दरूपे विमोहात् ।
निद्रामोहात् स्वप्नवत् तन्नसत्यं
शुद्धः पूर्णो नित्य एकः शिवोऽहम् ॥३॥

Aabhadhedham vishwamathmanya sathyam,
Sathya jnanananda roope vimohat,
Nidhramohat swapnavath thanna sathyam,
Shuddha poorno nithya eka Shivoham. 3

Due to the veil of ignorance,
I see this world in the eternal life,
Which has the form of truth and joy,
Similar to the dream which I see due to veil of sleep,
For I am the pure complete, perennial and single Shiva.

காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். இந்த உலகமே என்றும் சாஸ்வதம். இந்த பூலோக வாழ்க்கை அழிவற்றது என்ற எண்ணங்கள் திரையாக ஒரு உண்மையை மூடி மூடி மறைக்கின்றன. அதனால் எது அழிவற்றது, உண்மையானது, நிரந்தரம்? என்று தெரியவில்லை. உறக்கத்தில் காணும் எல்லாமே வெறும் கனவுத் தோற்றம். நிஜம் மாதிரியே இருக்கும். ஆனால் அது பொய். அநித்யமானது. எது சுத்தமோ, எது பூரணமானதோ, எது ஒன்றேயோ, அது தான் என்னுள் உறையும் சிவன் என்கிற 'நான்'. சட்டை மூக்கு கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கும் இந்த உடம்பல்ல.

मत्तो नान्यत् किञ्चिदत्रास्ति विश्वं
सत्यं बाह्यं वस्तुमायोपक्लिप्तं ।
आदर्शान्तर्भासमानस्यतुल्यं
मय्यद्वैते भाति तस्माच्छिवोऽहम् ॥४॥

Mathi nanyath kinchid athrasthi viswam,
Sathyam bahyam vasthu mayopakliptham,
Adarsho andhar bhasamanasya thulyam,
Mayyadwaithe bhathi thasmad shivoham.

This world is in no way different from me,
Similar to everything getting reflected in a mirror,
All the world is within me,
So I am that Shiva which is without two.

எங்கும் பரவி இருக்கும் இந்த உலகம், நானே தவிர வேறில்லை. மாறிக்கொண்டே இருக்கிறதே. மாற்றம் என்றால் என்ன?. கண்ணாடி தனக்கு எதிரே இருக்கும் அசையும் அசையா வஸ்துவை அப்படியே காட்டுவது போல் தான் இந்த உலகமும் நம்மை பிரதிபலிக்கிறது. எதிரே ஒன்று இருந்து, அது மறைந்து வேறொன்றாக காட்சி அளிப்பது தானே மாற்றம். நானும் அப்படித்தானே. ஐந்து வயது நான், இருவது வயது நானில்லை, நாப்பது வயது நான் எழுவத்து ஒன்பது வயது நான் கிடையாது. ஆனால் ஐந்து வயதிலிருந்து 79 வயது வரை மாறி மாறி தோன்றும் எல்லாமே நான் தான். அப்போ எல்லாத்திலும் உள்ள சிவனும் நான், நானே தான் எல்லாத்திலும். எல்லாம் ஒண்ணே--- தலை சுற்றுகிறதா? பொறுமை. பொறுமை. மெதுவாகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். இது கதையல்ல. சுப்பிரமணி அப்பறம் என்ன செய்தான் என்று தெரிந்து கொள்ள.

नाहं जातो न प्रवृद्धो न नष्टो
देहस्योक्ताः प्राकृताः सर्वधर्माः।
कर्तृत्वादिश्चिन्मयस्यास्ति नाहं-
कारस्यैव ह्यात्मनो मे शिवोऽहम् ॥५॥

Naham jatho na pravrudho na nashto,
Dehasyoktha prakrutha sarva dharma
Karthruthwadhi schinmaya syasthi naham,
Karasyaiva hyathmano may Shivoham.

Nor was I born nor grew nor die,
For birth, growth and death are for the body,
The nature of taking up a work is ,
The reflections of pride and not,
For my soul which is eternal,
And so I am the unattached Shiva.

அப்படி என்றால், நான் பிறக்கவில்லை, வளரவில்லை, இறக்கவில்லை, என்றால் புரிகிறதா?. என்ன சார் ? நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே. இந்த உடம்பு நான் இல்லை என்று. உடம்பு தானே இந்த மாறுதல்களை எல்லாம் அடைகிறது. எல்லாம் இந்த உடல் தான் சார். அது தான் நான் இல்லையே! . நான் கல்கத்தாவுக்கு ஒரு மணியிலே வரேன் என்று சொல்கிறேனே. நானா பறந்தேன்? ஏதோ ஒரு ஏரோப்ளேன் என்னை தூக்கிக் கொண்டு போய் சேர்த்தது. ப்ளேன் வந்துது என்றா சொல்கிறேன். நான் வந்தேன் என்று தானே என் வாயில் வார்த்தை. அது போல் என்னைத் தாங்கி நிற்கும் இந்த உடம்புக்கு தான் எல்லா மாற்றங்களும். இதில் அஹங்காரம் கொண்டு இருந்தால் அது எனதில்லை. பெருமை, கர்வம்..ஹுஹூம். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் தான் சிவனாயிற்றே. நான் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே ஆட்டி வைக்கும் ஆத்மா சார். அதுக்கு எதோடும் அட்டேச்மென்ட் இல்லையே.

नाहं जातो जन्ममृत्यू कुतो मे
नाहं प्राणः क्षुत्पिपासे कुतो मे ।
नाहं चित्तं शोकमोहौ कुतो मे
नाहं कर्ता बन्धमोक्षौ कुतो मे ॥६॥

Naham jatho janma mruthyu kutho may,
Naham prana kshuth pipase kutho may,
Naham chitham sokamohou kutho may,
Naham kartha bandha mokshou kutho may.

I was not born, whence birth and death came to me,
I am not the soul, whence came hunger and thirst to me,
I am not the mind, whence came passion and sorrow to me,
I am not the doer, whence c
ame attachment and detachment to me?

மறுபடியும்நா உரக்க சொல்கிறேன் எப்பவாவது புரிகிறதா பார்க்கிறேன். நான் தான் பிறக்கவில்லையே. குழந்தையா பிறந்தது என் உடல் தானே. எங்கேயிருந்து பிறப்பு அதை தொடர்ந்து இறப்பு?
நான் தான் இந்த உடலின் ஜீவன் இல்லையே, எங்கேயிருந்து பசி, தாகம் ?
நான் தான் மனம் இல்லையே, இந்த கோப தாப துக்க சந்தோஷ உணர்ச்சிகள் எங்கே இருந்து என்னை அணுகும்?
நான் தான் எதையும் பண்ணவில்லையே எங்கேயிருந்து இந்த சொந்த பந்த பாசம் நேசம் எல்லாம் எனக்கு.? சார் நான் ஆத்மா. இதெல்லாம் கடந்தவன். எனக்கு நிஜமாக பெயரோ, வயதோ, ஆண்பால் பெண்பாலோ, உருவமும் பசி தாகம் எதுவுமே கிடையாதே. நான் தான் உண்மையில் அந்த சிவன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...