Monday, September 4, 2017

சப்த ரிஷி மண்டலம்



​ ​ சப்த ரிஷி மண்டலம் ​- J.K. SIVAN
தாத்தா உற்சாகம் தானே உனக்கு ?​ பேரன் கேட்டான்.

யார் உன்னோடு நிறைய பேரை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாய்? யார் இவர்கள் என்ன வேண்டும் என்னிடம்?

இவன் என் நண்பன், சப்த ரிஷி. அவனுடைய அப்பா ஒரு பட்டாஸ் கம்பனியில் பெரிய உத்தியோகம்.
ஓ அப்படியா. சப்த ரிஷி .... பட்டாசு சப்தம் நிறைய உண்டுபண்ணும் ரிஷியோ? சிரித்தார் தாத்தா .
இல்லே தாத்தா அவன் ஊர் லால்குடி​. அங்கே சாமி பேர் அது.
​அந்த பையன் தொடர்ந்தான். ​எங்கப்பா அதைத்தவிர சப்தரிஷி மண்டலம் என்று எதோ சொன்னார் தாத்தா. எனக்கு புரியலே. நீங்க சொல்லிக்கொடுங்க
''அடே சப்தரிஷி, கோபு , இதை கேளுங்கோ. ரிஷி என்றாலே ''​ ப்ரம்ம ​ஞானம் கொண்டவன் '' ஞானி என்று அர்த்தம். அவர்கள் ஞானத்துக்கு ​ursa என்று மேல்நாட்டில் பெயர். நாம் அதை வித்யா ​என்கிறோம். . கலியுகத்தில் காலத்தை நிர்ணயிப்பது ரிஷிகள். சூரிய​னை உதிக்க செய்து அவனுக்கு ஒளி​ ஊட்டுவது இந்த சப்த ரிஷிகள் என்று ஒரு நம்பிக்கை.. எத்தனையோ​ ​யுகங்களாக​ ஒரு ​'​ஏழு ரிஷிகள் மண்டலமாக​'​ ஒரே நிலையில் பிரபஞ்சத்தில் தோன்றுகின்றனர். அவர்களின் நிலையை கண்டறிந்து விண் வெளி ஆராய்ச்சி நிபுணர்கள் காலத்தின் உண்மைகளை வெளியிடுகிறார்கள். இந்த ​​சப்த ரிஷிகளை ஆங்கிலத்தில் Ursa Major நக்ஷத்ரங்கள் என்பார்கள்.

வான சாஸ்திர நிபுணர் வராஹமிஹிரர் இந்த 7 ரிஷி கொண்ட சப்த ரிஷி மண்டலத்தை கணக்கெடுக்கும்போது கிழக்கே தொடங்கி மரிசி , வசிஷ்டர் +அருந்ததி , அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலாஹர் , கிருது . இதோடு துருவனையும் (polaris ) அருந்ததியும் சேர்த்து 9 நக்ஷத்ரங்களாகவும் கணிப்பதுண்டு. வானிலைப் படங்களில் சப்த ரிஷி மண்டலம் ​ கோடுகளாக வரைபடம் போல் போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
ஆகாயத்தின் வட பாதியில் இவர்களை அடையாளம் காணலாம். இந்த 7 ரிஷிகளும் கிருத்திகா என்ற பெயர் கொண்ட 7 சகோதரிகளை மனைவியாக ஏற்றுகொண்டார்கள்.. அவர்கள் வளர்த்த யாகத்திலிருந்து எழுந்த அக்னி ஒருநாள் அந்த 7 கிருத்திகை பெண்களையும் நேசித்தான். அவர்கள் கிடைப்பார்களா? மனம் ஒடிந்து அக்னி காட்டில் அலைந்து திரிந்தபோது தான் ஸ்வாஹா வைப் பார்த்தான். அவன் மன நிலை புரிந்து கொண்ட ஸ்வாஹா தன்னை 6 கிருத்திகா பெண்களைப் போல மாற்றிக்கொண்டாளே தவிர 7வது கிருத்திகா அருந்ததியைப் போல மாறுவேடம் கொள்ள முடியவில்லை. ஆறு கார்த்திகைப்பெண்கள் பின்னர் தோற்றுவித்தவன்​ தான்​ ​ ஸ்கந்தன் (முருகன்). அருந்ததியைத் தவிர மற்ற 6 கார்த்திகைப் பெண்கள் ரிஷிகளைப் பிரிந்தனர்.

ஏழு கார்த்திகை பெண்கள் நக்ஷத்ரங்களாக தோன்றுகிறது. கிரேக்க சாஸ்திரங்களிலும் இந்த ஏழு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் தான் ஆலிஸியான், அஸ்டெரோப் (ரெட்டை நக்ஷத்ரம்), எலெக்ட்டரா, மையா, மேரோப், டெகேட்டா, செலெனோ. உலகத்தை இன்று காலை வரை இன்னும் தூக்கிக்கொண்டு நிற்கும் அட்லாஸ் தான் அவர்கள் அப்பா. ப்ளீயோன் தான் அம்மா. கிரேக்க சரித்திர புராணங்கள் நமது பாரதம் போல் சுவையாக இருக்கும் படிக்க. முடிந்தபோது சிலவற்றை பற்றி சொல்கிறேன்.

நமது ரிஷிகளில் அதி முக்கியமானவர்கள். கௌதமர், பாரத்வாஜர், விஸ்வாமித்ரர்,ஜமதக்னி, வசிஷ்டர், காஸ்யபர் , அத்ரி, பிருகு. இந்த ரிஷிகள் எல்லோருமே விஷ்ணு அம்சம்.

கௌதமர் - நீதி சாஸ்திரம் இயற்றிய ரிஷி.
பாரத்வாஜர் - மூன்றுமுறை வாழ்ந்து அமரத்வம் பெற்று சூரியனோடு ஐக்யமானவர்.
விஸ்வாமித்ரர் - கோபக்கார​ ரிஷி. வசிஷ்டரோடு மோதிய தவசக்தி நிரம்பியவர்.
ஜமதக்னி - பரசுராமனின் அப்பா. கார்த்தவீர்யார்ஜுனனால் கொள்ளப்பட்டு அதன் விளைவாக பரசுராமன் க்ஷத்ரிய சம்ஹாரம் செய்ய ஆரம்பித்தான்.
பிருகு - ப்ரஜாபதிகளில் ஒருவர். பிரதம விஷ்ணுபக்த ரிஷி.
தக்ஷன் - ப்ரம்மாவின் புத்ரன். விஷ்ணு பக்தன். யாகத்தில் சிவனை புறக்கணித்து கொல்லப்பட்ட ரிஷி.
அத்ரி - ப்ரம்மாவின் ஏழு புத்ரர்களில் ஒருவர்.

ஏழு ரிஷிகளும் (சப்த ரிஷிகள்) - பிருகு தக்ஷன் இல்லாமல் - சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.
இந்த ரிஷிகளை மூலமாக வைத்து தான் நாம் கோத்திரர்கள் -- வழிவந்தவர்கள்- என்கிறோம். ஒரே கோத்ரத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்கள்.

சப்தரிஷிகள் ஒவ்வொரு மன்வந்தரத்துக்கும் மாறி மாறி பிரளயத்திற்கு பிறகு அமைவார்கள். இப்போது வைவஸ்வத மன்வந்தரம். மனு இட்ட கணக்கு பல யுகங்களை கொண்டது ஒரு மன்வந்தரம். இதை மஹா காலம் என்று விவரித்திருந்தேன். மீண்டும் அதை சொல்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...