Monday, September 4, 2017

கலைமகளின் ஒரே பெரிய கோவில்





​​யாத்ரா விபரம்:  J.K. SIVAN 



​            
கலைமகளின் ஒரே பெரிய கோவில் ​


கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் நமது
​ பாரத தேசத்திலேயே , அதுவும் தமிழ் நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ள பிரபலமான  ஆலயம். கூத்தனுர் ஒரு பெரிய முக்கிய  முஸ்லீம் பகுதி. வாக் தேவி என்றும், கல்விக்கடவுள் என்றும் கலைமகள் என்றும் புகழ்பெற்ற சரஸ்வதி குடிகொண்ட ஆலயம். 


​திருவாரூர் ஆலய தரிசனம், பித்ரு தர்ப்பணம் எல்லாம் முடிந்து கிளம்பும்போது ஒரு இடத்தை வளைத்து போட்டு காசு வாங்கி உள்ளே கல் தேர் பார்க்க அனுமதிப்பதை கண்டேன். 




மனு நீதி சோழன் பெற்கேற்றபடி நீதிமான். அவன் மகன் வீதி விடங்கன். ஒரு நாள் அரசனின் தேரை ஒட்டி வேகமாக சென்ற  இளவரசன் வழியே ஒரு பசுவின்  கன்றுக்குட்டியை தேர் சக்கரத்தால் கொல்ல  நேர்ந்தது. பசு கன்றைத் தேடி தெருவில் அரசன் தேரில் நசுங்கி மரணம் அடைந்ததை கண்டது. நீதி தேடி அரசனின் அரண்மனையை அடைந்து அங்கே ஒரு மணி கட்டி இருப்பதை பார்த்து வாயால் கயிற்றை இழுத்து மணி அடித்தது. நீதி கேட்டு வரும் மக்களுக்காக அந்த வசதி ஏற்படுத்தி இருந்த அரசன் வெளியே வந்து பார்த்தான் பசு கண்களில் நீரோடு அவனை அவன் தேர் அருகே அழைத்து சென்று தனது கன்று இறந்திருப்பதை காட்டி அரசன் விசாரித்து தனது மகன் தான் கொலையாளி என்று அறிந்து  அவனை  அதே தேர்க்காலில் கட்டி  கொல்ல  முயலும்போது கன்று பசு இருவருமே நீதி தேவதை எமனாக காட்சி தந்து சோழனின் நீதி பரிபாலனத்தை வாழ்த்தியதாக ஒரு கதை. 
அந்த தேரை ஒரு கல்லில் வடித்து பசு நீதி கேட்டு மணி அடிப்பதை  அழகாக வைத்து இருப்பதை தான் அங்கே கண்டேன். 



திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள்  தியாகராஜ ஸ்வாமிகள், சாமா சாஸ்திரிகள்  முத்துஸ்வாமி தீக்ஷிதர் மூவருமே அவதாரம் செய்துள்ளனர். அவர்கள் பிறந்த இல்லங்களை போகும் வழியில் பார்த்தேன். 


​திருவாரூரிலிருந்து கூத்தநூறுக்கு நன்னிலம் வழியாக சென்றால் 20 கி.மீ. நல்ல பாதை. கூத்தனூர் கோவில் மாலை 3.30 மணிக்கே  திறந்துவிட்டார்கள். ​ கோவில் வாசலில் எங்கும் நோட்டுபுஸ்தகங்கள், பேனாக்கள், பென்சில், சிலேட்டு விற்பனை.  சரஸ்வதி கலைமகள் என்பதால் இந்த ஊரில் ஒட்டக்கூத்தர் கம்பர் போன்ற தமிழ் கவிஞர்கள் நிறைய வந்து பாடியிருக்கிறார்கள். ஒட்டக்கூத்தர் சிலை உள்ளது.  குழந்தைகள் கல்வியறிவு பெற வேண்டிக்கொண்டு  பெற்றோர் கூட்டம் குழந்தைகளோடு நிறைய காணப்பட்டார்கள். காலேஜ், உயர்கல்வி பெறுவோரும் இங்கே வந்து வணங்கி ஆசி பெறுகிறார்கள். கோவிலில் பல இடங்களில் பரிக்ஷை நம்பர்கள், மாணவர்கள் நம்பர்கள் பெயர்கள்.ஒட்டக்கூத்தர் கூட நம்பகமாக இருந்தார் நம்பராக இருந்தாரா என்று புரியாத அளவு அவரை சுற்றி பரிக்ஷை நம்பர்கள். ராஜராஜ சோழன் ஒட்டக்கூத்தருக்கு இந்த கோவிலை கட்டிக்கொடுத்தான். கூத்தனுக்காக கட்டிக்கொடுத்த சரஸ்வதி கோயில் ஊர்  கூத்தனுர் என்று பெயர் பெற்றது. 

இங்கே கங்கை யமுனை சரஸ்வதி மூன்று புண்ய நதிகளும் அரசலாற்றில் சங்கமிப்பதாக ஐதீகம். எனவே கூத்தனுர் அரசலாறு தக்ஷிண  திரிவேணி சங்கமம் என்று பெயர் கொண்டது.
கோவில் நேரம் 7.30 am to 1.00pm, 4.00pm to 8.30pm.   Telephone Number : 04366 – 239 909

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...