ராதையின் மனம்....
அடியே கோகிலா, நான் தூங்கி எத்தனையோ வருஷம் ஆகியது போல் இருக்கிறதே. வருவானா என்று பார்த்து பார்த்து கண் பூத்து போய்விட்டதே. நீ மறுபடியும் போய் அவன் எங்கே என்று பாரடி. நான் அவனை சேரும் நாள் பாரடி..
“Durāloka-stoka-stavaka-navakāśoka-latikā-
Vikāsah kāsāropavana-pavano’pi vyathayati /
Api bhrāmyad-bhrińgī-raņita-ramaņīyā na mukula-
Prasūtiśchūtānām Sakhi ! Śikhariņīyam sukhayati // ” (GG. II / 4).
எனக்கு பிடித்த அந்த மாமரத்தை பார் எவ்வளவு ஆசை ஆசையாக அந்த கனிகளை பறித்து தின்பேன். இப்போது நிறைய புதிது புதிதாக மொட்டு விட்டிருக்கிறது. வண்டுகள் ரீங்காரத்தோடு சுற்றுகிறதும் தெரிகிறது. முன்பெல்லாம் அந்த கரு வண்டுகள் பின்னாலேயே ஓடுவேன். ஓ ராதா அந்த வண்டுகள் உன் கன்னத்தை தாமரை மொட்டு என்று நினைத்து ஏமாந்து போய் சுற்றுகின்றன என்று கிருஷ்ணன் என்னை கேலி செய்து சிரிப்பானே . எனக்கு இப்போது ஏன் அதை பார்க்கவே பிடிக்கவில்லை. இந்த பூக்களெல்லாம் ஒருகாலத்தில் என் உயிர்த்தோழிகள். இப்போது ''ஏன் ராதா எங்களை பிடிக்க வில்லையா?'' என்று கேட்கும் அளவிற்கு அவை எனக்கு வெறுத்து விட்டனவே. நான் எப்போதும் விளையாடும் அசோக மரக்கொடிகள் புதிதாக கிளைகளில் பூத்துக் குலுங்கட்டுமே யாருக்கு வேண்டும்?. அவை என்னை தேடுகின்றனவே. தேடட்டும். தேடட்டும். எனக்கென்ன கவலை? ஆஹா இனிய தென்றல் என்று கண்ணன் இருக்கும் போதெல்லாம் ஓடி ஆடுவோமே. இப்போது ஏன் அந்த தென்றல் கொடுங்கோடை வெயில் அனலாக எரிக்கிறது என்னை?

அழகு ஈர்ப்பு சேர்க்கை எல்லாமே பொய். செயற்கை தான். ரதி என்று சொல்பவளே பொய்யின் தோற்றம் தான். ஆணை கிறங்க வைக்கும் மாய தோற்றம். சிருங்கார ரசம் என்பதே மனிதன் கட்டுப்பாட்டை சோதிக்கும் தர்மா மீட்டர். வைராக்கியத்தின் முதல் எதிரி. ஆன்மாவில் லயிக்காமல் மனதை திருப்பும் சாதனம். மனதை அதிலிருந்து மீட்க மனதில் உறுதி படைக்கத் தான் கோவில்களிலும் சிருங்கார சிலைகள் பொம்மைகள் உள்ளனவா? . புராணங்களில் காவியங்களில் எத்தனையோ ஸ்லோகங்களுக்கு இடையே, காம ரஸ வர்ணனை ஸ்லோகங்களும் மனது அதில் செல்கிறதா என்று சோதிக்க பயிற்சி தானோ ?
இரவு பகல், இருட்டு வெளிச்சம், மழை வெயில், போல் மனித மனத்தில் பாலுணர்ச்சி பர தத்வம் , ரெண்டும் சேர்ந்தே தான் வைத்திருக்கிறது. எது வேண்டும்?
பால் நிலவு, தனிமை, தென்றல், இனிய அமைதி, வண்டுகள் பக்ஷிகள் இன்னிசை, மலர்களின் வாசம், இலைகளின் அசைவு, ஓ இதெல்லாம், கிருஷ்ணன் நினைவை தூண்டுகிறதே தோழி என்கிறாள் ராதை.
சிருங்கார பாவம் ஜெயதேவர் கீத கோவிந்தத்தில் கொப்புளிக்கிறது. ராதையின் மனோபாவத்தை விரக தாபத்தை, கிருஷ்ணன் அவள் மேல் கொண்ட ப்ரேமையை இரண்டையுமே தனித்தனியாக அவரவர் நிலையில் உணர்ந்து தானே அவர்களாகி கவிதையில் வடிக்கிறார். அதனால் தான் கீத கோவிந்தம் ஒரு அமர காவியமாகி மிளிர்கிறது.
தனிமை, பிரிவு இன்றி காதல் சோபிக்காது என்கிறார். இது மனித இயல்பு என்கிறார். அதனால் தான் காளிதாஸ மஹா கவி கூட தன்னுடைய ''மேக சந்தேசத்தில்'' மேகத்தை தூது விடும்போது
“Snehānāhuh kimapi virahe dhvamsinaste tvabhogād /
Ishţe vastunyupachita-rasāh prema-rāśībhavanti // ” (23). என்கிறான்.
Ishţe vastunyupachita-rasāh prema-rāśībhavanti // ” (23). என்கிறான்.
சிலர் கூறலாம், தனிமையினால், பிரிவினால் இருவர் மனதில் கொண்ட ஒருமித்த காதல் கொஞ்சம் குறைந்து விடும் என்று. அது அப்படியல்ல. உண்மையில் இருவரும் சேர முடியாத தவிப்பினால், அதில் கிடைக்கும் சந்தோஷம் பிரிவினால் தனிமையால் பாதிக்கப்படுவதால், நினைப்பு முழுதும் அந்த தேடலில் லயித்து விடுகிறது. காதல் அதனால் கூடுகிறது என்கிறார் காளிதாசர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. வெறுமே பாட்டு எழுத தெரிந்தால் போதாது. கதாபாத்திரங்களின் மனதில் புகுந்து அவர்கள் உணர்வுகள் எழுத்தாக, அந்த எழுத்து சந்தம், கோர்வை, எளிமை, ரசம் மிக்கவாறு இருக்கவேண்டும். நம்முடைய பாரதி இப்படி தமிழில் எழுதியவர்.
No comments:
Post a Comment