Wednesday, July 25, 2018

GITANJALI




ரபீந்திரநாத் தாகூர்   --    ஜே.கே சிவன்
                                                                                                

                              கீதாஞ்சலி 
   
I know not from what distant time thou art ever coming nearer to meet me. Thy sun and stars can never keep thee hidden from me for aye.
In many a morning and eve thy footsteps have been heard and thy messenger has come within my heart and called me in secret.
I know not only why today my life is all astir, and a feeling of tremulous joy is passing through my heart.
It is as if the time were come to wind up my work, and I feel in the air a faint smell of thy sweet presence.
கிருஷ்ணா,  நீ  வெகுதூரத்தில் இருப்பவன் என்று மட்டும் தெரியும். எல்லோரும் சொல்கிறார்கள். எந்த நேரம் என் அருகில் நீ வருவாய்  என நான் அறியேன்.   நீ  படைத்த சூரியன்  சந்திரன் நக்ஷத்திரங்கள் நான் பார்க்கவிடாமல் உன்னை தடுக்க முயன்றாலும் நான் விடமாட்டேன்.என் கண்ணில் நீ  படாமல் போக முடியாது. 

எத்தனையோ  காலைவேளைகளிலும்,  சாயந்திரங்களிலும்  நீ  வரும் காலடி சத்தம் கேட்டிருக்கிறேன்.  நீ  அனுப்பிய  ஆள் என் மனக்கதவை தட்டி உள்ளே புகுந்து ரகசியமாக என்னை கூப்பிட்டதுண்டு. இன்று என் மனது அளவுகடந்த குதூகலத்தில்  ஆடுகிறது. ஏன்? எங்கோ ஆகாயத்தில் பறப்பது போல் ஆனந்தத்தில்  ஆடுகிறேன்! எங்கும் எதுவுமே சந்தோஷமாக தான் கண்ணில் படுகிறது. என் இதயம் மகிச்சியில் பெருத்து விட்டது.

என் காரியங்கள் எல்லாம் முடிந்து விட்டது போல் தோன்றுகிறது. என்னை சுற்றிலும் காற்றில் உன் 
மீதிருந்து வீசும் சுகந்தம் மெலிதாக  மணக்கிறது. ஆம்  நீ அருகில் வந்துவிட்டாய் கண்ணா!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...