Saturday, July 21, 2018

VIDHURA NEETI


விதுர நீதி   J.K. SIVAN 

   
                             விதுரா எனக்கு அறிவுரை வழங்கு''

மஹாபாரதம் நமக்கு தெரிய அதை சொன்ன மகரிஷி வேத வியாசரோ, அதை விடாமல் வேகமாக எழுதிய தொந்தி கணபதியோ மட்டும் காரணம் அல்ல,   ஜனமேஜயனுக்கு ஒரு அயிட்டம் விடாமல் தினமும் இரவு பகலாக அவன் பக்கத்தில் அமர்ந்து சொன்ன இன்னொரு ரிஷியான வைசம்பாயனரும் தான். அவர் சொல்லும் பாரத சரித்ரத்தில் வரும் ஒரு சம்பவம் தான் விதுர நீதி.

'அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லுங்கள் ரிஷி என்கிறான் ஜனமேஜயன்''    வைசம்பாயனர் சொல்கிறார். :

திருதராஷ்டிரன் கண்ணில்லா கௌரவ வம்ச அரசன். அனைவராலும் மதிக்கப்பட்டவன். அவனும் ஒரு ஞானவான் தான்.

விதுரன் பாண்டு திருதராஷ்ட்ரன் ஆகிய இருவரின் சகோதர உறவினன். ஒரே குடும்பத்தில் வளர்ந்தவன். த்ரிதராஷ்டிரனின் தாய் அம்பிகை. பாண்டுவின் தாய் அவள் சகோதரி அம்பாலிகா. அம்பிகையின் தோழிக்கு பிறந்தவன் விதுரன். விதுரன் தர்மதேவன் அவதாரம் என்பார்கள். மாண்டவ்ய ரிஷி சாபத்தால் யமதர்மன் பூமியில் விதுரனாக பிறக்கிறான். ஆணி மாண்டவ்யர் கதை ஏற்கனவே  முந்திய அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறேன் என்பதால் மீண்டும் வேண்டாம்.

விதுரன் திருதராஷ்டிரன், பாண்டுவைப் போலவே பீஷ்மரால் வளர்க்கப்பட்டவர். பாண்டவர்களை நேசிப்பவர். கிருஷ்ணனின் பக்தர். அரச குடும்பத்தில் பிறந்தாலும் எளிய வாழ்க்கை மேற்கொண்டு ஒரு ஆசிரமத்தில் வாழ்ந்தவர். விதுரனுக்கும் திருதராஷ்டிர னுக்கும் நடந்த சம்பாஷணையை தான் விதுர நீதி என்பார்கள். மகாபாரதத்தின் ஒரு பகுதி இது. பிற்காலத்தில் கௌடில்யர் எனும் சாணக்கியர் எழுதிய சாணக்ய நீதிக்கு (அர்த்த சாஸ்திரம்) இதுவே முன்னோடி. ராஜரீகம் எனும் அரசன் பின்பற்றவேண்டிய நீதிகளை சொல்வது.

அன்று என்னவோ  திருதராஷ்டிரனுக்கு  மனம் சரியில்லை. சரியாக தூக்கம் வரவில்லை. கவலை ஏதோ  ஓன்று அவன் மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது. இதிலிருந்து விடுபட தம்பி விதுரனைக்கூப்பிட்டு அவனது  ஆலோசனை கேட்கவேண்டும்  என்று தோன்றியது. விதுரன் தர்ம தேவதை. எல்லோராலும் நீதிமான் நேர்மையானவன் சத்தியத்தின் உருவம் என்று போற்றப்பட்டவன். விதுரனை அடிக்கடி ஆலோசனை கேட்பான் திருதராஷ்ட்ரன். இருந்தாலும் கடைசியில் பிரச்னைக்கு முடிவெடுக்கும்போது திருதராஷ்டிரனுக்கு, தன்னுடைய புத்ரபாசம் குறுக்கிட்டால் விதுரரின் ஆலோசனை காற்றில் போய்விடும். மற்றவிஷயங்களில் விதுரன் பேச்சுக்கு மதிப்பு உண்டு.


இனி விதுரர் பார்வையற்ற நேர்மையற்ற அரசன் திருதராஷ்டிரனுக்கு உரைத்த அறிவுரைகளை சுருக்கமாக அறிவோம். இது விதுரன் நமக்கும் சொல்லியதாக பயன் படட்டும்.

वैशम्पायन उवाच ।
द्वाःस्थं प्राह महाप्राज्ञो धृतराष्ट्रो महीपतिः ।
विदुरं द्रष्टुमिच्छामि तमिहानय माचिरम् ॥ १॥


அன்று திருதராஷ்ட்ரன் மனது ஏதோ சங்கடத்தில் ஆழ்ந்து அவனைத் துளைத்தது. பலமுறை யோசித்த   மனம் சரியில்லை. சரியாக தூக்கம் வரவில்லை. கவலை ஏதோ  ஓன்று அவன் மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது. இதிலிருந்து விடுபட தம்பி விதுரனைக்கூப்பிட்டு அவனது  ஆலோசனை கேட்கவேண்டும்  என்று தோன்றியது. விதுரன் தர்ம தேவதை. எல்லோராலும் நீதிமான் நேர்மையானவன் சத்தியத்தின் உருவம் என்று போற்றப்பட்டவன். விதுரனை அடிக்கடி ஆலோசனை கேட்பான் திருதராஷ்ட்ரன். இருந்தாலும் கடைசியில் பிரச்னைக்கு முடிவெடுக்கும்போது திருதராஷ்டிரனுக்கு, தன்னுடைய புத்ரபாசம் குறுக்கிட்டால் விதுரரின் ஆலோசனை காற்றில் போய்விடும். மற்றவிஷயங்களில் விதுரன் பேச்சுக்கு மதிப்பு உண்டு.

'''யாரங்கே, உடனே விதுரனை நான் கூப்பிட்டதாக சொல்லி அழைத்து வாருங்கள் இங்கே '' என்றான். 


प्रहितो धृतराष्ट्रेण दूतः क्षत्तारमब्रवीत् ।
ईश्वरस्त्वां महाराजो महाप्राज्ञ दिदृक्षति ॥ २॥

அடுத்த கணம் தூதர்கள் ஓடினார்கள் விதுரன் அரண்மனைக்கு. விதுரன் தனது ஆஸ்ரமத்தில் தியானத்தில் இருந்தபோது கதவு தட்டப்பட்டது. மெதுவாக எழுந்து கதவைத்திறந்தவன் எதிரே அரசனின் தூதன். விதுரன் அவர்களே வரவேற்றான். ''எதற்கு வந்திருக்கிறீர்கள் என்ன விஷயம்?'' என்றான்.

''என்ன?'' என்று கேட்குமுன்பே ' ''மஹாராஜா, உங்களை பெரிய மஹாராஜா உடனே பார்க்கவேண்டுமாம். உடனே சேதி சொல்லி அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். தேரோடு வந்திருக்கிறோம் '' என்றான் தூதன்..

''சரி இருங்கள் வருகிறேன்'' என்று விதுரன் கிளம்பினான். 'தூதுவன் கையோடு தேரில் விதுரனை அழைத்து சென்று,


एवमुक्तस्तु विदुरः प्राप्य राजनिवेशनम् ।
अब्रवीद्धृतराष्ट्राय द्वाःस्थ मां प्रतिवेदय ॥ ३॥

தேர் ஹஸ்தினாபுரம் அரண்மனை வாயிலில் நின்று விதுரன் காவலாளியிடம் ''மஹாராஜாவிடம் விதுரன் வந்திருக்கிறேன் என்று சொல்'' என்றான்.
'
द्वाःस्थ उवाच ।
विदुरोऽयमनुप्राप्तो राजेन्द्र तव शासनात् ।
द्रष्टुमिच्छति ते पादौ किं करोतु प्रशाधि माम् ॥ ४॥


காவலாளி, உள்ளே சென்றான் திருதராஷ்டிரனை வணங்கி ''மஹாராஜா, விதுரன் வந்திருக்கிறார். தங்கள் திருவடியை தரிசிக்க காத்திருக்கிறார். உத்தரவிடுங்கள்' 

धृतराष्ट्र उवाच ।
प्रवेशय महाप्राज्ञं विदुरं दीर्घदर्शिनम् ।
अहं हि विदुरस्यास्य नाकाल्यो जातु दर्शने ॥ ५॥

திருதராஷ்டிரன் மகிழ்ந்தான்.  
' மஹா மேதாவி, புத்திசாலி, நியாயவான், சத்ய ஸ்வருபன் விதுரனுக்காக எப்போதும் காத்திருக்கிறேன் என்று சொல்.'' என்றான் திருதராஷ்ட்ரன்

காவலாளி விதுரனை பவ்யமாக வணங்கி : ''அரசே, உங்களை காண மிகவும் ஆவலாக இருப்பதை மஹாராஜா கூறுகிறார். உங்கள் வரவு அவருக்கு மிகவும் சந்தோஷம் தரும் விருப்பமான செயல் என்கிறார். உள்ளே வாருங்கள் ''  உத்தரவை தாங்கி சென்ற தூதுவன் விதுரனை அரசன் முன் கொண்டு நிறுத்தினான்.

அப்புறம்? என்கிறான் ஜனமேஜயன். 
''இரு அப்பனே''  என்று வைசம்பாயனர் மேலே சொல்கிறார்:

वैशम्पायन उवाच ।
ततः प्रविश्य विदुरो धृतराष्ट्र निवेशनम् ।
अब्रवीत्प्राञ्जलिर्वाक्यं चिन्तयानं नराधिपम् ॥ ७॥

''திருதராஷ்டிரன் அறைக்கு சென்ற விதுரன் இரு கரங்களை கூப்பி தமையனும் மஹாராஜாவுமான திருதராஷ்டிரனை வணங்குகிறார். கண்ணற்றவன் அல்லவா. தன் வரவை அறிவிக்கிறார்.

''மகா ஞானியான பெரியவரே, நான் விதுரன் தங்கள் கட்டளைப்படி வந்திருக்கிறேன். அடியேனுக்கு என்ன உத்தரவு என்று ஆணையிட்டால் அவ்விதமே பணி புரிய காத்திருக்கிறேன் மஹாராஜா '' என்கிறான் விதுரன்


धृतरष्त्र उवाच । सञ्जयो विदुर प्राप्तो गर्हयित्वा च मां गतः । अजातशत्रोः श्वो वाक्यं सभामध्ये स वक्ष्यति ॥ ९

तस्याद्य कुरुवीरस्य न विज्ञातं वचो मया । तन्मे दहति गात्राणि तदकार्षीत्प्रजागरम् ॥तदकार्षीत्प्रजागरम् १०॥
जाग्रतो दह्यमानस्य श्रेयो यदिह पश्यसि । तद्ब्रूहि त्वं हि नस्तात धर्मार्थकुशलो ह्यसि ॥ ११॥
यतः प्राप्तः सञ्जयः पाण्डवेभ्यो न मे यथावन्मनसः प्रशान्तिः । सवेन्द्रियाण्यप्रकृतिं गतानि किं वक्ष्यतीत्येव हि मेऽद्य चिन्ता ॥ १२॥
तन्मे ब्रूहि विदुर त्वं यथावन् मनीषितं सर्वमजातशत्रोः । यथा च नस्तात हितं भवेच्च प्रजाश्च सर्वाः सुखिता भवेयुः ॥-

"என்னருமை விதுரா, என்னோடு வாதம் செய்து என்னிடம் மன வருத்தமோடும் என்னிடம் கோபத்துடனும் சென்ற சஞ்சயன் இந்த்ரப்ரஸ்தத்திலிருந்து திரும்பி வந்துவிட்டானாம். அஜாத சத்ரு எனும் பெயர் கொண்ட யுதிஷ்டிரன் எனக்கு பதில் செய்தி அனுப்பி இருக்கிறானாம். நாளை அரசவையில் அதை என்னிடம் அளிப்பான். எனக்கு பதற்றமாக இருக்கிறது. யுதிஷ்டிரன் கொடுத்த சேதி சாதகமா பாதகமா என்று தெரியவில்லை. எனக்கு உடல் திகு திகு என்று உஷ்ணத்தால் எரிகிறது. உறக்கம் இல்லை. இவ்வாறு தூக்கமின்றி உடல் எரிச்சலில் இருப்பவனுக்கு எது நல்லது செய்யும் என்று எல்லாம் அறிந்த நீ தான் சொல்லவேண்டும். பாண்டவர்களை சந்திக்க சென்ற சஞ்சயன் வந்து விட்டான் என்ற சேதி அறிந்தது முதல் எனக்கு நிலை கொள்ளவில்லை. மனது அமைதி இழந்து விட்டது. ஒரு கவலை வந்து விட்டது. நீ நீதிமான், நல்லது கெட்டது உணர்ந்தவன். எனக்கு புத்தி ஸ்வாதீனத்தில் நிலையாக இல்லை. நீ எனக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்பதற்காக தான் உன்னை வரவழைத்தேன் அப்பா '' என்கிறான் திருதராஷ்டிரன்.

विदुरोऽहं महाप्राज्ञ सम्प्राप्तस्तव शासनात् ।
यदि किं चन कर्तव्यमयमस्मि प्रशाधि माम् ॥ ८॥

இனி விதுரர் பார்வையற்ற நேர்மையற்ற அரசன் திருதராஷ்டிரனுக்கு உரைத்த அறிவுரைகளை சுருக்கமாக அறிவோம்.

இது விதுரன் நமக்கும் சொல்லியதாக பயன் படட்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...