சந்துக்குள் ஒரு சக்தி தேவி
ஒரு அமைதியான கோயில், அதிக சக்தி வாய்ந்த ரெண்டு தெய்வங்களை தன்னிடத்தில் கொண்டு ஒரு சிறு சந்தில் இருக்கிறதே தெரியுமா? திருவல்லிக்கேணி என்றால் முதலில் கவனத்திற்கு வருவது மெரினா பீச், செபாக் கிரிக்கெட் மைதானம், ரத்னா கேப் cafe ரெண்டு இட்டலி ஒரு மக் mug கொதிக்கும் சாம்பார். அவ்வளவு தான் என்றால் என்றைக்கு மோக்ஷம் பெறுவது? அருமையான திவ்ய தேசம் பார்த்தசாரதி ஆலயம் இருக்கிறதே. அது பிரபலமானது. ரகசியமாக ஒரு புதையல் இருக்கிறதே ஒரு சின்ன சந்தில், பாரதியார் தெரு என்று அழைக்கப்படும் pycrofts ரோட்டில் நுழைந்தால் ரெண்டு பக்கமும் இருக்கும் எத்தனையோ சந்துகளில் ஒன்று தான் ஹனுமந்தலாலா தெரு. கோஷா ஆஸ்பத்திரி அருகே. அதில் தான் காமகலா காமேஸ்வரர் காமேஸ்வரி இருக்கிறார்கள்.காமேஸ்வரர் இங்கே ஸ்வேத பாணலிங்க ஸ்வரூபம். அம்பாள் த்ரிபங்கி ரூபம்.
மகா பெரியவாள் தரிசித்த ஆலயம். இதற்கு முந்தைய ஆச்சார்யர்கள் வழிபட்ட கிட்டத்தட்ட ஆயிர வருஷ ஷேத்ரம் அது. இந்த கோவில் நிறுவியவர் ராய் ராஜா ஈஸ்வரதாஸ் தயவந்த் பகதூர். அவர் காலத்திற்கு பின் அவர் வம்சம் க்ஷீணித்து திவாலாகி பராமரிப்பின்றி போனது. அரசாங்க கோவில் இப்போது. நிலை எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.
மாசி மகம் அன்று காமேஸ்வரர் காமேஸ்வரி உத்சவர்கள், ஜம்மென்று மரீனா கடற்கரையில் வங்காள விரிகுடா கடலில் தீர்த்தவாரி நடக்கும் வைபவத்தில் பக்தர்கள் புடைசூழ வந்து கலந்து கொண்டு மகிழ்வார்கள்.
இன்றும் இங்கு துர்க்கைக்கு செவ்வாய், மற்றும் ராகுகால பூஜைகள், பிரார்த்தனைகள் விடாமல் நன்றாக நடைபெறுகிறது. பக்தர்களின் உற்சாகத்தால் எல்லா உத்சவங்கள், பூஜைகள் நடத்திக்கொள்கிறார்கள் காமேஸ்வர காமேஸ்வரியும் .
பாரதியார் அடிக்கடி வந்து வழிபடும் சக்தி காமேஸ்வரி தேவி.
1994ல் ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment