ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (168 -180) ஜே.கே. சிவன்
निष्क्रोधा, क्रोधशमनी, निर्लोभा, लोभनाशिनी ।
निःसंशया, संशयघ्नी, निर्भवा, भवनाशिनी ॥ 48 ॥
Nishkrodha krodhashamani nirlobha lobhanashini
Nisandhaya sanshayaghni nirbhava bhavanashini – 48
நிஷ்க்ரோதா க்ரோதசமநீ நிர்லோபா லோபநாசிநீ |
நிஸ்ஸம்சயா ஸம்சயக்நீ நிர்ப்பவா பவநாசிநீ || 48
निर्विकल्पा, निराबाधा, निर्भेदा, भेदनाशिनी ।
निर्नाशा, मृत्युमथनी, निष्क्रिया, निष्परिग्रहा ॥ 49 ॥
Nirvikalpanirabadha nirbheda bhedanashini
Nirnasha mrutyumadhani nishkriya nishparigraha – 49
நிர்விகல்பா நிராபாதா நிர்ப்பேதா பேதநாசிநீ |
நிர்நாசா ம்ருத்யுமதநீ
நிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா || 49
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (168 -183) அர்த்தம்
168 * நிஷ்க்ரோதா - கோபமற்றவள். சாந்தஸ்வரூபிணி. சர்வ நாசம் விளைந்த மஹா பிரளயத்தின் போதும் அம்பாள் சாந்தமாக இருப்பவள். ப்ரம்மத்திற்கு எது உணர்ச்சி, பாதிப்பு ?.
* 169 * க்ரோத சமனி - கோபத்தை அழிப்பவள். மனிதனின் ஆறு முக்கிய எதிரிகள் ஆசை, கோபம், பொறாமை, கருமித்தனம், கர்வம், மயக்கம் . ( காமம், க்ரோதம், மோகம், மதம்,லோப, மாச்சர்யம்) இவற்றை அம்பாள் துணை கொண்டு அழிக்கமுடியும்.
* 170 * நிர் லோபா - கருமித்தனம், கஞ்சத்தனம் நெருங்காதவள். தாராளமாக சகல சௌபாக்கியங்களும், செல்வமும், அருளும் அன்பும் வாரி வழங்கும் அன்னையிடம் உலோப குணம் துளியும் நெருங்க முடியாதே.
* 171 *லோபநாசிநீ - அம்பாள் மனதில் எள்ளளவும் கருமித்தனம் இல்லாமல் நீக்குபவள் . தருமசிந்தனை வளரவிடாமல், குறுகிய மனத்தை வளர்ப்பது பேராசையும் கஞ்சத்தனமும். ஆகவே தான் அம்பாள் தாராள, பரந்த மனதை, விரிந்த எண்ணத்தை அருளுபவள்.
* 172 * நிஸ்ஸம்சயா - துளியும் சந்தேக என்பதே இல்லாத மனம் கொண்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை. முழுமை, முதிர்ச்சி பெறாத மனம் தான் சந்தேகப்படும். ஞானம் நிறைந்த ப்ரம்மத்திற்கு எது சந்தேகம்? எதில் சந்தேகம்?
* 173 * ஸம்சயக்நீ - அம்பாள் ஸ்ரீ லலிதை சந்தேக நிவாரணி. பக்தர்கள் மனதில் எந்த கிலேசமும் சந்தேகமும், தாக்கமும் இன்றி பரிபூர்ண பக்தியை நிறைப்பவள். பக்தியாக நிறைபவள். குருவாக நின்று சாதகர், பக்தர் மனதில் ஞானத்தை சந்தேகமற போதிப்பவள். ப்ரம்மமாய் இருப்பவள் தானே குண்டலினியை போதிக்கமுடியும்.
* 174 * நிர்ப்பவா --Nirbhava - ஜனனமரணம் நமக்கு தான். அதையெல்லாம் கடந்த அம்பாளுக்கில்லை. நம்மை பிறவித்துன்பத்திலிருந்து மீட்பவள் லலிதாம்பிகை.
* 175 * பவநாசிநீ -- பிறப்பறுப்பவள் தாய் லலிதை. ல் ஜனன மரணம் தான் சம்சாரம். இந்த சாகரத்தில் மூழ்கியவன் தப்பி கரைசேர்வது மிக கடினமான காரியம் . அவளை சரணடைந்து மட்டுமே தப்ப முடியும். நவமி சண்டிஹோமம் பண்ணுபவர்கள் சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள்.
* 176 * நிர்விகல்பா -- எந்த விருப்பமும் தன்னை கட்டுப்படுத்தாதவள் ஸ்ரீ அம்பாள். அவளது செயல்கள் பக்தபரிபாலனம் மட்டுமே. நாம ரூப பேதம் இனம் இடம், எதுவுமறியாத தியானத்தில் இருப்பது நிர்விகல்ப சமாதி.
* 177 * நிராபாதா -- எந்த பாதிப்பும் அற்ற ப்ரம்மஸ்வரூபிணி அம்பாள். எல்லா பாதிப்பும் மாயையினால் தானே. மாயையை அடக்கி ஆள்பவள் அம்பாள். பிரம்மத்தின் பக்கமே அவித்யா, மாயை நெருங்கவே முடியாதே.என்ன செய்யும்?
* 178 * நிர்ப்பேதா -- எந்த வித்தியாசமும் லலிதாம்பிகைக்கு கிடையாது. சர்வமும் ப்ரம்மமயத்தில் எப்படி பேதம் கண்டுபிடிப்பது?
* 179 *பேதநாசிநீ -- ஏகமயமாக எல்லாவற்றையும் பரிபாலிக்கும் அம்பாள் எந்த பேதத்தையும் அழிப்பவள். ''ஏகம் சத்'' அல்லவா. அது அவளல்லவா? முதலாவதாக அம்பாளுக்கும் அவள் பக்தர்களுக்கும் இடையே கூட எந்த பேதமும் இல்லையே. ''தத் த்வம் அசி'' அது நீயாகவே இருக்கிறாய். இது தான்.
* 180 * நிர்நாசா -- முடிவற்றவள் அம்பாள் என்கிறதே இந்த நாமம். ஆரம்பமே தெரியாதபோது முடிவு எது, எங்கே, எப்போது?? ஹயக்ரீவர் யோசிக்கிறார்? ''சத்யம் ஞானம், அனந்தம் ப்ரம்மம் ''
* 181 * ம்ருத்யுமதநீ - காமேஸ்வரன் கால சம்ஹாரன் அவனே காமேஸ்வரியும் ஆனபோது காலனை பற்றி என்ன கவலை ? அம்பாளை சரணடைந்த நமக்கும் தான் என்ன கவலை?
* 182 * நிஷ்க்ரியா -- தனக்கென்று எந்த ஒரு காரியமும் செய்யவேண்டிய நிலையில் இல்லாதிருப்பவள். அவளது சங்கல்பமே, எண்ணமே, உலகை, பிரபஞ்சத்தை பரிபாலனம் செய்யும். ரட்சிக்கும். உலகத்தில் நமக்கு தெரிந்த தெரியாத எல்லா காரியங்களும் அவளே தான் என்றபோது அவளுக்கு என்று தனியாக எந்த காரியம் இருக்கப்போகிறது?
* 183 * நிஷ்பரிக்ரஹா -- யாருடைய உதவியும், எந்த விதமான உதவியும் தேவையற்றவள் லலிதாம்பிகை. பக்தர்கள் இதைச்செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பு இல்லாதவள் என்கிறார் ஹயக்ரீவர்.
No comments:
Post a Comment