Monday, July 9, 2018

LALITHA SAHASRANAMAM


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 5 - J.K. SIVAN

इन्द्रगोप परिक्षिप्त स्मर तूणाभ जङ्घिका ।
गूढगुल्भा कूर्मपृष्ठ जयिष्णु प्रपदान्विता ॥ 18 ॥

Endra-gopa parikshipta smaratunabha janghika
Guda-gulpha kurma prushtajaeishnu prapadanvita – 18

இந்த்ரகோப பரிக்ஷிப்த
ஸ்மரதூணாப ஜங்கிகா |
கூடகுல்பா கூர்மப்ருஷ்ட
ஜயிஷ்ணுப்ரபதாந்விதா || 18

नखदीधिति संछन्न नमज्जन तमोगुणा ।
पदद्वय प्रभाजाल पराकृत सरोरुहा ॥ 19 ॥

Nakhadidhiti sanchanna samajana tamoguna
Padadvaya prabhajala parakruta saroruha – 19

நகதீதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா |
பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா || 19

शिञ्जान मणिमञ्जीर मण्डित श्री पदाम्बुजा ।
मराली मन्दगमना, महालावण्य शेवधिः ॥ 20 ॥

Shinjanamani mangira mandita shrepadanbuja
Marali mandagamana maha-lavanya shevadhih – 20
ஸிஞ்ஜாநமணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா |
மராலீமந்தகமநா மஹாலாவண்ய சேவதி: || 20

सर्वारुणा‌உनवद्याङ्गी सर्वाभरण भूषिता ।
शिवकामेश्वराङ्कस्था, शिवा, स्वाधीन वल्लभा ॥ 21 ॥

Sarvaruna navadyangi sarvabharana bhushita
Shiva-kameshvarankasdha shiva svadhinavallabha – 21

ஸர்வாருணாsநவத்யாங்கீ
ஸர்வாபரணபூஷிதா |
சிவகாமேஸ்வராங்கஸ்தா சிவா
ஸ்வாதீநவல்லபா || 21

सुमेरु मध्यशृङ्गस्था, श्रीमन्नगर नायिका ।
चिन्तामणि गृहान्तस्था, पञ्चब्रह्मासनस्थिता ॥ 22 ॥

Sumeru shrunga-madhyasdha shreemannagara naeika
Chintamani gruhantahsdha pancha bramga sanasdhita – 22

ஸுமேருமத்யச்ருங்கஸ்தா
ஸ்ரீமந் நகரநாயிகா |
சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா
பஞ்ச ப்ரஹ்மாஸநஸ்திதா || 22

* 41 *இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா -- -அம்பாள் ஸ்ரீ லலிதாவின் முன் கால்கள் அழகாக இருக்குமாம். எப்படி தெரியுமா? மன்மதனின் மலர் அம்புகள் வைக்கும் அம்புரா பெட்டி அதுவும் மலர்களால் ஆனது தானே. அதை தேன் கொண்ட மலர்கள் என்று அழகிய தேன் வண்டுகள் சுற்றி சுற்றி ரீங்காரம் இடும் என்கிறார் ஹயக்ரீவர்.

* 42 * கூடகுல்பா கூர்மப்ருஷ்ட ஜயிஷ்ணுப்ரபதாந்விதா - அம்பாளின் கணுக்கால்கள் வட்டமாக உருண்டு இருக்குமாம்.

* 43 * கூர்மப்ருஷ்ட ஜயிஷ்ணுப்ரபதாந்விதா - அம்பாள் கால் பாதங்கள் எதையோ ஞாபகப்படுத்துகிறதே என்று யோசித்த ஹயக்ரீவருக்கு ஆமையின் மேல் ஓடு முதுகு தான் நினைவுக்கு வருகிறது. குவிந்து மென்மையாக இருக்குமாம்.

* 44 * நகதீதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா -- அம்பாளின் கை விரல் நகங்கள் செய்யும் சேவையை என்னவென்று சொல்வது. நமது மனதின் இருளை (தமோ குணத்தை) போக்கும் ஒளி வீசுபவை . அப்படி பளபளவென்று கண்ணாடி மாதிரி ஜொலிக்கும் நகங்கள்.

* 45 *பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா -- அம்பாளின் இரு பாதங்கள் ஒரு நிமிஷம் நம்மை சந்தேகிக்க செய்யும் . அட இது என்ன இரு பாதங்களா ? தாமரை மலர்களா?

* 46 * ஸிஞ்ஜாநமணிமஞ்ஜீர மண்டித ஸ்ரீபதாம்புஜா -- சலங் சலங் . இணையில்லாத நவரத்ன மணிகள் அசைந்து ஒன்றை ஒன்று இணைந்து அம்பாளின் கால்கள் அசையும் போது அவள் காலில் அணிந்திருக்கும் தண்டை கொலுசுவிலிருந்து ஒலிக்கும் சுநாத சுக கீத சங்கீத ஒலியை எப்படி வர்ணிப்பேன்?

* 47 *மராலீமந்தகமநா - அம்பாள் அசைந்து வருவதை பார்க்க கோடி கண்கள் போதவே போதாது. ஒரு அன்னம் அடியெடுத்து வைப்பது போல் அல்லவோ தோன்றும்.

* 48 * மஹாலாவண்ய சேவதி -- உலகம் முழுதும் சுற்றி எங்கெங்கெல்லாம் இதெல்லாம் அழகு என்று தெரிகிறதோ அவை அத்தனையும் சேர்த்து ஒன்றாக்கி வைத்தால்? அது தான் அம்பாளின் லாவண்யம்.

49 * ஸர்வாருணா-- அம்பாளின் தனிச் சிறப்பு என்ன தெரியுமோ? அவள் இளங்காலை சிவப்பினை தன்னுடைய உருவத்தில் முழுதுமாக கொண்டவள்.

* 50 *sநவத்யாங்கீ-- அம்பாளின் அங்கத்தில் எல்லாமே கடைந்தெடுத்த தங்கமா, தந்தமா, கடைந்தெடுத்த அழகுக்குவியலா என்னவென்று சொல்வது.

51 * ஸர்வாபரணபூஷிதா- காது, மூக்கு, கழுத்து, கரங்கள், சிரம் என்று நிறைய நகைகள், ஆபரணங்களை அணிந்து அழகுக்கு அழகு செய்ததுபோல் காண்பவள் அம்பாள்.

* 52 * சிவகாமேஸ்வராங்கஸ்தா ---அம்பாள் ஜம்மென்று விரும்பி உட்காரும் இடம் எதுதெரியுமா? ஸ்ரீ காமேஸ்வரன் தொடை -- ஹயக்ரீவர் எவ்வளவு பக்தியோடு சொல்கிறார்!

* 53 *சிவா- அம்பாள் யார்? சிவன் தான் சிவை. பிரிக்கமுடியாத ஒன்று தான் அவர்கள்.

* 54 * ஸ்வாதீநவல்லபா - அம்பாள் இட்ட கோடு மீறாதவன் காமேஸ்வரன். அவ்வளவு அன்யோன்யம்.

* 55 *ஸுமேருமத்யச்ருங்கஸ்தா --மகா மேரு பர்வதத்தின் மத்தியில் உள்ள உச்சாணி சிகரத்தில் இருப்பவள் அம்பாள்.

* 56 * ஸ்ரீமந் நகரநாயிகா - அம்பாள் ஸ்ரீநகரத்தின் தலைவி. ராணி.

* 57 * சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா -- எண்ணங்கள், விருப்பங்கள் ஈடேற ஒரு இடம் என்று இருந்தால் அதை முழுதுமாக நிறைந்தவள் லலிதாம்பிகை.

* 58 * பஞ்ச ப்ரஹ்மாஸநஸ்திதா-- பஞ்ச பிரம்மாக்கள் யார் தெரியுமா? பிரம்மதேவன், விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் - இவர்கள் அத்தனை பேரின் சக்தியே ஆசனமாக அமைந்தவள் ஸ்ரீ லலிதாம்பிகை.



அம்பாளின் ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆயிர நாமங்களை சிந்தித்து எழுதும்போதே இவ்வளவு ஆர்வமாக இருக்கிறதே படிக்கும் ரசிக்கும் ருசிக்கும் உங்களுக்கும் ஆனந்தமாக இருக்காதா? தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...