Friday, July 13, 2018

LALITHA SAHASRANAMAM



லலிதா ஸஹஸ்ரநாமம் - (72 - 83) - J.K. SIVAN

भण्डसैन्य वधोद्युक्त शक्ति विक्रमहर्षिता ।
नित्या पराक्रमाटोप निरीक्षण समुत्सुका ॥ 28 ॥

Bhandasainya vadhodyukta shakti vikrama harshita
Nitya parakra matopa nireekshana samutsaka – 28

பண்டஸைந்ய வதோத்
யுக்தசக்தி விக்ரம ஹர்ஷிதா |
நித்யா பராக்ரமாடோப
நிரீக்ஷண ஸமுத்ஸுகா || 28

भण्डपुत्र वधोद्युक्त बालाविक्रम नन्दिता ।
मन्त्रिण्यम्बा विरचित विषङ्ग वधतोषिता ॥ 29 ॥

Bhanda-putra vadhodyukta balavikrama nandita
Mantrinyanba virachita vishangavadhatoshita – 29

பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா
விக்ரம நந்திதா |
மந்த்ரிண்யம்பாவிரசித
விஷங்க வததோஷிதா || 29

विशुक्र प्राणहरण वाराही वीर्यनन्दिता ।
कामेश्वर मुखालोक कल्पित श्री गणेश्वरा ॥ 30 ॥

Vishukra pranaharana varahi viryanandita
Kameshvara mukhaloka kalpita shreganeshvara – 30

விசுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா |
காமேச்வர முகாலோக - கல்பித ஸ்ரீகணேச்வரா||30

महागणेश निर्भिन्न विघ्नयन्त्र प्रहर्षिता ।
भण्डासुरेन्द्र निर्मुक्त शस्त्र प्रत्यस्त्र वर्षिणी ॥ 31 ॥

Maha-ganesha nirbhinna vighnayantra praharshita
Bhanda-surendra nirmukta shastra pratyastra varshini – 31

மஹாகணேச நிர்ப்பி ந்நவிக்நயந்த்ர ப்ரஹர்ஷிதா |

பண்டாஸுரேந்த்ர நிர்முக்த
சஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ || 31

कराङ्गुलि नखोत्पन्न नारायण दशाकृतिः ।
महापाशुपतास्त्राग्नि निर्दग्धासुर सैनिका ॥ 32 ॥

Karanguli nakhotpanna narayana dashakrutih
Mahapashupatastragni nirdagdha surasainika – 32

கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி: |
மஹா பாசுபதாஸ்த்ராக்னி
நிர்தக்தாஸுர ஸைநிகா || 32

कामेश्वरास्त्र निर्दग्ध सभण्डासुर शून्यका ।
ब्रह्मोपेन्द्र महेन्द्रादि देवसंस्तुत वैभवा ॥ 33 ॥

Kameshvarastra nirdagda sabhandasura shunyaka
Bramhependra mahendradi devasansdhutavaibhava -33

காமேச்வராஸ்த்ர நிர்தக்த
ஸபண்டாஸுர சூந்யகா |
ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி
தேவ ஸம்ஸ்துதவைபவா || 33


* 72 * பண்டஸைந்ய வதோத் யுக்தசக்தி விக்ரம ஹர்ஷிதா | எவராலும் தன்னை வெல்லமுடியாது என்ற கர்வத்தோடுல் பண்டாசுரனின் படைகள் அம்பாளின் சக்தி சைன்யத்தோடு மோதி தோற்று பண்டாசுரன் அம்பாளால் கொல்லப்படுகிறான். அம்பாள் மகிழ்கிறாள். ஞானம் அஞ்ஞானத்தை வெல்வது இதன் உட்பொருள்.

* 73 * நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா - யுத்தத்தின் போது லலிதாம்பிகை, தன்னுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 15 நித்யாதேவிகளின் (திதிகள்) பராக்க்ரமத்தை கண்டு மகிழ்கிறாள்.

* 74 * பண்டபுத்ர - வதோத்யுக்த - பாலா விக்ரம நந்திதா | லலிதாம்பாளின் புத்ரி பாலா ஒன்பது வயது. பண்டாசுரனுக்கு முப்பது பிள்ளைகள். நீ போருக்கு வரவேண்டாம் என்று அம்பாள் சொல்லியும் பாலா கேட்கவில்லை பண்டாசுரனின் முப்பது பிள்ளைகளிடம் போரிடுகிறாள். அவர்களைக் கொல்கிறாள் . ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில் பாலா மந்திரம் தான் உபதேசிப்பார்கள். அதில் சித்தி அடைந்தால் அதீத சக்தியை பக்தன் பெறுகிறான். லலிதாம்பிகையின் அங்க தேவதை தான் பாலா. மந்த்ரிணீ, வாராஹி உபாங்க தேவிகள். மற்ற சக்தி தேவிகள் அன்னபூரணா, அச்வாரூட தேவி ஆகியோர் பிரத்யங்க தேவிகள். அங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம் ஆகியவை ஸ்தூல , சூக்ஷ்ம சரீரங்களை குறிக்கும்.

* 75 * மந்த்ரிண்யம்பாவிரசிதவிஷங்க வததோஷிதா - அம்பாளின் உபங்கமான மந்திரிணீ (சியாமளா) விஷங்கவதனை சம்ஹாரம் செய்தபோது லலிதை மெச்சுகிறாள். பண்டாசுரனின் சகோதரர்கள் விஷங்கனும் விசுக்ரனும். அவனுடைய புஜத்திலிருந்து தோன்றியவர்கள். விஷங்கன் என்றால் அங்கத்தில் விஷம் நிறைந்தவன் என்று அர்த்தம். நமது தேகத்தில் வளரும் ஆசை என்னும் விஷங்களை தீர்ப்பவன் அம்பாள் என்று உள் அர்த்தம்.

* 76 * விசுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா | பண்டாசுரனின் இன்னொரு அசுரத் தம்பி விசுக்ரனை வராஹி தேவி கொல்கிறாள். வாராஹியின் வீரத்தை லலிதாம்பாள் மெச்சுகிறாள். மூன்று அசுரர்களும் நமது ஆணவ,கர்மா, மாய மலங்களை குறிப்பதுடன் அம்பாளின் அருளால் அவை அழிகிறது. மந்த்ரிணீ என்பதே அம்பாளின் பஞ்சதசி ஷோடசி மந்திரங்களை குறிக்கிறது என்று ஒரு கருத்து. பாலா, வராஹி, மந்திரிணீ என்ற மூன்று உபாங்க தேவிகளில் அதிக சக்தி வாய்ந்தவள் வராஹி.

* 77 * காமேச்வர முகாலோக - கல்பித ஸ்ரீகணேச்வரா -- லலிதாம்பாள் காமேஸ்வரனை பார்த்தவுடன் அவதரித்தவர் கணேஸ்வரன் என்று கூறுவதுண்டு. சிவ பார்வதி தம்பதிகளுக்கு மூத்த புத்ரன் கணேசன்.

* 78 * மஹாகணேச நிர்ப்பி ந்நவிக்நயந்த்ர ப்ரஹர்ஷிதா | கணேசனுடைய சிறப்பு என்னவென்றால் பண்டாசுரன் அம்பாளின் சைன்யத்துக்கு விதித்த தடைகளை, விக்ன யந்திரத்தை முறித்தவர் . இந்த விக்ன யந்திரத்தை ஸ்ரிஷ்டித்தவன் விசுகன். அதாவது எந்த காரியத்திலும் சங்கல்பத்திலும் தடங்கல், குறைபாடுகளை உண்டாக்கும் யந்திரங்கள் அவை. அவற்றை பலனளிக்காமல் செயது காரிய சித்தி உண்டாக்குபவர் விக்ன ஈஸ்வரர். விக்னேஸ்வரர். விநாயகர். அம்பாளுக்கு அதனால் தான் கணேசனை பிடிக்கும். சிவகணங்களுக்கு தலைவன் கணேசன்.

* 79 * பண்டாஸுரேந்த்ர நிர்முக்த சஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ - பண்டாசுரனின் அஸ்திரங்களை தடுத்து அவற்றை உடைக்கும் பயனற்றுப்போக செய்யும் அஸ்திரங்களை பிரயோகித்தாள் லலிதாம்பிகை. மற்ற அஸ்த்ரங்களால் அவனை துன்புறுத்தி வென்றாள் ,கொன்றாள் .

* 80 * கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி: | அம்பாளின் விரல் நகங்களின் முனையினால் விஷ்ணுவின் தசாவதாரங்களை நிர்ணயித்தவள். சர்வ அசுர அஸ்திரத்தால் அசுரர்களை அழியச்செய்தவள் அம்பாள். இந்த ஸ்லோகத்தை அம்பாள் மனிதனின் ஐந்து நிலைகளையும், பிரம்மத்தின் ஐந்து காரியங்களையும் உண்டாக்கியவள் என்பதை தசாவதாரம் என்று சூசகமாக உணர்த்துவதாக சொல்வார்கள்.

* 81 * மஹா பாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தாஸுர ஸைநிகா- - மந்த்ர உச்சாடனத்துடன் வீசப்படும் அஸ்திரங்கள் இப்போதுள்ள ATOM BOMB ஐ விட அதிக அழிவு சக்தி வாய்ந்தவை. அதுவும் அம்பாள் பிரத்யேகமாக அபரிமித சக்தியுடன் பண்டாசுரனை வதம் செய்யும் போது அவளிடமிருந்து சென்ற அஸ்திரங்கள் எதிரியின் சைன்யத்தை முழுதுமாக அக்னிஜ்வாலையோடு கபளீகரம் செய்துவிட்டது. அவள் விடுத்த அஸ்திரம் மஹா பாசுபதாஸ்திரம். பாசுபதாஸ்திர மந்த்ரம் ஓம் நமசிவாய: இந்த பஞ்சாக்ஷரத்துக்கு எவ்வளவு சக்தி பலம் என்று இப்போது புரிகிறதா. அடிக்கடி நாம் ஓம் நமசிவாய என்று ஜபிக்க வேண்டியதன் முக்யத்வம் புரியும்.

*82* காமேச்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸுர சூந்யகா : சூன்யகா என்பது பண்டாசுரனின் தலைநகரம். காமேஸ்வரன் பெயர் சொல்லி விடுத்த அஸ்திரம் பண்டாசுரனை அவனுடைய தலைநகரத்தோடு சேர்த்து சாம்பலாக்கிவிட்டது. அம்பாளின் இந்த நாமா பண்டாஸுர வதத்தை லலிதை வெற்றிகரமாக முடித்ததை சொல்கிறது.

*83* ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ ஸம்ஸ்துதவைபவா --- பண்டாசுரனை வதம் செய்த ஸ்ரீ லலிதாம்பிகையே ப்ரம்ம தேவன் விஷ்ணு இந்திராதி தேவர்கள் போற்றுகிறார்கள். மஹா சக்தி என்று வணங்குகிறார்கள்.

இன்னும் கடலளவு இருக்கிறது அம்பாளின் நாமங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அறிவோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...