Thursday, July 19, 2018

LALITHA SAHASRANAMAM


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (144 - 167)
J.K. SIVAN

नित्यमुक्ता, निर्विकारा, निष्प्रपञ्चा, निराश्रया ।
नित्यशुद्धा, नित्यबुद्धा, निरवद्या, निरन्तरा ॥ 45 ॥

Nityamukta nirvikara nisprapancha nirashraya
Nitya-shudha nitya-budha niravadya nirantara – 45

நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |
நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா || 45

निष्कारणा, निष्कलङ्का, निरुपाधि, र्निरीश्वरा ।
नीरागा, रागमथनी, निर्मदा, मदनाशिनी ॥ 46 ॥

Nishkarana nishkalanka nirupadhirnirishvara
Niraga ragamadhani nirmada madanashini – 46

நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர் நிரீச்வரா |
நீராகா ராகமதநீ நிர்மதா மதநாசிநீ || 46

निश्चिन्ता, निरहङ्कारा, निर्मोहा, मोहनाशिनी ।
निर्ममा, ममताहन्त्री, निष्पापा, पापनाशिनी ॥ 47 ॥

Nishchinta nirahankara nirmoha mohanashinee
Nirmama mamatahantri nishpapa papanashini – 47

நிச்சிந்தா நிரஹங்காரா
நிர்மோஹா மோஹநாசிநீ |
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசிநீ || 47

144 * நித்யமுக்தா - அம்பாள் நம்மைப் போல் இல்லை. சதா சர்வ காலமும் எந்த உலகப்பற்றுதலும் இன்றி, மோக்ஷ சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருப்பவள். ப்ரம்ம ஸ்வரூபம்.

*145 * நிர்விகாரா - துளியும் மாறுபாடு இல்லாதவள், மாறாதவள் அம்பாள். ப்ரம்மத்துக்கு என்ன மாறுதல் இருக்கமுடியும்.? ஸ்ருஷ்டி ரகசியமே ரெண்டால் தான். புருஷன் பிரகிருதி. புருஷன் தான் பரமாத்மா சக்தி. மற்றதனைத்தும் ப்ரகிருதி. சர்வ ஞானமும் கொண்ட படைப்பாளி புருஷன். அதில் அம்பாள் அடக்கம்.
ப்ரகிருதியில் 23 தத்துவங்கள் தான் மாற்றத்தை தருவன. மஹத் என்று அதை சொல்வோம். ரெண்டாவது தான் அஹம்காரம். புருஷன் என்றால் ஆண் என்று அர்த்தம் அல்ல. முதன்மை ஸ்தானம் வகிப்பவர். அம்பாள் இங்கு புருஷன் எனப்படுகிறாள்.

146 * நிஷ்ப்ரபஞ்சா - இந்த உலக இயலுக்கு, சம்பந்தத்திற்கு அப்பாற்பட்டவள் . ஆதி சக்தி, அநாதி யானவள்.

* 147 *நிராச்ரயா - எந்த ஆதரவும், துணையும், தேவையும், எதிர்பார்ப்பும் அற்றவள். தைத்ரிய உபநிஷத் ''அநிலையனே '' என்பது எதன் சார்பும் துணையும் அற்ற,எதையும் யாரையும் சார்ந்து இல்லாத.. என்ற இந்த நிலையை தான்.

* 148 *நித்யசுத்தா- என்றும் எப்போதும் பரிசுத்தமானவள் ஸ்ரீ லலிதாம்பிகை.

* 149 * நித்யபுத்தா - அழிவற்ற சாசுவதமான இயற்கையான ஞானம் கொண்டவள்.

* 150 * Niravadhya - நிரவத்யா - குறையொன்றுமில்லாதவள், குற்றம் காணமுடியாதவள் அம்பாள். குறைகள் உண்டாக காரணம் அஞ்ஞானம், அம்பாள் பரிபூரண ப்ரம்ம ஞான ஸ்வரூபம் அல்லவா?

151 * நிரந்தரா - என்றும் தொடர்ந்து இருப்பவள். முடிவற்ற, எல்லையில்லாத கருணாசாகரி. எங்கும் நிறைந்தவள்.

* 152 * நிஷ்காரணா - காரணங்களை கடந்தவள் . ப்ரம்மம் காரணங்களுக்கு அப்பாற்பட்ட பர வெளி. அவளே ஆதி காரணி. ஸ்ரீ சக்ர வழிபாட்டில் அம்பாள் ''காரணானந்த விக்ரஹே '' என்று போற்றப்படுகிறாள்.

* 153 *நிஷ்களங்கா - எந்த குறைபாடு, மாசு மரு , அற்ற பரிபூரணி ஸ்ரீ லலிதாம்பிகை என்று போற்றுகிறார் ஹயக்ரீவர். சுத்த ப்ரம்ம பராத்பரம்.

* 154 * நிருபாதி - இது தான் ஆதாரம் என்று எதுவுமே இல்லாத பரம்பொருள் பரமேஸ்வரி. எல்லையற்றவள்.

* 155 * நிரீச்வரா - யாருடைய எந்த கட்டுப்பாடும் இல்லாதவள். தானியங்கி. அவளே ஈஸ்வரன் ஈஸ்வரி. சர்வ சக்தியான அவளுக்கு மேலே யார் ??

* 156 * நீராகா -- எந்த ஆசையும், விருப்பமும் இல்லாதவள் ஸ்ரீ லலிதா. இல்லாதவன் தான் எதையாவது தேடுவான்? சர்வமும் ஆன பரப்ரம்மத்துக்கு எது தேவை?

* 157 *ராகமதநீ - சாதகர்கள், பக்தர்கள் மனதில் வளரும் ஆசைகளை, வேட்கைகளை, விருப்பங்களை, தேடல்களை, அளிப்பவள் அம்பாள். பதஞ்சலி யோகா சூத்ரம் (II.3) ஒருவனது வாழ்வில் ஐந்து இடையூறுகள், அவனை அலைக்கழிப்பவை எது என்றால் அவை, அறியாமை, அஞ்ஞானத்தால் விளையும், கர்வம், பந்தம், பொறாமை, உலகத்தின் பொருள்கள் மேல் பற்றுதல். அம்பாள் இந்த நோய்க்கு நல்ல டாக்டர். கிட்டவே சேர விடமாட்டாள்.

* 158 * நிர்மதா - எதிலும் நம்பிக்கை தேடுபவள் அல்ல பரமேஸ்வரி. நம்பிக்கை எதிர்பார்ப்பின் அஸ்திவாரத்தில் உருவாகிறது.

*159* மதநாசிநீ - வீண் டம்பம், கர்வம் தலைகனம் , அகம்பாவம், தற்பெருமை எல்லாவற்றையும் பக்தர்களிடமிருந்து அழிப்பவள். இதெல்லாம் இருந்தால் எந்த ஜென்மத்தில் ஞானம், பெறுவது, எப்போது மோக்ஷமடைவது?

* 160 * நிச்சிந்தா - கவலை என்றால் என்ன என்று அறியாதவள். நமது வாழ்நாளின் பெரும்பகுதியை ஏதோ ஒரு கவலை, மன வியாகூலத்தில் கழித்து வாடுகிறோமே. அம்பாளை சரணடைந்தால் இதெல்லாம் கிட்டே வருமா? அம்பாளுக்கு என்ன கவலை இருக்கிறது. ஸ்ரீ லலிதாம்பிகைக்கு சகலமும் பொறுப்பேற்ற வாராஹி , சியாமளா இருக்கிறார்களே,

* 161 * நிரஹங்காரா -- சகல சௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீ லலிதாம்பிகை இருக்கு திசை பக்கம் கூட அஹம்காரம் நுழையாது. சத்வ ரஜோ தமோ குணங்கள் உள்ள இடத்தில்தான் அஹம்காரம் தலை காட்டும். நிர்குணமாக அருள் பாலிக்கும் அம்பாளிடம் அஹங்காரத்துக்கு என்ன வேலை?

* 162 * நிர்மோஹா எதன் மீதும் மோகம் அற்ற, பற்று இல்லாதவள் ப்ரம்ம ஸ்வரூப ஸ்ரீலலிதாம்பிகை. ஆத்மாவை அடைய முதலில் மனம் தூய்மையாக பற்றற்றான் பற்றினை பற்றவேண்டும். . அப்போது தான் அம்பாள் தென்படுவாள்.

* 163 * மோஹநாசிநீ . பாரதியார் பராசக்தி என் மோகத்தை கொன்றுவிடு என்று வேண்டினார் ஞாபகம் இருக்கிறதா? அம்பாள் மோகத்தை நாசம் செய்பவள். நம்மை அழிவுப்பாதைக்கு கூட்டிச் செல்வது மோகம். லலிதாம்பாள் பக்தன் மனதில் மோகத்தை அழிப்பவள்.

நிர்மமா -- ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதாம்பாள் சுயநலம் இல்லாதவள் என்கிறார். ஏன்? ஏதாவது நம்மிடம் இல்லாதது தேவையாகிறது. அதை எப்படியாவது பிறரிடமிருந்து தனக்கென்று உடமைப் படுத்திக் கொள்ள தோன்றுவது தான் சுயநலம். தன்னிடம் இருப்பதை கொடுக்காததும் கூட. அம்பாளிடம் இல்லாதது என்ன. பிறர் யார்? எல்லாம் அவளே. அவளிடமிருப்பது அவளுக்கா பிறர்க்கா? சுயநலம் எங்கிருந்து வந்து இதில் கலக்கும்?* 164 *

* 165 * மமதாஹந்த்ரீ - லலிதாம்பிகை பக்தர்கள் மனதில் குடிகொண்ட சுயநலத்தை அகற்றுபவள். பிறகு தான் அவளை அடையமுடியும்.

166 * நிஷ்பாபா -- பாபம் அணுகாதவள் ஸ்ரீ லலிதை. ஆசை தானே பாபம் செய்வதற்கு காரணம். ''அர்ஜுனா நான் செய்யும் காரியம் எதுவும் எனக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது. அதன் விளைவு எனும் கனியும் நான் விரும்பாதது. ஸ்ரீ அம்பாள் செய்யும் கர்மங்கள் அவளுக்காக அல்ல. நமக்காக. எந்த பலனும் அவள் எதிர்பார்ப்பதில்லை. அவளை அணுகாதவை.

* 167 * பாபநாசிநீ - பாபம் துளியாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அப்படியே அதை அழித்து விடுபவள் மாதா லலிதாம்பிகை. ஆங்கில விஞ்ஞானி புதிதாக கண்டுபிடித்துவிட்டதாக உலகம் மெச்சுகிறதே அவன் என்ன கண்டுபிடித்தான்? ''ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான, எதிராக விளைவு மற்றொரு செயல் உண்டு'' '
– for every action there is an equal and opposite reaction. இது என்ன புதுசு? ரிஷிகள் வேதங்கள் ஆயிரம் வருஷங்கள், யுகங்களில் முன்பே சொல்லியிருக்கிறதே. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் கர்மா பற்றி. கிருஷ்ணன் படித்து படித்து அர்ஜுனன் மூலம் நமக்கு சொன்னது தானே இது. கர்மா நல்லதாக இருந்தால் நல்ல பலன். கேட்டதாக பாபமாக இருந்தால் விளைவை அனுபவித்தே தீரவேண்டும். இதை இங்கிலீஷில் கொஞ்சம் சொன்னால் நியூட்டன் பெரிய விஞ்ஞானி . பாபங்களை கொளுத்தி விடுவாள் அம்பாள்.



இன்னும் அம்பாளை அறிவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...