ஆதி சங்கரர் - J.K. SIVAN
சாதன/உபதேச பஞ்சகம் 3
அடேயப்பா, ஆதிசங்கரரின் உபதேச பஞ்சகத்தில் இதுவரை பதினாறு படிகள் ;ஏறிவிட்டோமே. இன்று கொஞ்சம் ஏறுவோம். ஒரு படிக்கட்டு - எட்டு படிகள் கொண்டது. சுலபமாக ஏறுவதற்கு மனதில் தெம்பை தருகிறார் ஆதி சங்கரர்.
वाक्यार्थश्च विचार्यतां श्रुतिशिरः पक्षः समाश्रीयतां
दुस्तर्कात्सुविरम्यतां श्रुतिमतस्तर्कोऽनुसन्धीयताम्।
ब्रह्मास्मीति विभाव्यतामहरहर्गर्वः परित्यज्यतां
देहेऽहंमतिरुझ्यतां बुधजनैर्वादः परित्यज्यताम्॥३॥
vākyārthaśca vicāryatāṁ śrutiśiraḥ pakṣaḥ samāśrīyatāṁ
dustarkātsuviramyatāṁ śrutimatastarko’nusandhīyatām |
brahmāsmīti vibhāvyatāmaharahargarvaḥ parityajyatāṁ
dehe’haṁmatirujhyatāṁ budhajanairvādaḥ parityajyatām ||3||
வேத சாஸ்திர நூல்களை கற்று அர்த்தம் புரிந்து கொள்ளவேண்டும். ரிஷிகள், கற்றுணர்ந்த மஹான்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை அவர்கள் பார்வையில் உணரவேண்டும்.
விதண்டா வாதம், குதர்க்கம் உதவாது. ரிஷிகளை விட தனக்கு அதிகம் தெரியும் என்ற கனவில் சிலர் புது அர்த்தங்கள் சொல்லி குழப்புவது பஞ்சமகா பாதகத்தை ஆறாம் மஹா பாதகமாக மாற்றிவிடும். இதை படிப்படியாக தருகிறேன்.
17. அருமையான மஹா வாக்கியங்களை அர்த்தத்தோடு உணர்ந்து பலனடைவாய்.
18. வேதங்கள் என்ன சொல்கிறது என்று முதலில் புரிந்து கொள்வோம். எதை உணர்த்த வேத ரிஷிகள் எந்த வார்த்தைகளை உபயோகித்து சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்து ருசி.
19. குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு யர்ரம் தானே -- விதண்டா வாதம் வேண்டாம்.
20 ரிஷிகள் எதை எவ்வாறு உணர்த்துகிறார்கள் என்பது பற்றி பேசுவோம். அறிந்து கொள்வோம்.,
21. வேதங்கள் சொல்லும் தர்க்கம் என்ன அவற்றின் உட்பொருள் என்ன என்று மட்டுமே அறிந்து கொண்டு பின் போற்றுவோம். கற்றவர்களோடு விவாதம் வேண்டாம்.
22. நான் தான் ப்ரம்மம் என்ற எண்ணம் மனதில் வேர் விடட்டும்.
23. வேத வழியில் நடந்து, ஒவ்வொருநாளும், கர்வம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு நீங்கட்டும். அகம்பாவம் ஆபத்தானது.
24. தேஹாத்ம புத்தி வேண்டாம். ''அடே , கிருஷ்ணமுர்த்தி '' என்று யாரவது கத்தினாள் உடம்பை திருப்பி யார் கூப்பிட்டது என்று பார்க்கிறோமே, அந்த உடம்புக்கு அது இருக்கும் வரை கிருஷ்ணமூர்த்தி என்று தான் பெயர். எல்லோரும் அப்படி கூப்பிட்டால் அது நாம் என்று நினைக்கிறோமோ. அது தான் தப்பு. இந்த உடல் அந்த பெயரை தனது என்று நம்பி அதை கடைசியில் இழந்து ''பாடி'' body ஆகிறது. நான் உண்மையில் இந்த உடலாகிய கிருஷ்ணமூர்த்தி இல்லை. எனக்கு யாரோ வைத்த ஒரு அடையாளம் இந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற பெயர். அது நான் இல்லை. நான் உண்மையில் பெயரில்லாத ஒரு ஆசாமி. உள்ளே இருப்பவன். ஆத்மா என்று அவனை ஞாபகம் வைத்துக்கொள்'' - என்கிறார் சங்கரர்.
No comments:
Post a Comment