Saturday, July 7, 2018

KUDHAMBAI SITHTHAR


குதம்பை சித்தர்  j.k. sivan


சிலருக்கு  விநோதமான எண்ணங்கள் தோன்றும். ஒருவர் என்னை கேட்டார்.  சார்  நீங்கள் குதம்பை சித்தர் பாடல்கள் பற்றி எழுதுகிறீர்கள்  ஏன்  அவர் குதம்பாய் என்று ஒரு பெண்ணை பார்த்து இதெல்லாம் சொல்கிறார். ஆணுக்கு சொன்னால் என்ன ?. அவனுக்கு தேவை இல்லையா?  கேட்கமாட்டானா? பெண்ணுக்கு தான் இந்த அறிவுரை அவசியமா?  

ரொம்ப நியாயமான கேள்வி. கட்டாயம் குதம்பை சித்தரை சந்தித்தால் இந்த கேள்வியை கேட்டு பதிலைப் பெறுகிறேன் என்று சொல்லி தப்பித்தேன்.  கவிஞர்கள் பெண்ணே, தோழி, என்று பாரதியார் போல் சிலர் விஷயங்களை கூறுவது ஆழ்வார்கள் காலத்திலிருந்து இருக்கிறது. ஆண்  பெண்ணை விட மன உறுதி குறைந்தவன் என்று சொல்வதை விட, அவன் தனக்கு தேவையானதை யோசிப்பவன். நல்லவிஷயம் தேட ஆரம்பித்தானானால் அவனுடைய வேகத்துக்கு  ஈடு கொடுக்க முடியாது. பெண்களை  விட ஆண்  சுதந்திரமானவன். கட்டுப்பாட்டுக்குள் அவனை கொண்டுவருவது கஷ்டம்.

ஒரு பெண்ணுக்கு  நல்ல விஷயம்  ஒன்று சொன்னால் ஒரு வம்சத்துக்கு சொன்னமாதிரி. குதம்பை சித்தருக்கு இது தெரிந்திருக்கலாம். அல்லது வேறொருவரும் கிடைக்காமல் குதம்பை என்கிற பெண்  ஓட வழியில்லாமல் அவரிடம் மாட்டிக்கொண்டிருப்பாளோ?

ஒரு உண்மை என்னவென்றால்,  குதம்பை என்பது ஒரு காதணி, கம்மல், தோடு மாதிரி.  குதம்பை சித்தரின் அம்மா அவருக்கு சிறுவயது முதல்  அதை அணிவித்து அழகு பார்த்தவள்.  அவர் காதோடு குதம்பை எப்போதும் இருந்ததால் அவரையே குதம்பை என்று அழைத்து  பின்னர்  சித்தரானபோதிலும் அந்த பெயர் நிலைத்து விட்டது. அவரும் தனக்கே உபதேசித்துக் கொள்ளும் தத்துவங்களாக இந்த குதம்பை சித்தர் பாடல்கள் அமைந்துள்ளது. அதுவும் வழக்கத்தில் உள்ளது தான்.  வேமனா  சதகத்தில் வேமனா தனக்கே சொல்லிக் கொள்வது போல் தான் நீதி அறிவுரைகள் சொல்வார். ஏற்கனவே
வேமனா பற்றி சொல்லி இருக்கிறேனே. 
எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
     சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
     சந்ததம் வாழ்த்தடியோ.''

கல்லினுள் தேரைக்கும், கருப்பை  உயிர்க்கும்  புல்லுணவாவது தருபவன் ஈசன். அவனை என்றும் மறவாதே. வாழையடி வாழையாக வணங்கப் பட  வேண்டியவன்.


காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
     நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
     நாணமற் ஏத்தடியே.18
என்றும் இறுதி, முடிவு இல்லாத அற்புதமான அந்த இறைவனை   முடிவற்ற கல்ப காலத்திற்கு அப்பால் பட்ட அழிவற்ற உண்மையை  போற்றி ப் பாடு குதம்பாய் .

அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
     துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
     துணிவாய்நீ போற்றடியோ.19

 அவன் அணுவுக்குள் அணு. பெரிதிலும் பெரிதானவன்.  அண்ட  பகிரண்ட  ஞான தீபம். அவனை மனம் விரும்பி போற்றிப்பாடு குதம்பாய்.

மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
     காணிக்கை நன்மனமே குதம்பாய்
     காணிக்கை நன்மனமே.20

இப்படிப்பட்ட அந்த பரமேஸ்வரன் நமக்கு கேட்காமலேயே எல்லாம் அருள்கிறானே, அவனுக்கு  என்ன காணிக்கை தருவது என்றா கேட்கிறாய், குதம்பாய், வேறொன்றும் வேண்டாம்,  அந்த சுத்த ஜாதிக்கு நம்மால் கொடுக்க முடிந்த காணிக்கை, அவன் விரும்பும், நமது நல்ல மனம் ஒன்றே. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...