Saturday, July 7, 2018

LALITHA SAHASRANAMAM



ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்   - 4   J.K. SIVAN 

இதுவரை  ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாம  த்யான ஸ்லோகங்கள், தொடர்ந்து முதல் இருபது நாமங்கள், அவற்றின் அர்த்தம்  தெரிந்துகொண்டோம்.  இனி அடுத்த  இருபது  (21-40) நாமங்களை அறிவோம், ஆனந்திப்போம். மனப்பாடம் செய்வோம். மகிழ்வோம்.


कदम्ब मञ्जरीक्लुप्त कर्णपूर मनोहरा ।
ताटङ्क युगलीभूत तपनोडुप मण्डला ॥ 8 ॥


Kadanba manjari klupta karna-pura mano-hara 
Tatanka yugali-bhuta tapa-nodupa mandala – 8 

கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா |
தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா || 8


पद्मराग शिलादर्श परिभावि कपोलभूः ।
नवविद्रुम बिम्बश्रीः न्यक्कारि रदनच्छदा ॥ 9 ॥

Padma-raga shila-darsha pari-bhavi kapolabhuh
 Nava-vidruma binbashree nyakkari radanachada – 9 
பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: |
நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா || 9


शुद्ध विद्याङ्कुराकार द्विजपङ्क्ति द्वयोज्ज्वला ।
कर्पूरवीटि कामोद समाकर्ष द्दिगन्तरा ॥ 10 ॥

Shudha vidyankurakara dvijapankti dvayojvala 
Karpura-vitikamoda samakarsha digantara – 10 

சுத்த வித்யாங்குராகார
த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா |
கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா || 10


निजसल्लाप माधुर्य विनिर्भर्-त्सित कच्छपी ।
मन्दस्मित प्रभापूर मज्जत्-कामेश मानसा ॥ 11 ॥


Nijasanlapa madhurya vinirbhastitakachapi 
Mandasmita prabhapura majatkamesha manasa – 11 
நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த்ஸித கச்சபீ |
மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா || 11

अनाकलित सादृश्य चुबुक श्री विराजिता ।
कामेशबद्ध माङ्गल्य सूत्रशोभित कन्थरा ॥ 12 ॥

Anakalita sadrusya chubuka shree virajita 

அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா |
காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர
சோபித கந்தரா || 12

कनकाङ्गद केयूर कमनीय भुजान्विता ।
रत्नग्रैवेय चिन्ताक लोलमुक्ता फलान्विता ॥ 13 ॥

 Kanakangada keyura kamaniya bhujanvita 
கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா |
ரத்நக்ரைவேய சிந்தாக
லோலமுக்தா பலாந்விதா || 13

कामेश्वर प्रेमरत्न मणि प्रतिपणस्तनी।
नाभ्यालवाल रोमालि लताफल कुचद्वयी ॥ 14 ॥


 Kameshvara prema-ratna mani prati-panastani

காமேச்வர ப்ரேமரத்ந
மணிப்ரதிபண ஸ்தநீ |
நாப்யாலவாலரோமாலி 
லதாபலகுசத்வயீ || 14
लक्ष्यरोमलता धारता समुन्नेय मध्यमा ।
स्तनभार दलन्-मध्य पट्टबन्ध वलित्रया ॥ 15 ॥


Lakshya romalata bharata samunneya madhyama 

லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா |
ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா || 15

अरुणारुण कौसुम्भ वस्त्र भास्वत्-कटीतटी ।
रत्नकिङ्किणि कारम्य रशनादाम भूषिता ॥ 16 ॥



Arunaruna kaostunbha vastra bhasvatkatitati
 Ratna kinkinikaramya rashanadama bhushita – 16 
அருணாருண கௌஸும்ப 
வஸ்த்ர பாஸ்வத் கடீதடீ |
ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா || 16

कामेश ज्ञात सौभाग्य मार्दवोरु द्वयान्विता ।
माणिक्य मकुटाकार जानुद्वय विराजिता ॥ 17 ॥


Kamesha-gynata saobhagya marda-voru dvayanvita 

காமேசஜ்ஞாதஸௌபாக்ய
மார்தவோரு த்வயாந்விதா |
மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா || 17


* 21 * கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா  - லலிதாம்பாளின்  செவிகள் எப்படி இருக்குமாம் தெரியுமா. அன்றலர்ந்த  அழகு மிகுந்த கதம்ப மலர்கள் போல 

* 22 * தாடங்க யுகலீ பூத தபநோடுப மண்டலா || நம்மைப்போல குந்து மணி தங்கத்தில் அவள் தோடு அணிபவள்  இல்லை.  கண்ணைப்பறிக்கும் ஒளி வீசும் சூரியனும் சந்திரனும்  என்னை போட்டுக்கொள்  என்று எதிரே வந்து நின்றால்  போனால் போகிறது என்று காதில் அணிபவள் .

* 23 * பத்மராக சிலாதர்சபரிபாவி கபோலபூ: பத்ம ராக கல்லை இழைத்து கண்ணாடியாக்கினால்  எப்படி வழவழவென்று ஒளி வீசும். அது போல் இருக்கும் கன்னங்களை உடையவள் அம்பாள். 

* 24 * நவவித்ரும பிம்பஸ்ரீந்யக்காரி ரதநச்சதா -  செம்பவழங்களை  வரிசையாக ஒழுங்கான அளவில் இணைத்ததுபோல் உருவம் கொண்டது லலிதா தேவியின் இதழ்கள்.

* 25 * சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்ஜ்வலா -- அவள் பதினாறு அக்ஷரங்களை கொண்ட ஸ்ரீ வித்யா அல்லவா.  அவள் பற்கள் அவ்வளவு  தூய சாஸ்திரங்களின் சத்ய ஞான வெண்மை கொண்டவை.

* 26 * கர்ப்பூர வீடிகாமோத ஸமாகர்ஷி திகந்தரா --  அவள் இருக்கும் இடத்திற்கு வெகுதூரம் வரை கம்மென்று  மணம் வீசுகிறதே  அது என்னவா ? வேறு  ஒன்றுமில்லை.அவள் மெல்லும் வெற்றிலை  தாம்பூலம் அதில் இருந்து வீசும் சுகந்தம். 

* 27 * நிஜஸல்லாப மாதுர்ய விநிர்ப்பர்த்ஸித கச்சபீ    -  அம்பாள் குரல் இனிமை தெரியவேண்டுமானால் உங்களுக்கு அவசியம்  சரஸ்வதி தேவியின் வீணை  ( கச்சபி என்று பெயர் அதற்கு )யிலிருந்து எழும் ஸ்வரங்களின் நாதம் தெரியவேண்டும்.

* 28 * மந்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேசமாநஸா |  -  அழகிய நெளிந்து ஓடும் காட்டாறு களை பெரிய மலைகளில் படத்திலாவது பார்த்திருப்பீர்கள். மன்மதனின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகு அது. அதே தான்  அம்பாளின் புன்னகையின் அழகு. 

* 29 * அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா -- யோசித்துப்பார்த்தால் எதை ஈடு என்று சொல்ல தெரியவில்லை  அவ்வளவு ல்ல தேர்ந்த அழகு லலிதாம்பாளின் முகவாய். 

* 30 * காமேசபத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா  - அம்பாளின் கழுத்தில் மின்னுவது எது என்று தெரிந்ததா?  மகேஸ்வரன் காமேஸ்வரன் கட்டிய புனித சரடு தான்.  இதைவிட  விலைமதிப்பில்லாத ஆபரணம் ஒன்று இருக்கிறதா?

* 31 * கநகாங்கத கேயூர கமநீய புஜாந்விதா -  அம்பாள் அணிந்துள்ள கேயூரம் எனும் தோள்வளை எப்படி கண்ணைப் பறிக்கிறது பார்த்தீர்களா? 

* 32 *
 ரத்நக்ரைவேய சிந்தாக லோலமுக்தா பலாந்விதா -  உலகின் விலையுயர்ந்த எந்த நகைக்
கடையிலும்  காணமுடியாத  அற்புத நெக்லெஸ் அம்பாள் அணிந்து கொண்டிருக்கிறாளே. சிப்பியிலிருந்து வெளிவந்த நல் முத்துக்கள், நவமணி முத்து மாணிக்கங்கள் கோர்த்த தேவலோக நகைச் சிற்பிகள் வேலைப்பாடு மிக்க ஆபரணம் அம்பாளிடம் வந்தபிறகு மேலும் அழகு பெறுகிறது.

* 33 * காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ | -  பெண்மைக்குரிய லக்ஷணங்களோடு காமேஸ்வரனை கவரும் லோக மாதா. 

* 34 *
நாப்யாலவாலரோமாலி 
லதாபலகுசத்வயீ  
--  அற்புத பெண்ணுக்குரிய  உடலமைப்பு கொண்டவள் அம்பாள்.
* 35 * லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய மத்யமா |   இல்லையோ என்னும்படியாக இருக்கும் கொடியிடையாள்  லலிதாம்பிகை என்கிறார் ஹயக்ரீவர், கடலையே குடித்த  பெரிய தொப்பை அகஸ்தியரிடம். அவரும் ஆமாம் என்கிறார். 

* 36 *  ஸ்தநபார தலந்மத்ய பட்டபந்த வலித்ரயா  -  அம்பாளின் இடையில் வயிறுபாகம் என்று ஒன்று இருக்குமானால் அதில் மூன்று வரிகள் போல் சுற்றிக்கொண்டிலிருக்கும் கொடிகள் போல் காணப்படுமாம். அதிலிருந்து ஓஹோ இடை என்று ஒன்று இருக்கிறது அம்பாளுக்கு என புரிந்துகொள்ளலாம்.

* 37 *அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீதடீi -  அம்பாளின் மெல்லிய இடையை சுற்றி அழகாக ஒரு இளம்சிவப்பு  பட்டு வஸ்திரம் மினுக்குவது என்ன நேர்த்தியாக இருக்கிறது. மனத்தை கொள்ளை கொள்ளும் தெய்வீக அழகு அல்லவோ.
* 38 * ரத்ந கிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா -   நமது பெண்கள் அக்காலத்தில் ஒட்டியாணம் என்று ஒரு பட்டை யான தங்க ஆபரணம் அணிவார்கள். பயமுறுத்துவார்கள்.  அம்பாள்  அணியும் விதமே வேறு.  மெல்லிய நூல் மாதிரி மெலிந்த  பொன்  கயிறு அவள் இடுப்பை அலங்கரிக்கும். அதில் சுநாதம் எழுப்பும் சிறிய மணிகள் அசைந்து அழகும் ஒளியும் ஒலியும்  சேர்க்கும். 

39 * காமேசஜ்ஞாதஸௌபாக்ய  மார்தவோரு த்வயாந்விதா -- இடையழகை தொடர்ந்து ஹயக்ரீவர் தொடையழகை வர்ணிக்கிறார்.  அவள் தொடையழகு  அவளது பிராண நாதன்  காமேஸ்வரன் ஒருவனுக்கல்லவோ தெரியும் என்கிறார். 

* 40 * மாணிக்யமகுடாகார ஜாநுத்வய விராஜிதா -   இரு மாணிக்க பந்துகள் உருண்டு அழகிய முழங்கால் மூட்டுகளாக ஆனவை  என்கிறார் அகஸ்தியரிடம் ஹயக்ரீவர்.
மேற்கொண்டு அறிவோம்.

1 comment:

  1. திகந்தரா என பெண் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா?

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...