Sunday, July 22, 2018

Uththiramerur MURUGAN









யாத்ரா விபரம் J.K. SIVAN
கஜ வாகன குமரன்

8/7/2018 அன்று வெயில் கொளுத்தினாலும் மோட்டார்காரில் குளுமையாக குளிர் சாதனம் இயங்கி கொண்டிருந்தது. உத்திரமேரூர் தரிசனம் முடிந்து அருகே பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் சென்றபோது கதவை மூடி விட்டார்கள் இருந்தாலும் நான் ஏற்கனவே அந்த ஆலயத்தை பலமுறை சென்று முருகனை தரிசித்ததால் விவரங்கள் சொல்கிறேன்.

உத்திரமேரூர் சுப்ரமணிய ஸ்வாமி கோவில் ஒரு பழைய கோவில். இதைப்பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. இங்கே காஸ்யப முனிவர் மற்ற ரிஷிகளோடு தவம் இருந்த போது அவர் தவத்தை கலைக்க தீங்கு செய்ய மலயன் மாகரன் என்ற யாராலும் கொல்ல முடியாத சக்தி வாய்ந்த ரெண்டு ராக்ஷஸர்கள் வருகிறார்கள். காஷ்யபர் அங்கே அருள்பாலிக்கும் கடம்பவனநாதரை வேண்ட, சிவன் தனது இளையமகன் முருகன் ராக்ஷஸர்களை அழிப்பான் என்கிறார். சிவனின் வாளோடு முருகன் இங்கே வருகிறான். மலயன் தலை துண்டாகி அது விழுந்த இடம் தான் இப்போது மலையன்குளம். மாறன் ஓட அவனை துரத்தி கொண்ட இடம் மாகறல். அருமையான கோவில் அங்கே இருக்கிறது. இனி யாரும் உங்களது தவத்தை கெடுக்க முடியுனது என்று தனது வேலை அங்கே நாடுகிறான் முருகன். அது இன்றும் அங்கே இருக்கிறது. அதன் ஆழம் எவருக்கும் தெரியாதாம். பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரு விசேஷம். வள்ளி தேவயானை கஜவல்லி என்கிற ஒரு உருவமாக இங்கே அருள் பாலிக்கிறார்கள். முருகன் ஸ்வயம்பு. ஜெயம்கொண்ட சோழன் காலத்து கோவில்.
நீயே இங்கிருந்து தேவர்களை ரக்ஷிப்பாய் என்று தந்தை சிவனின் கட்டளைக் கேற்ப பாலசுப்ரமணியன் அருள்பாலிக்கும் அழகிய கோவில்.

முருகன் கோவில்களில் வாகனம் மயிலாக இருக்குமே. இங்கு யானை. முருகன் ஜம்மென்று ஆறு அடி உயரம்.

உத்திரமேரூர் முருகன் கோவிலை சுற்றி பெரிய சந்தை. மலைமலையாக பச்சை பசேல் என்று காய்கறிகள் மொத்த சில்லறை வியாபாரம் கொழிக்கிறது. அருள் பிரசாதம் பெற்றுவிட்டு பைகள் நிறைய காய்கறிகளோடு செல்வோர் தான் அதிகம்.

உத்திரமேரூரிலிருந்து தென்னாங்கூர் 11 -12 கி.மீ. தூரம். வழியெல்லாம் சின்ன சின்ன ஊர்கள் நிறைய கோவில் இருக்கின்றன. ஒரு வாரம் போதாது அவைகளை தரிசிக்க. சிலவற்றை நான் பார்த்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...