ஆதி சங்கரர் J.K. SIVAN
சாதன/உபதேச பஞ்சகம்
ஒரு சிந்தனை.
ஒரு சிந்தனை.
எழுத காகிதம், பேனா, கம்பியூட்டர் இல்லாத காலத்திலேயே ஓலைச்சுவடியில், ஆணியால் ஓட்டை குத்தி எழுதவேண்டிய காலத்திலேயே 32 வயது குறுகிய காலத்திலேயே, ஆதிசங்கரர் இவ்வளவு எழுதி இருக்கிறாரே, நான் மேலே சொன்ன வசதிகள் வேகமான உபகரணங்கள் இருந்தால் நமக்கு இன்னும் செல்வம் எவ்வளவு கிடைத்திருக்கும்.
இன்னொரு சிந்தனை குறுக்கிடுகிறது அதை மடக்க. ''ஆமாம் நீங்கள் ரொம்ப பொறுப்பானவர்கள். இருப்பதையே ஒழுங்காக வைத்துக்கொண்டு உபயோகப்படுத்தி நடைமுறையில் பயனடைய தெரியாதவர்களுக்கு இவ்வளவு பேராசையா?''
எத்தனையோ அற்புத காவியங்கள் நூல்களை படைத்த ஆதிசங்கரின் ஒரு ஐந்து ஸ்லோகங்கள் இன்று அறிந்து கொள்வோம். சாதன பஞ்சகம் எனவும் உபதேச பஞ்சகம் என்றும் இதற்கு பெயர். வேதாந்தத்தை கசக்கி பிழிந்து சாரமாக ஐந்து ஸ்லோக ஏணிகள். . ஒவ்வொன்றும் 4 வரி X ரெண்டு படிகள். எனவே ஐந்து ஸ்லோகங்களில் 40 படிகள் கடக்கவேண்டும். சாதனை பயன் தர. என்ன வென்று பார்ப்போமா?
वेदो नित्यमधीयतां तदुदितं कर्म स्वनुष्ठीयतां
तेनेशस्य विधीयतामपचितिः काम्ये मतिस्त्यज्यताम्।
पापौघः परिधूयतां भवसुखे दोषोऽनुसन्धीयतां
आत्मेच्छा व्यवसीयतां निजगृहात्तूर्णं विनिर्गम्यताम्॥१॥
तेनेशस्य विधीयतामपचितिः काम्ये मतिस्त्यज्यताम्।
पापौघः परिधूयतां भवसुखे दोषोऽनुसन्धीयतां
आत्मेच्छा व्यवसीयतां निजगृहात्तूर्णं विनिर्गम्यताम्॥१॥
vedo nityamadhīyatāṁ taduditaṁ karma svanuṣṭhīyatāṁ
teneśasya vidhīyatāmapacitiḥ kāmye matistyajyatām |
pāpaughaḥ paridhūyatāṁ bhavasukhe dośo’nusandhīyatāṁ
ātmecchā vyavasīyatāṁ nijagṛhāttūrṇaṁ vinirgamyatām ||1||
teneśasya vidhīyatāmapacitiḥ kāmye matistyajyatām |
pāpaughaḥ paridhūyatāṁ bhavasukhe dośo’nusandhīyatāṁ
ātmecchā vyavasīyatāṁ nijagṛhāttūrṇaṁ vinirgamyatām ||1||
நமது இந்து சனாதன தர்மம் வேத மதம். மற்ற மதங்களை போல் ஒருவரால் உண்டாக்கப்பட்டதல்ல. எண்ணற்ற ரிஷிகள், மந்திர சக்தியால் உணர்ந்ததை மொத்தமாக சேர்த்து அளிக்கப்பட்ட வசதி. வேதம் என்றால் பகவானின் மூச்சு.
எனவே தான் படிப்படியாக ஏணியில் ஏறி முன்னேறு. மேலே செல். கீழேயே எத்தனை காலம் இருப்பாய்?
1.தினமும் வேதம் கொஞ்சமாவது படி தெரிந்துகொள். நிச்சயம் முடியும். ஆத்மா மெதுவாக
புரியும்.
2. அனுஷ்டானங்கள் அதில் சொன்னபடி செய்.
3. சொல்லப்பட்ட தெய்வங்களை வணங்கு. வழிபடு.
4. செய்யும் காரியத்தை சுய லாபத்துக்கு செய்யாமல் பரோபகாரணமாக விருப்பு வெறுப்பின்றி செய்.
5. பாபங்கள் தனியாக வராது. கூட்டமாக தான் வரும். கிட்டே அணுகாமல் காத்துக்கொள்.
6.இது வரை என்ன என்ன தவறுகள் தப்புகள் செயதாய். கணக்கு வைத்துக்கொள்.
7. ஆத்மாவா ? யார் அவர்? கொஞ்சமாக அவரை தெரிந்துகொள், அறிந்துகொள்.
8. சம்சாரம் எனும் வீட்டிலிருந்து மெதுவாக விடுபட்டு. (வீட்டில் மனைவி எனும் சம்சாரம் அல்ல இது. வாழ்க்கை பந்தம். பற்று. )
சாதன பஞ்சக ரெண்டாவது ஸ்லோக எட்டு ஏணிப்படிகளை அடுத்து அறிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment