Thursday, July 26, 2018

LALITHA SAHASRANAMAM

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (205 -218) J.K. SIVAN

सर्व-सर्वयन्त्रात्मिका सर्व-सर्वतन्त्ररूपा मनोन्मनी ।
माहेश्वरी महादेवी महालक्ष्मीर् मृडप्रिया ॥ ५३॥
महारूपा महापूज्या महापातक-नाशिनी ।
महामाया महासत्त्वा महाशक्तिर् महारतिः ॥ ५४॥

ஸர்வ யந்த்ராத்மிகா ஸர்வ
தந்த்ரரூபா மநோந்மநீ |
மாஹேச்வரீ மஹாதேவீ
மஹாலக்ஷ்மீர் ம்ருடப்ரியா || 53

Sarva yanthrathmika Sarva thanthra roopa Manonmani
Maaheswari Mahaa devi Maha lakshmi Mrida priya

महारूपा महापूज्या महापातक-नाशिनी ।
महामाया महासत्त्वा महाशक्तिर् महारतिः ॥ ५४॥

Maha roopa Maha poojya Maha pathaka nasini
Maha maya Maha sathva Maha sakthi Maha rathi

மஹாரூபா மஹாபூஜ்யா
மஹாபாதக நாசிநீ |
மஹாமாயா மஹாஸத்வா
மஹாசக்திர் மஹாரதி: || 54


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (205 - 225) அர்த்தம்

சர்வேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகை எனும் காமாக்ஷி கையில் ஏன் கரும்பை வைத்துக்கொண்டிருக்கிறாள். அம்பாள் எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை கூட சாதகமாக்கிக்கொள்கிறாள் என்று புரிய வைக்கும் சம்பவம். மன்மதன் காதல் கடவுள். காமன். அவன் சிவன் தியானத்தில் இருக்கும்போது தனது கரும்புவில்லில் ஐந்து புஷ்ப பானங்களை தொடுத்து சிவன் மேல் எய்துகிறான். மற்றவர்களாக இருந்தால் காமன் கணைகளால் அவன் வசப்பட்டு மதி மயங்குவார்கள். சிவன் தியானம் கலையவே யார் கலைத்தது என்று நெற்றிக்கண்ணால் (ஞானக்கண்) மெதுவாக எதிரே நோக்க அந்த ஞானத்தீ காமனை எரித்து சாம்பலாக்க, அவன் மனைவி ரதி ஓடிவந்து அம்பாளிடம் அழுகிறாள். கணவனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டு கெஞ்சுகிறாள். அம்பாள் யார்? சிவை. தனது கணவன் இட்ட தண்டனை அவள் இட்டது தானே? மீறமுடியாதே. அதே நேரம் தாய் அல்லவா? பாசத்தோடு ரதிக்கு அருள்கிறாள்? எப்படி?

''மன்மதா, எழுந்திரு. உன் மனைவியிடம் சேர். உன் கரும்பு வில் இனி என் கையில் இருக்கட்டும். உன் புஷ்ப பாணங்கள் இனி உன் கரும்பு வில்லிலிருந்து புறப்படாது. அவை என் வசம் இருக்கும். இனி நீ உன் மனைவிக்கு அன்பு கணவன். அவள் கண்களுக்கு மட்டுமே தெரிவாய். உலகத்துக்கு பிரபஞ்சத்துக்கு நீ கரும்பு வில்லேந்தி கணைகள் வீசும் காமன் இல்லை. '' ரதி மகிழ்ந்து வணங்கி மதனோடு செல்கிறாள். மன்மதன் நமக்கெல்லாம் அநங்கன். உடல் இல்லாதவன். பஞ்ச இந்திரியங்களை கட்டுப்படுத்தும் மன்மதன் பாணங்கள் அம்பாளிடமிருந்து அவ்வளவு சுலபாகமாக வெளியேறாது.

இனி அம்பாளின் நாமங்களை தொடர்வோம்.

* 205 * ஸர்வ யந்த்ராத்மிகா - எந்த செப்பு, பித்தளை, தங்க வெள்ளி உலோக தகடாக, எந்தெந்த தெய்வத்தின் சக்தியை ஆகர்ஷிக்கும் யந்த்ரமாக இருந்தாலும் அது ஸ்ரீ லலிதாம்பாவின் சக்தியாகவே தான் மிளிர்கிறது.

* 206 * ஸர்வ தந்த்ரரூபா - தந்திரம் என்பது வழிபாடு. எந்த மந்த்ர தந்த்ர வழிபாடாக இருந்தாலும் அது அம்பாளையே குறித்து செய்ததாகும்.

* 207 * மநோந்மநீ - நமக்கு எத்தனையோ எண்ணங்கள் மனதில் தோன்றுகிறதே அது எல்லாமே குப்பையாக அல்லவோ இருக்கிறது. ஆனால் அதற்கிடையே அற்புதமான சில எண்ணங்களும் கலந்திருக்கிறது. நிறைய மண்ணை மலைமலையாக தோண்டினால் தான் வைரம் கிடைக்கும். குப்பையும் மண்ணும் எறியப்படவேண்டும். நல்ல எண்ணங்களே மனத்தில் தோன்றும் மணி. மனோன்மணி. அது அம்பாள். அவள் தான் மனோன்மணி, உண்மணி, என்கிறார் ஹயக்ரீவர். ஸ்ரீ ருத்ரம் சிவனை மனோன்மனன் என்கிறது. ரிஷிகளின் முத்திரைகளில் மனோன்மணி என்று தியான முத்திரை உண்டு.

* 208 * மாஹேச்வரீ - மஹேஸ்வரனோடு இணைந்த அம்பாள் தான் மஹேஸ்வரி.

* 209 * மஹாதேவீ - மஹாதேவனோடு ஐக்யமானவள் மஹாதேவி. அர்த்தமே தேவை இல்லை இதற்கு. மஹா என்றாலே வெகுவாக உயர்ந்த என்று பொருள். சிவனுக்கு எட்டு ஸ்வரூபங்கள்.
சர்வ ஈஸ்வரன் - பூமி. பவ: புண்ய நதிகள் போல ஜலரூபம், ருத்ரன்: அக்னி ஸ்வரூபம். எரிப்பவன் . உக்கிரன்: காற்று பீமன்: அகண்ட எல்லையற்ற ஜலசக்தி. சுனாமி போல் என்று வைத்துக்கொள்ளுங்கள், பசுபதி: ஆத்மஸ்வரூபம். ஈசானன்: சூர்ய ஸ்வரூபம். மஹாதேவன்: பிறைசூடு சந்திர ஸ்வரூபன். லிங்க புராணம் இதை சொல்கிறது. நான் அல்ல.

* 210 * மஹாலக்ஷ்மீ -- அளவற்ற செல்வங்களை வாரிவழங்கும் செல்வ ராணி ஸ்ரீ மஹா லட்சுமி தேவி விஷ்ணுபத்னி. மஹாலக்ஷ்மியஹே பதிமூன்று வயது பெண்ணாக சொல்கிறது ஒரு புராணம். அதனால் தான் பதிமூன்றாம் நாளான திரியோதசி அன்று லட்சுமி பூஜை செய்வார்கள்.

* 211 * ம்ருடப்ரியா - சிவனுக்கு ம்ரிடன் என்று ஒரு பெயர். சிவனின் தாண்டவ சப்தங்களில் உண்டான பெயர். அதை வாசிப்பதால் அதன் உருவானது தான் ம்ரித அங்கம் - மிருதங்கம் - நந்திகேஸ்வரன் சிவனின் தாண்டவத்துக்கு அந்த சப்தத்தை வாசித்து காட்டும் சொல் கட்டு.

* 212 * மஹாரூபா -- அண்ட பகிரண்ட மகா பெரிய உருவம் கொண்டவள் அம்பாள். பெரியதில் பெரியது. சிறியதில் சிரியதானவள்.

* 213 *மஹாபூஜ்யா - எல்லோராலும் வழிபடப்படுபவள். எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் அவளை தான் வழிபட்டதாகும் அல்லவே. எல்லாமும் அவளே என்றபோது எந்த வழிபாடும் அவளுக்கு தானே.

* 214 * மஹாபாதக நாசிநீ -- எந்த தீய பாப செயலில் மாட்டிக்கொண்டாலும் அவற்றை நாசம் செய்து அதில் இருந்து பக்தனை மீட்பவள் அம்பாள். அதிக பட்ச பாபம் ப்ரம்மஹத்தி, பிராமணனை கொல்வது.

* 215 *மஹாமாயா - சிறு மாயை, பெரு மாயை எல்லா வித மாயைகளையும் அடக்கி ஆள்பவள் அம்பாள். அவளை அதனால் மஹா மாய ஸ்வரூபிணி என்பது. இந்த பிரபஞ்சமே மாயையால் உழல்வது. அவள் மாயையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாவிடில் உலகம் இயங்கமுடியாது. செயல் நின்று விடும்.

* 216 *மஹாஸத்வா - எல்லா ஞானமும் தானேயானவள். சத்வ குண சீலி.

* 217 *மஹாசக்தி - அதீத சக்தி படைத்தவள் அவள் பெயரே சிவசக்தி அல்லவா. சர்வ சக்தி கொண்ட அம்பாள் மஹா சக்தி என்று புகழ்ந்து போற்றுகிறார் ஹயக்ரீவர். ஆமாம் சந்தேகமென்ன என்கிறார் அகஸ்திய மகா ரிஷி.

* 218 *மஹாரதி: உலகத்தில் இதெல்லாம்
நாம் சுகம் இன்பம் என்கிறோமே அதெல்லாம் வாரி வழங்குபவள் ஸ்ரீ லலிதாம்பிகை. சந்தோஷி அவள்.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...