Wednesday, July 11, 2018

lalitha sahasranamam



ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 59 - 71 நாமங்கள் - ஜே.கே. சிவன்


महापद्माटवी संस्था, कदम्ब वनवासिनी ।
सुधासागर मध्यस्था, कामाक्षी कामदायिनी ॥ 23 ॥

Mahapadmatavi sansdha kadanba vanavasinee
Sudha sagara madhyasdha kamakshi kamadaeinee -23

மஹாபத்மாடவீஸம்ஸ்தா கதம்பவநவாஸிநீ |
ஸுதாஸாகரமத்யஸ்தா காமாக்ஷீ காமதாயிநீ || 23

Devarshigana sanghata
stuyamanatma-vaibhava
Bhandasura vadhodyukta-
shakti-sena samanvita – 24

தேவர்ஷி கண ஸங்காத
ஸ்தூயமாநாத்ம - வைபவா |
பண்டாஸுர வதோத்யுக்த
சக்திஸேநா ஸமந்விதா || 24

Sanpatkari samaruda sindhura vrajasevita Asvarudadhishtitasva koti bhiravruta – 25

ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துரவ்ரஜஸேவிதா |
அச்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி
கோடிபி ராவ்ருதா || 25

चक्रराज रथारूढ सर्वायुध परिष्कृता ।
गेयचक्र रथारूढ मन्त्रिणी परिसेविता ॥ 26 ॥

Chakra-raja radharudha sarva-yudha parishkruta
Geya-chakra radha-ruda mantrini parisevita – 26

சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா |
கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா || 26

किरिचक्र रथारूढ दण्डनाथा पुरस्कृता ।
ज्वालामालिनि काक्षिप्त वह्निप्राकार मध्यगा ॥ 27 ॥

Kiri-chakra radha-rudha dandanadha puraskruta
Jvalamalinikakshipta mahni prakara madhyaga – 27

கிரிசக்ர - ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா |
ஜ்வாலாமாலிநிகாக்ஷிப்த
வஹ்நி ப்ராகாரமத்யகா || 27

* 59 * மஹாபத்மாடவீஸம்ஸ்தா | - பத்மாடவீ -- தடாகத்தில் தாமரை பூக்காட்டில் வசிப்பவள் அம்பாள். மஹா பத்மாடவீ என்பது ஒரு பெரிய யானையைக்கூட குறிக்கும். ஆறு சக்ரத்தில் சிரசில் உள்ள சஹஸ்ரார சக்ரத்தில் ஒரு துளை. அதன் பெயர் பத்மாடவீ. கண்ணதாசன் அதை தான் ''ஆயிரம் தாமரை மொட்டுக்கள்'' என்று பாடுவார். அதில் அம்ருதம் ஊறும். அப்படி நமது உடலின் உயர்ந்த சக்கரமான சஹஸ்ராரத்தில் ஆயிரம் தாமரை இதழ்களில் வீற்றிருப்பவள் அம்பாள்.

* 60 * கதம்பவநவாஸிநீ -- அம்பாளை சுற்றி எங்கு பார்த்தாலும் கதம்ப மரங்கள் காடாக. கமகமக்கும் கதம்ப மலர் வாசனை அவளிருக்கும் சிந்தாமணி கிரஹம் இடம் பூரா. அந்த 25 சுவர்கள். ஒவ்வொன்றும் ஒரு தத்வம். இந்த கதம்பவனம் 7வது 8வது சுவர்களுக்கு இடையே. ஒன்று வெள்ளி சுவர் இன்னொன்று தங்க சுவர்.

61 *ஸுதாஸாகரமத்யஸ்தா - -ஸ்ரீ லலிதாம்பிகையின் இருப்பிடம் அம்ருத சமுத்திரத்தின் மத்தியில். சஹஸ்ராரத்தை குறிக்கிறது. ஏற்கனவே மேலே சொல்லியிருக்கிறேன் அது. குண்டலினி சோம சக்ரத்தை நெருங்கும்போது அதன் அளவு கடந்த உஷ்ணம் அப்போது உருகி ஓடுவது தான் அம்ருதம். இதை தான் அம்ருதவர்ஷினி என்பது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த உஷ்ணம் உடலைக் கொல்லாது . நீண்ட ஆயுளை தரும். ரிஷிகள், முனிவர்கள், யோகிகள், சித்தர்கள் அனுபவிக்கும் ஆனந்தாம்ருதம். குண்டலினி உச்சிக்கமலத்தை அடையும் நேரம். அந்த அம்ருதத்தை பிந்து என்பதும் உண்டு.

* 62 * காமாக்ஷீ - காருண்யம், இரக்கம், தயை, உலகில் எல்லோருக்கும் அருளும் அழகிய கண்கள் உடையவள் அம்பாள். கண்களை பார்த்தாலே ஒருவர் உள்ளம் நமக்கு புரியும் என்கிற போது அம்பாளின் கண்கள் கருணையால் எப்படி ஒளிரும், பிரகாசிக்கும்? காம என்றால் அர்த்தம் நிறையபேருக்கு தெரியாது. கா: சரஸ்வதி மா: லட்சுமி. இந்த ரெண்டுமே சேர்ந்த அருள் பார்வை லலிதாவுக்கு.

* 63 *காமதாயிநீ -- வேண்டியதை அருள்பவள். காம என்பது காமேஸ்வரனை குறிக்கும் சொல். தாயினி என்றால் அருள்பவள். சக்தி சிவனின் சக்தியையும் சேர்த்து அருள்பவள். அவளே சிவை தானே. காமதாயினிக்கு காமேஸ்வரனையே உடையவள் என்றும் பொருள் உண்டு.

* 64 *தேவர்ஷி கண ஸங்காதஸ்தூயமாநாத்ம - வைபவா | - அம்பாள் பண்டாசுரனை சம்ஹாரம் செய்ததை குறிக்கும் நாமம். அம்பாளை தேவரிஷிகள் வசிஷ்டர், நாரதர் போன்றோர் வழிபடுகிறார்கள். இந்திராதி தேவர்கள் தொழுகிறார்கள். நிர்குண ப்ரம்மம் அம்பாள் என்பதால் சகல தேவர்களும் வணங்குகிறார்கள். அவர்களைக் காக்கவே அம்பாள் பண்டாசுரனை வென்றாள் கொன்றாள் .

* 65 * பண்டாஸுர வதோத்யுக்த சக்திஸேநா ஸமந்விதா - மன்மதனின் சாம்பலில் உருவானவன் பண்டாசுரன். மன்மதனோ சிவனின் நெற்றிக்கண்ணால் சாம்பலானவன். எனவே தான் பண்டாசுரனுக்கு அவ்வளவு பலம். சக்தி.

* 66 * ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துரவ்ரஜஸேவிதா | -- அம்பாளை வழிபடும் யானைக் கூட்டங்களின் தலைவனான யானை தான் சம்பத்கரீ . சம்பத்கரீ என்கிற நாமத்தில் மூன்று சக்தி வாய்ந்த பீஜாக்ஷர மந்த்ரங்கள் (க+ர +ம அக்ஷரங்கள் பிந்துவோடு ) மறைந் திருக்கிறது.

* 67 * அச்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி கோடிபி ராவ்ருதா -- அம்பாள் போர்க்கோலம் பூண்டவள். அவளை சுற்றி அநேக கோடிக்கணக்கான யுத்த குதிரைகள். அவைகளுக்கு தலைவி அஸ்வாரூத தேவி. புலன்களை அடக்குவதை தான் கோடிக்கணக்கான குதிரைப்படைகளை கட்டுப்பாட்டுக்குள் உடையவள் என்று ஒரு பொருள்.

* 68 * சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்ருதா | சக்ரராஜா என்பது லலிதாம்பிகையின் தேர். அதில் தான் சகல ஆயுதங்களோடு புறப்படுவாள். இங்கு சுத்த வித்யா எனும் பரிபூரண ப்ரம்ம ஞானத்தை அடைய வழிகள் தான் ஆயுதங்கள் என பொருள் படும். இந்த சக்ரராஜா தான் அம்பாள் அமர்ந்து அலங்கரிக்கும் ஸ்ரீ சக்ரம். ''ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி'' என்று அற்புதமான ராக மாலிகை பாடல் அவள் புகழ் பாடுகிறது. நான் விரும்பி அடிக்கடி பாடும் பாடல். ஸ்ரீ சக்ரராஜ தேரில் ஒன்பது தளம். ஐந்து சக்தியுடையது, மீதி நான்கு சிவனுடையது.

* 69 * கேயசக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவதா -- ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்ரீ சக்ரத்தில் 79 யோகினி சக்திகள் உண்டு. அவர்களை தான் மந்த்ரிணீ என்பது. மந்த்ர சித்தி அளிப்பவர்கள். ஸ்ரீ சக்ரத்தின் ஒன்பது பாகங்கள் நமது உடலை ஒப்பிடுவன. ஆறு சக்ரங்கள் தொடை இரு பாதங்கள் தான் அந்த ஒன்பது. அம்பாள் நமது உடலில் வாசம் செயகிறாள் என்பது உட்பொருள்.

* 70 * கிரிசக்ர - ரதாரூட தண்டநாதா புரஸ்க்ருதா | -- கிரிசக்ர ரதா ரூடா என்பது வாராஹி தேவியின் ரதம். தண்டநாதா என்றும் அவளுக்கு பெயர். சக்ரம் என்பது படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று தொடர்ந்த செயல்களை குறிப்பிடும்.வராஹி தேவி நமது ஆஞ்ஞா சக்ரத்தில் உள்ளவள். அம்பாளுக்கு அடுத்த சக்திகள் வாராஹி, மந்திரிணி என்று மேலே குறிப்பிட்ட யோகினி.அம்பாளின் படைத்தலைவிகள்.

* 71 * ஜ்வாலாமாலிநிகாக்ஷிப்த வஹ்நி ப்ராகாரமத்யகா -- அம்பாளை எங்கே காண்பது? ஜ்வாலா மாலினி என்ற அவளோடு உள்ள சக்தி அம்சம் நிர்மாணித்த பெரிய கோட்டையின் மத்தியில் தான் அம்பாள் இருக்கிறாள் என்கிறது இந்த நாமம்.

இன்னும் நிறைய அறிந்து கொள்வோம்.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...