Tuesday, July 10, 2018

subshitham




ராஜா  பர்த்ருஹரி   --   J.K. SIVAN 
சுபாஷிதம் 
भीमं वनं भवति यस्य पुरं प्रधानं
सर्वो जनस्स्वजनतामुपयान्ति तस्य ।
कृत्स्ना च भूर्भवति सन्निधिरत्नपूर्णा
यस्यास्ति पूर्वसुकृतं विपुलं नरस्य ॥

Bheemam vanam bhavati yasya puram pradhaanam
Sarvo janah swajanataamupayaanti tasya
Kritsnaa cha bhoorbhavati sannidhiratnapoorna
Yasyaasti poorvasukritam vipulam narasya 1.100

இந்த பிறவியில் ஒருவன் கஷ்டமில்லாமல் சுகமாக வாழ்கிறான் என்றால் அவனைப் பார்த்துப்  பொறாமைப் படாதே, பெருமைப் படு. வணங்கு. என்ன புண்ணியங்கள் பண்ணினானோ  பூர்வ ஜென்மத்தில் இப்போது ளசுகப்படுகிறான். சத் கர்மா அவனை தாங்குகிறது.    முள்ளும் கல்லும் நிறைந்த காடு  அழகிய  பூம்பொழில் நகரமாகிறது. எல்லோரும்  நண்பர்களாவே  ஆகிறார்கள்.  என்னை சுற்றியுள்ள உலகம் இன்பகரமானதாக இருக்கிறது. எங்கும் செல்வம் வளமை கொழிக்கிறது. எல்லாம் அவனவன் தேடிபெற்ற  புண்ய பலன்.  பேங்க்ல  பணம் நிறைய சேர்த்தவன் எடுத்து  ஜம்மென்று செலவு பண்ணுகிறான்.

को लाभो गुणिसंगमः किमसुखं प्राज्ञेतरैर्संगतिः
का हानिर्समयच्युतिः निपुणता का धर्मतत्त्वे रतिः ।
कः शूरो विजितेन्द्रियः प्रियतमाकाऽनुव्रता किं धनं
विद्या किं सुखमप्रवासगमनं राज्यं किमाज्ञाफलम् ॥

Ko laabho gunisangamah kimasukham praajnetaraih sangatih
Kaa haanih samayachyutih nipunataa kaa dharmatattve ratih
Kah shooro vijitendriyah priyatamaa kaa’nuvrataa kim dhanam
Vidyaa kim sukhamapravaasagamanam raajyam kimaajnaaphalam 1.102

ஏதடா  உண்மையில் செல்வம்?  சொல்?   எது லாபம்?  நல்லவர்கள் சேர்க்கை. நட்பு.  எது துக்கம், எது நரகம்?எது தாங்கமுடியாத வலி? தீயவர், முட்டாள்களின் தொடர்பு, நட்பு.   எது நஷ்டம்?  நேரத்தை வீணடிப்பது மட்டும் தான்.  எது திறமை,?   தர்ம சிந்தனையை வளர்த்துக் கொள்வது.  எவன் தைர்யவான்? தனது புலன்களை வென்றவன்.  எவள் கணவனுக்கு  பிரியமானவள் ? கணவனின் மனம் கோணாமல் அவனை பின் தொடர்பவள்? (ராஜா  பர்த்ருஹரி சார்.....இங்கே  கொஞ்சம்  நெருடுகிறது.  அது உங்கள் காலம் ...)  எது செல்வம்?  கல்வி.  எது உண்மையில் சந்தோஷம்? வெளிநாடுகளில் இல்லாமல் சொந்த ஊரில் இருப்பது. (ராஜா சார்.  மறுபடியும் உதைக்கிறது.  உங்கள் காலத்தில் அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை.   விசா என்றால் என்ன என்றே உங்களுக்கு தெரியாது.  டாலராவது தெரியுமா.....?) எது ராஜ்யம்? மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. ரக்ஷிப்பது....  (இது இப்போது கனவு சார்)



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...