Tuesday, July 10, 2018

GITANJALI




ரபீந்திரநாத் தாகூர் -- ஜே.கே சிவன்
கீதாஞ்சலி

Early in the day it was whispered that we should sail in a boat, only thou and I, and never a soul in the world would know of this our pilgrimage to no country and to no end.

In that shoreless ocean, at thy silently listening smile my songs would swell in melodies, free as waves, free from all bondage of words.

Is the time not come yet? Are there works still to do? Lo, the evening has come down upon the shore and in the fading light the seabirds come flying to their nests.

Who knows when the chains will be off, and the boat, like the last glimmer of sunset, vanish into the night?

இன்று விடிகாலை ஒரு ரகசியம். நீயும் நானும் மட்டும் ஒரு படகில்.. ஏதோ ஒரு ஆழமான கடலில் மிதந்து போகிறோம்.......ஒரு ஜீவனுக்கும் நமது இந்த ரகசிய ஏற்பாடு தெரியாது. எங்கே போகிறோம் என்று நமக்கே தெரியாது, ஏதோ எல்லையே இல்லாத ஒரு இடத்திற்கு....

நாம் செல்வது கரையே இல்லாத ஒரு கடல்.....நான் ஆனந்தமாக ''இனிமையாக'' என்னால் முடிந்த இனிமை, பாடுகிறேன். நீ மௌனமாக உன் புன்சிரிப்போடு கேளேன். என் ''பிர்கா'' அலை அலையாக, இந்த கடலின் அலைபோல, வார்த்தைகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் பாடுகிறேன்.

ஏன் இன்னும் நேரம் வரவில்லையா? இன்னும் மாளாத வேலை இருக்கிறதா? ஒ! அந்தி நெருங்கி விட்டது. சூரியன் மறையப்போகிறான். ஒளி குறைந்துவிட்டதே என்று பறவைகள் வேகமாக தமது கூடுகளை நோக்கி திரும்புகிறதே.

சங்கிலி எப்போது விலகும். எப்போது படகு புறப்படும், சூரியனின் கடைசி ஒளி இருளில் மறைவது போல் இந்த படகு நீண்ட எல்லையற்ற கடலில் மறையும்?
+
The day was when I did not keep myself in readiness for thee; and entering my heart unbidden even as one of the common crowd, unknown to me, my king, thou didst press the signet of eternity upon many a fleeting moment of my life.

And today when by chance I light upon them and see thy signature, I find they have lain scattered in the dust mixed with the memory of joys and sorrows of my trivial days forgotten.

Thou didst not turn in contempt from my childish play among dust, and the steps that I heard in my playroom are the same that are echoing from star to star.

நீ எப்போது வருவாய் என்று தெரியாதே. நான் தயாராகவில்லையே . அழைக்காமலே வருபவன், சொல்லாமலே வந்து நிற்பவன் நீ. முன் பின் அறியாத ஏதோ வெளியூரான் போல, என் ராஜா, கிருஷ்ணா, நீ என் மாறி மாறி தோன்றும் எண்ணற்ற கணங்களில் உன் அழிவற்ற அன்பின் முத்திரையை என் மீது பதிவிடு. உன் அன்பின் அடையாளத்தை என்மேல் உணரும்போது உன்னை கண் தேடுகிறது. நீ எங்கே இருப்பவன்? எங்கும் பரவி இருப்பவனாயிற்றே. புகழ் பெற்ற மாளிகை, புழுதி மிகுந்த குடிசை ரெண்டுமே ஒன்று தானே உனக்கு. என் சுக துக்க கணங்களில் நான் உழல்பவன் நானே அதையெல்லாம் மறக்கச் செய்பவன் நீ.

நான் குழந்தை, சிறுவன், புழுதியில் புரண்டு விளையாடுபவன். நீ என்னை புறக்கணிக்கமாட்டாய். என்னை நீ நெருங்கி வரும் காலடி சப்தம், ஆகாயத்தில் ஒரு நக்ஷத்ர மண்டலத்திலிருந்து இன்னொன்றுக்கு நீ நகரும் எதிரொலியோ?




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...