Sunday, July 1, 2018

GITANJALI



ரபீந்திரநாத் தாகூர்   --    ஜே.கே சிவன் 
                                      
                                                       கீதாஞ்சலி 
The rain has held back for days and days, my God, in my arid heart. The horizon is fiercely naked---not the thinnest cover of a soft cloud, not the vaguest hint of a distant cool shower.                                                                                                                           
Send thy angry storm, dark with death, if it is thy wish, and with lashes of lightning startle the sky from end to end.
But call back, my lord, call back this pervading silent heat, still and keen and cruel, burning the heart with dire despair.
Let the cloud of grace bend low from above like the tearful look of the mother on the day of the father's wrath.

கிருஷ்ணா,   ஏன் இப்படி செய்துவிட்டாய்?   என்ன ஆயிற்று?  ரொம்ப நாளாக மழையை இங்கே அனுப்பாமல் ஏன் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறாய்?  இங்கே பாலைவனமாக  ஆகிக்கொண்டிருக்கிறதே ஒரு சொட்டு நீர் இல்லாமல், உனக்கு தெரியாதா?   வானத்தில் எங்கே தலையை சுற்றி பார்த்தாலும் ஒரு  பொட்டு  மேகத்தை கூட காணோமே, மேகமே  இல்லாமல்  வானமே நிர்வாணமாக காண்கிறதே.  என்று தான்  ஒரு சொட்டு ஜலம்  பூமியில் விழுமோ? உன்னிடம்  கோபமான கண் சிவந்த  மரணப் புயல்கள் உண்டே,  அவற்றை விரட்டி அனுப்பி மேகங்களை எங்கிருந்தோ கொண்டுவந்து, மின்னல் சாட்டைகளால்  வானத்தை ஒரு இடம் விடாமல் அடித்து பயமுறுத்தி  மழை மேகம் கொண்டுவா.  
அதற்கு முன்னால்  இந்த வறண்ட  சூட்டை இங்கிருந்து அகற்று. திருப்பி வாங்கிக்கொள். அப்பப்பா, மரணமே தேவலை என்கிற அளவில் அது வாட்டுகிறதே. இரக்கமற்றது. கொடிய நெஞ்சம் கொண்டது.  இதயத்தை  தஹிக்கிறது. ஒரு வித வெறுமையான  பிடிப்பில்லாத நிலை.  ஏமாற்றம், ஏக்கம் மட்டுமே அல்லவோ மனதில் நிறைந்திருக்கிறது.

கிருஷ்ணா  உன் கருணை மேகம் மேலேயிருந்து பரந்து  எங்கும் நிறைந்து என் தலை மேல் இடிக்கும் அளவுக்கு தாழ்ந்து வரட்டும். அப்பா காச் மூச் என்று கோபத்தில் கத்தும்போது  அம்மா  கண்களில் ஜலம் தளும்ப  தலையை குனிந்து கொண்டு இருப்பாளே  அது போல்  உன் தயை, கருணை, அன்பு,  என்னை  தாழ்ந்து தலையை தொடும் அளவு நெருங்கட்டும். நான் குனிந்து வணங்குகிறேன். நீயின்றி வேறு யார்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...